இடுகைகள்

2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2019 டிரெண்ட்ஸ் தொடருமா? பகுதி 2

படம்
நடப்பு ஆண்டில் தொடரும் விஷயங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்று உறுதி கூற முடியாது. 2019 ஆம் ஆண்டு மக்களை வசீகரித்து கவனித்த வைத்த அவர்கள் பின்பற்றிய பேசிய, ரசித்த விஷயங்கள் இவை. புது மெட்ரோ ரயில் மோகம் டிக்கெட் விற்கிறதோ இல்லையோ, மக்கள் ஏறுகிறார்களோ இல்லையோ, மேம்பாலங்களில் மெட்ரோ தன் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தன. சாதாரண ஐந்து ரூபாய் டிரெயின்களை தடாலென நிறுத்தியதால், மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மெட்ரோ ரயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வென்றுவிட்டது.  முதலில் இலவசமாகவும் பின்னர் காசு கொடுத்தும் செல்ல தமிழர்கள் பழகினர். சென்னை, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ கொடி பறந்தது. மனநலம் முக்கியம் இந்த ஆண்டு மனநலம் பற்றி பேசத்தொடங்கி திரியை பற்ற வைத்தது திருமதி தீபிகா படுகோன்தான். பின் அதனை மற்றவர்களும் பின்பற்றி, பிரஷர் ஜாஸ்திங்க என கமெண்டுகளை அள்ளித் தெளித்து அனுதாப வாக்குகளை அள்ளினர். பிட்காயின் பரிதாபம் ஆர்பிஐ, பிட்காயின் யூஸ் பண்றதைப் பார்த்தேன். பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என மிரட்டினாலும் அரசின் பிள

வாவ் சொல்ல வைக்கும் ஆப்ஸ்கள் - 2019

படம்
ஸ்பெக்ட்ரா கேமரா இது ஐபோனுக்கான ஆப். அழுக்கான சூழலிலும் பளிச்சென புகைப்படம் எடுக்க உதவும் ஆப். ட்ரைபாட் இல்லாமல் சிறப்பான ஷேக்கிங் இல்லாத படங்களை எடுக்கலாம். மேலும் எந்த கூட்டத்திலும் உங்களுக்கு தேவையான ஆட்களை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் ஏ.ஐ நுட்ப வசதி இந்த ஆப்பில் உண்டு. அதனால்தான் ஆப்பிள், இந்த ஆப்பிற்கு ஆப் ஆப் தி இயர் என்ற விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது. மூன்று பௌண்டுகள் கொடுத்துத்தான் இதை நீங்கள் வாங்க வேண்டும். அஃபினிட்டி பப்ளிசர் அடோப் இன்டிசைனுக்கு நிகரான வேறு ஆப்களை தேடுகிறீர்களா? உங்களுக்காகத்தான இந்த ஆப் உதவுகிறது. ஏராளமான டூல்கள் உண்டு. உங்களுக்கு புத்தகங்களை வடிவமைப்பதில் ஆர்வம் உண்டா, சந்தேகமே வேண்டாம் உடனே இதனை காசு கொடுத்து வாங்கி பின்னி எடுங்கள். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்பிற்கும் விருது வழங்கி பாராட்டியுள்ளது. விலை - 48 பௌண்டுகள் ஜம்போ இலவச ஆப்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் கிடக்கும் குப்பைகளை நித்ய கர்மவாசியாக சுத்தம் செய்கிறது. தேவையில்லாத விளம்பரங்கள், உங்களை பின்தொடரும் ஆப்களை துடைத்தெறிய ஜம்போ உங்களுக்கு உதவும். புரோ

நம்பிக்கை மனிதர்கள் - நீர், சுகாதாரம், கிராம நலவாழ்வு

படம்
நம்பிக்கை மனிதர்கள் டாக்டர் வினோத் டாரே கழிவறை சுத்தம் ஜீரோ கழிவுகள் கொண்ட கழிவறைகளை நீங்கள் 2006க்கு முன்னர் யோசித்திருக்கிறீர்களா? கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வினோத் டாரே அதன் பனிரெண்டு பேர்  கொண்ட குழு மூலம் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். மத்திய அரசின் மனிதவளத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து  கான்பூர்  ஐஐடியிடம் கழிவற்ற கழிவறை உருவாக்கும் பணியை அளித்தன. வினோத் டாரேவின் சீரிய பணியால் இன்று காஷ்மீர் முதல் கோவை தொடக்க பள்ளி வரை கழிவற்ற கழிவறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கடந்த 2013ஆம் ஆண்டு நீரற்ற சிறுநீர்கழிப்பிடம், கழிவற்ற கழிவறை ஆகியவை புகழ்பெற்றன. இதில் மனிதர்களின் கழிவுகள் அங்குள்ள மண் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதற்கு நீர் தேவையில்லை. “இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு வணிக நிறுவனங்கள் விற்கச்சொல்லி கேட்டனர். ஆனால் நான் இது மக்களுக்குச்சென்று சேரவேண்டும் என்பதால் அதற்கு சம்மதிக்ககவில்லை ” என்கிறார் டாக்டர் வினோத் டாரே. 2 தண்ணீர் காந்தி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் தண்ணீர் காந்தியான அய்யப்ப மசாகி. கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மசாகிக்

