தெரிஞ்சுக்கோ! - குப்பைத்தொட்டி






குப்பைத்தொட்டி என்பது நகரங்களுக்கானவை. கிராமங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொட்டி அதனை விற்றுவிடுவார்கள். ஆனால் நகரங்களில் அது சாத்தியமில்லை. காரணம், டன் கணக்கில் குவியும் அதன் வேகம்தான்.மேலும் சென்னையில் நுகரப்படும் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பழவந்தாங்கல் சதுப்புநிலங்களின் மீது கொட்டப்படுகிறது. தற்போது அதனைப் பிரிப்பது தற்போது அரசுகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை 1, 2019 அன்று ஷாங்காய்  நகரில் அரசு, பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான அளவீட்டை  வெளியிட்டுள்ளது. மறுசுழற்சி, சமையலறை கழிவு, ஆபத்தான கழிவு பிற கழிவுகள் என அனைத்திற்கும் தனி குப்பைத்தொட்டியைப் பயன்படுத்த சீன அரசு கோரியுள்ளது. இது எந்தளவு குப்பைகளை மறுசுழற்சி செய்ய உதவும் என்று தெரியவில்லை.

ஷாங்காய் நகரில் ஆண்டுதோறும் உருவாகும் குப்பையின் அளவு 9 மில்லியன் மெட்ரிக் டன்கள்.

நியூயார்க் நகரில் சுகாதாரத்துறை தினசரி சேகரிக்கும் குப்பையின் அளவு 12 ஆயிரம் டன்கள்.

2017-18 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் செயல்பாட்டிலுள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை 1,131.

வயர்களிலான குப்பைத்தொட்டியின் விலை நூறு டாலர்.

2018 ஆம் ஆண்டு வைஃபை வசதிகொண்ட குப்பைத்தொட்டிகள் சந்தைக்கு வந்தன.

ஜப்பானிலுள்ள காமிகாட்சு நகரம் 34 வகையில் குப்பைகளைப் பிரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் குப்பைகளை முடிந்தளவு ஸீரோ அளவுக்கு கொண்டுவந்துவிட திட்டமிட்டுள்ளது ஜப்பான் அரசு.

நன்றி: க்வார்ட்ஸ்