நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது. 1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர். ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு. 2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்ட...