ஊட்டச்சத்துக்குறைவால் இந்தியா தவிப்பது ஏன்? - ஸ்மிருதி இரானி



Malnutrition Above Politics, Children Aren’t Vote Banks: Smriti Irani





நேர்காணல்

ஸ்மிருது இரானி

பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

இந்தியா 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறதே?

பிரதமர் மோடி உருவாக்கிய போஷன் அபியான் திட்டம் மூலம் நாங்கள், ஊட்டச்சத்துக்குறைவை தீர்ப்போம். திட்டம் பற்றிய அறிக்கைகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நிதி ஆயோக்கின் அறிக்கையைப் பின்பற்றி இதனை செய்வோம்.

பிரதமரின் முக்கியமான திட்டம் என்கிறீர்களே?

இந்திய அரசு மட்டும் இதனை செய்ய முடியாது. கூட்டாட்சி முறையில் மாநிலங்களும் இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம்.

இந்தியாவின் ஜிடிபி விழுந்துவிட்டது. கலோரிகளின் அளவும் குறைந்து வருகிறது. குழந்தைகளின் உணவு பற்றி அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லையே?

பிரதமர் மோடி வாக்குவங்கிக்காக வேலை செய்பவரல்ல. புதிய இந்தியா இப்போதுதான் உருவாகிக்கொண்டு இருக்கிறது. பரிக்சா பே சாச்சா என்பதை உருவாக்கியது மோடிதானே? படிக்கும் குழந்தைகளுக்கு உள்ள மன அழுத்தம் பற்றி உணர்ந்த தால்தானே அப்படி திட்டங்களை உருவாக்கி ஆலோசனைகளை வழங்கினார். ஆண், பெண்களைப் பற்றி பேசுபவர் குழந்தைகளை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?

ஊட்டச்சத்துக்குறைவு என்பது நீண்ட நாட்களாக இந்தியாவில் உள்ளது. மேலும் சமூகப்பொருளாதாரப் பிரச்னையாகவும் உள்ளதே?

நாங்கள் இதனை அரசியல் பிரச்னையாக கருதவில்லை. குழந்தைகளின் உணவுக்காக பல்வேறு தனியார் நிறுவனங்களின் நன்கொடைகளைக் கேட்டு வருகிறோம். பல்வேறு மாநிலங்கள் ஒன்றாக இணைந்தால்தான் மாற்றங்கள் சாத்தியம்


நன்றி: அவுட்லுக்