காதலுக்காக காத்திருக்கும் பேய்!- பீ மாக் ஹாரர் காமெடி

படம்
பீ மாக் - 2013 தாய்லாந்து இயக்குநர் - பன்ஜோங் பிசாந்தனாகுன் கதை - Nontra Khumvong Banjong Pisanthanakun Chantavit Dhanasevi இசை -  Chatchai Pongpraphaphan Hualampong Riddim ஒளிப்பதிவு - Narupon Sohkkanapituk பேய் கதைதான். ஆனால் ட்விஸ்ட் நீங்கள் பயப்பட அவசியமில்லை என்பதுதான்.  போரில் கலந்துகொண்டு குண்டுபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வீடு திரும்புகிறார்கள் ஐந்து நண்பர்கள். இடையில் நண்பர் ஒருவர், தன் வீட்டில் தங்கிச்செல்லுங்கள் என்கிறார். சரி என அவரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு நடக்கும் பகீர், பகபக சிரிப்பு சம்பவங்கள்தான் படம்.  ஒளிப்பதிவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நாயகனுடன் நடிக்கும் நண்பர்கள் கூட்டத்தின் நடிப்பும், ஏடாகூட வசனங்களும் பயத்திலும் சிரிக்க வைக்கின்றன. நாயகி தேவிகா பேரழகி. அந்த நண்பர் கூட்டத்தில் பேய் என்றாலும் கூட அழகிடா என வழிவதைப் போல.. அவ்வளவு அழகு. நடிக்கவும் செய்கிறார். போதாதா----  போர், போரின் பாதிப்பில் இறப்பு, நீர்நிலை மீது கிராமம், கொண்டாட்டம் என பிரேமில் அனைத்து இடங்களிலும் கலை இயக்கு

நம்பிக்கை மனிதர்கள் - புரட்சியைக் காற்றில் பரப்பும் பாடகன்!

படம்
நம்பிக்கை மனிதர்கள்/ நாயகர்கள் பாடகர் எசல் பத்திரிகையாளன், பாடகன், நடிகன் இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது நடப்பு நிகழ்ச்சிகளை த த்தமது துறை சார்ந்து வெளிப்படுத்தும் திறமை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் அரசியல் பற்றியோ, நாட்டின் நிலை பற்றியோ, ஏழைகளைப் பற்றியோ, பட்டினிச்சாவுகளைப் பற்றியோ எப்படி பேசாமல் இருக்க முடியும். இங்கும் துருக்கியைச் சேர்ந்த பாடகர் அதைத்தான் தன் பாட்டில் செய்தார். செய்துகொண்டிருக்கிறார். ஆனால் தன் நாட்டில் அல்ல; ஜெர்மனியில். என்ன காரணம்? அரசின் சிறை தண்டனைக்கு பயந்துதான். முன்னமே விதித்த ஐந்தாண்டு தண்டனை இவரை பெரியளவு பயமுறுத்தி இருந்தது. பாடல்களில் போதைப்பொருள் மற்றும் செக்ஸ் பற்றி பேசியதுதான் குற்றச்சாட்டாக பதிவானது. ஆனால் உண்மை என்ன என்பது அங்குள்ள மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். துருக்கி சர்வாதிகாரியான எர்டோகனின் குருட்டு ஆட்சி குறித்தும், அதன் வழியாக மக்கள் படும் பாட்டையும் மக்களிடமே சென்று பாடினார் புரட்சிப்பாடகர் எசல். அதுதான் அரசு இவரை தன் ஹிட் லிஸ்டில் சேர்க்க காரணம். ஒரு காலத்தில் 50 டாலர்களைக் கொடுத்து ஸ்பாட்டிஃபை இண

அமானுஷ்யத்தை அள்ளிவழங்கும் தேவமோகினி!- கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்

படம்
தேவமோகினி கோட்டயம் புஷ்பநாத் தமிழில் சிவன் கேரளத்தின் பழமையான கோவிலகம் அது. நம்பூதிரிகள் வாழ்ந்த இடம். பாழ்பட்டு கிடக்கிறது. அதனை சந்திரமோகன் என்பவர் காசுகொடுத்து வாங்குகிறார். பல்வேறு இடங்களிலுள்ள கோவிலக சிலைகளை கொண்டு வந்து வீட்டில் கண்காட்சி போல அடுக்குகிறார். அப்போது அதன் கொடுமையான விளைவுகள் அவருக்கு தெரியவில்லை. ஆனால் பின்னர், தெரியவரும்போது அவற்றைக் காக்கும் பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. முதல் அத்தியாயம் முதலே பரபரப்பு தொடங்கிவிடுகிறது. சந்திரமோகன், அமைதியாக வாழ விரும்புபவர். ஆனால் அங்குள்ள ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு அவர் புகழ்பெறுவது பிடிக்கவில்லை. எனவே, கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பிதழ் வழங்காத அவரை அங்கேயே கொல்ல நினைக்கிறார்கள். அந்த திட்டத்தை எளிமையாக தடுக்கிறாள் அங்கு வசிக்கும் தேவ மோகினி. இவள் மட்டுமல்ல அங்கு வசிப்பது. சந்திரமோகனின் உயிரைப் பறிக்கும் வேகம் கொண்ட பைசாச சக்திகளை மிக எளிதாக விலக்கிக் காக்கிறது அங்குள்ள சில சக்திகள். அவை ஏன் அப்படிச் செய்கின்றன? அதன் பின்னாலுள்ள ரகசியங்கள் என படித்தால் கதை முடிந்துவ