நம்பிக்கை மனிதர்கள் - நீர், சுகாதாரம், கிராம நலவாழ்வு
நம்பிக்கை மனிதர்கள்
டாக்டர் வினோத் டாரே
கழிவறை சுத்தம்
ஜீரோ கழிவுகள் கொண்ட கழிவறைகளை நீங்கள் 2006க்கு முன்னர் யோசித்திருக்கிறீர்களா? கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வினோத் டாரே அதன் பனிரெண்டு பேர் கொண்ட குழு மூலம் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். மத்திய அரசின் மனிதவளத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து கான்பூர் ஐஐடியிடம் கழிவற்ற கழிவறை உருவாக்கும் பணியை அளித்தன. வினோத் டாரேவின் சீரிய பணியால் இன்று காஷ்மீர் முதல் கோவை தொடக்க பள்ளி வரை கழிவற்ற கழிவறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக கடந்த 2013ஆம் ஆண்டு நீரற்ற சிறுநீர்கழிப்பிடம், கழிவற்ற கழிவறை ஆகியவை புகழ்பெற்றன. இதில் மனிதர்களின் கழிவுகள் அங்குள்ள மண் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதற்கு நீர் தேவையில்லை. “இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு வணிக நிறுவனங்கள் விற்கச்சொல்லி கேட்டனர். ஆனால் நான் இது மக்களுக்குச்சென்று சேரவேண்டும் என்பதால் அதற்கு சம்மதிக்ககவில்லை ”
என்கிறார் டாக்டர் வினோத் டாரே.
2
தண்ணீர் காந்தி
கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் தண்ணீர் காந்தியான அய்யப்ப மசாகி.
கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மசாகிக்கு வயது 62. தான் கண்டபிடித்து நீர் சேகரிப்பு முறைகளால் மக்களின் தண்ணீர் பஞ்சம் போக்க முயன்றவர் இவர். இவர் இணைந்து செயல்படும் வாட்டர் லிட்டரசி பவுண்டேஷன் அமைப்பு பதினான்கு மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 4500 இடங்களுக்கு மேல் நீராதாரத்திற்கான பணிகளை செயல்படத்தியுள்ளது இந்த என்ஜிஓ. “கர்நாடகத்தில் பெய்யும் மழையால் கர்நாடகத்திற்கு கிடைக்கும் நீரில் பாதி கடலில் கலந்து வீணாகிறது” என்கிறார் மசாகி.
3
திடக்கழிவு மேலாண்மை
சந்தீப் பட்டேல்
இவரது நெப்ரா எனும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் மும்பை கார்ப்பரேஷனோடு ஒப்பந்தம் செய்துகொண்டு பணியாற்றி வருகிறது. இந்தூர், புனே, ஜாம்நகர், அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து பெறும் கழிவுகளை சந்தீப் பட்டேல் பெற்றுக்கொண்டு அதனை மறுசுழற்சி செய்கிறார். இம்முறையில் தற்போது 110 கோடி வருமானம் பெற்றுவருகிறார். எதிர்காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இவர் குப்பை பொறுக்குபவர்களை பணியமர்த்தி இப்பணிகளை செய்துவருகிறார். குப்பைகளில் 50 சதவீதம் பிளாஸ்டிக், நாற்பது சதவீதம் காகிதமாக உள்ளது. இதர குப்பைகளாக கண்ணாடி, உலோகங்கள், கிழிந்த ஆடைகள் உள்ளன.
4
கழிவறை கட்டுமானம் - ரோனி ஸ்க்ருவாலா
இந்தி திரைப்படத் தயாரிப்பாளரான ரோனி ஸ்குருவாலா, மகாராஷ்டிராவின் தைகத் மாவட்டத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். இவரின் ஸ்வதேஷ் அமைப்பு, கல்வி, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களை இம்மாவட்டத்தில் செய்து வருகிறது.
300 பணியார்களைக் கொண்ட இந்த தன்னார்வ அமைப்பு ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களையும் தன்பால் ஈர்த்துள்ளது. இவர்களின் உழைப்பால் அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களின் கல்வி இடைநிற்றல் அளவு குறைந்துள்ளது. குடிநீர் மற்றும் சுகாதாரம் விஷயங்களில் இந்த அமைப்பின் பணி போற்றத்தக்கது.
5
சிறுதுளி அமைப்பு – வனிதா மோகன்
2003ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் தூய்மைக்காகப் பாடுபட்டு வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் நீர்நிலைகளை தூய்மை செய்து மீட்கும் பணிகளைச் செய்து வருகிறது. 27 ஏரிகளை தூய்மை செய்து மீட்டுள்ளது. இதில் 7மில்லியன் க்யூபிக் லிட்டர் நீரைச்சேமிக்க முடியும். 700 மழைநீர் சேகரிப்பு ஆதாரங்களை உருவாக்கியுள்ளது. நொய்யல் ஆற்றின் தூய்மையை மீட்பதற்கான கள ஆராய்ச்சிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.
நன்றி - இந்தியா டுடே