கருத்து சொல்லுங்க பாஸ்! - வற்புறுத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!
பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடு
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வணிகம் தடையில்லாமல் நடைபெற என்ன அவசியமோ அந்த காரியங்களை ஆங்கிலேயர் செய்தனர். அதில் சில நல்ல விஷயங்களும் நடந்தன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிப்பு போன்ற மூடநம்பிக்கை சார்ந்த பிற்போக்குதனங்களும் குறைந்தன. அதேநேரம் இந்த செயற்பாடுகள் கூட படித்த இந்தியர்களின் செல்வாக்கு, உழைப்பு காரணமாகவே சட்டமாக்கப்பட்டன.
அதேசமயம் அன்று நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள் பற்றி எந்த வர்த்தக நிறுவனங்களும் கவலைப்படவும் இல்லை. அதுபற்றி கருத்துகளைச் சொல்லவும் இல்லை. சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு காட்சிகள் அனைத்தும் மாறின.
வலைத்தளத்தில் பல்வேறு விளம்பரங்கள் இடம்பெறத்தொடங்கின. இதனை விளம்பரத்துபவர்களுக்கு இன்ஃபுளுயன்சர் என்று பெயர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பணமும் வழங்குகின்றன. இன்று தேசியமயம், வலதுசாரி பாபுலிச கோஷங்கள் உச்சம் பெற்றுவருகின்றன. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அந்தந்த நாட்டு அரசுகளின் நிலைப்பாடு, அல்லது அனைவரும் ஏற்கும்படியான நிலைப்பாடுகளை தங்களின் நிறுவன மதிப்பு கெடாமல் எடுத்து வருகின்றன. முன்பு இப்படி ஒரு நிலையை நாம் பார்த்திருக்க முடியாது. காரணம், சக்ரா கோல்ட் டீ ஒனர் சமூகத்தைப் பற்றி என்ன நினைத்தால் நமக்கென்ன? காசு கொடுத்தால் டஸ்ட் டீ ஒழுங்காக நிறம் மணம் திடம் இருக்கிறதா என்பதைப் பற்றித்தானே கவலைப்படுவோம். ஆனால் இன்று வணிகம் தாண்டி பலவற்றையும் ஒரு தனிநபரிடம் அல்லது வணிக நிறுவனத்திடம் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
ஸோமாட்டோ நிறுவன பணியாளர் முஸ்லீம் என்பதால் அவரிடம் உணவைப் பெறாமல் திருப்பி அனுப்பிய ஒருவர் பற்றிய செய்தியை அறிந்திருப்பீர்கள். அதற்கு ஸோமாட்டோ நாங்கள் சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தொழிலாளர்களையும் பணியமர்த்தி உள்ளோம். இதற்காக சில வாடிக்கையாளர்களை இழந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு என்று சில மதிப்புகள் உள்ளன என்று கூறியுள்ளது.
இதனால் சிலர் ஸோமாட்டோ நிறுவனத்தை கொண்டாடுகின்றனர். சிலர் அதனைத் தூற்றுகின்றனர். உலகெங்கும் வலதுசாரி அரசுகளின் பொருளாதாரம் வீழ்ந்துவருகிறது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கு மறுப்பாக, அந்த அரசுகள் தன் மீதான கோபத்தை வாய்ப்புகளைப் பறித்துக்கொள்வதாக அகதிகள், சிறுபான்மையினரைக் கைகாட்டுவது தொடர்ந்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் இந்த வெறுப்பு அரசியல், இனவெறுப்பு அதிகம் அனல் வீசுவது இந்த காரணத்தினால்தான். அண்மையில் யுகவர்மெண்ட் எடுத்த ஆய்வில் நிறுவனங்கள் பொதுவிஷயங்களில் குறிப்பிட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை மக்கள் எதிர்பார்ப்பதாக முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. நான் ஸோமாட்டோ போன்ற நிறுவனங்கள் அரசியலமைப்பு, தாங்கள் மதிக்கும் கொள்கை சார்ந்த முடிவுகள் எடுப்பதை மதிக்கிறேன் என்கிறார் அர்பன்கிளாப் நிறுவன
துணைத்தலைவர் ராகுல் தியோரா.
அண்மையில் நைக் தன் விளம்பரத்தூதராக அமெரிக்க கால்பந்து வீரர் கோலின் காபர்நிக்கை நியமித்தது. காரணம், ஒரு போட்டியின்போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அந்த இடத்திலே முட்டிபோட்டு அமெரிக்காவில் நிலவும் இனபாகுபாடு குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அதனை நைக் தன் பிராண்டிற்கு பயன்படுத்திக்கொண்டது. அதேசமயம் இவை எப்போதும் நிறுவனங்களுக்கு பிசினஸ் ஊக்கியாக இருக்கும் என்று கூறமுடியாது.
ஜில்லெட்டின் ஆண்களின் பெருமை பேசும் விளம்பரம் அவர்களின் வருமானத்தை சரித்தது. சிறுபான்மையினர் மீதான கும்பல் வன்முறை பற்றி நடிகர் அமீர்கான் கருத்து தெரிவித்த குற்றத்திற்காக ஸ்நாப்டீல் அவருடனான விளம்பர உறவை முறித்துக்கொண்டது. இது 2016 ஆம் ஆண்டு நடந்தது.
நவீன கால இளைஞர்கள் ஏழைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் பற்றி பொதுத்தளத்தில் விவாதிக்க முன்வரவேண்டும். இதுமாதிரி விஷயங்களில் மௌனம் சாதிக்கக்கூடாது என்று கூறுகிறார் வன்முறைக்கு எதிராக கார்வான் இ மொகப்பத் எனும் அமைப்பை நடத்திவரும் ஹர்ஷ் மந்தர்.
நன்றி:டைம்ஸ் ஆஃப் இந்தியா – சோனம் ஜோஸி