ஊட்டச்சத்துப் பற்றாக்குறை! - இந்தியா செய்ய வேண்டியது என்ன?




Good Food Lunch GIF
giphy.com

ஊட்டச்சத்து பற்றாக்குறை!

இந்தியாவில் தொற்றாநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது குழந்தைகள், இளம் வயதினர்களில் பத்து வயது முதல் பத்தொன்பது வயது கொண்டவர்களும் தொற்றாநோய்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு முடிவுகள் (CNNS) கூறுகின்றன. இந்த ஆய்வு, 2016 முதல் 2018 வரையில் நடந்த நுண்ணூட்டச்சத்து ஆய்வாகும்.

இதன் விளைவாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பாக விரிவாக செய்த ஆய்வில், குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தொற்றாநோய்களின் பாதிப்பு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேரும்,  பள்ளி செல்லும் சிறுவர்களில் 22 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மக்கள்தொகை அதிகம் கொண்ட பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஊட்டச்சத்து பாதிப்பு குறைவாக காணப்பட்டது.

 குழந்தைகளை பெருமளவு தாக்கும் தொற்றா நோய்களாக ரத்தசோகை, இரும்புச்சத்து பற்றாக்குறை, உடல் எடை குறைவு, சிறுநீரகப் பிரச்னை ஆகியவை உள்ளன. இவை மறைமுகமாக நீரிழிவு நோயை உருவாக்குபவை என்பதால் அரசு தீவிரமாக செயற்பட்டு குழந்தைகளின் நலன் காக்கும் முயற்சிகளைச் செய்யவேண்டும்.
நன்றி - ET