இடுகைகள்

தமிழ்மொழி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் பரவும் தமிழ்மொழி!

படம்
சீனாவில் தமிழ் முழக்கம்!  சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள BFSU எனும் கல்வி நிறுவனத்தில் இந்தி, வங்காள மொழியோடு புதிதாக தமிழ் மொழியையும் கற்றுத்தந்து வருகின்றனர். பத்து மாணவர்கள் கொண்ட பல்கலைக்கழக வகுப்பறையில் இவ்வாண்டு புதிய மொழியாக அறிமுகமான தமிழ்மொழியை, கற்பித்து வருகின்றனர். ”தமிழ்மொழி கற்க சிரமமாக இருந்தாலும் கற்க ஆர்வமாக உள்ளேன்” என்கிறார் மாணவி ஃபுபெய் லின். நான்கு ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங்களை படிப்பவர்கள் ஓராண்டு தமிழ்நாட்டிற்கு விசிட் செய்யும் சுற்றுலாவும் இதில் உள்ளடக்கம். “மூன்றாம் ஆண்டில் தமிழ்நாட்டு சுற்றுலா தொடங்கும். தமிழில் பேசவும் எழுதவும் கற்றிருப்பது இப்பயணத்தில் முக்கியம்” என்கிறார் ஆசிரியர் ஈஸ்வரி(ஸூ ஷின்).   மொழிப்பாடத்துடன் பொருளாதாரம், தகவல்தொடர்பு, சட்டம், சமூகவியல் ஆகிய பாடங்களை துணையாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அமெரிக்காவின் டல்லாஸைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் டி.ஏ.வெற்றிச்செல்வனின் தமிழ் மொழி, கலாசார அறிமுக வீடியோவுடன் தமிழ்வகுப்புகள் தொடங்குகின்றன. “இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் வேலைவாய்ப்புகளுக்கு பிரச்னையில்லை. மாணவர்கள் தமிழ் குறி