நடைமுறையில் அகிம்சை இந்துக்களின் அகிம்சை முறை எனும் கருத்தில் வெளிநாட்டினர் எளிதாக ஏமாந்துபோய்விடுகிறார்கள். உலகிலுள்ள கொடூரமான வன்முறை கொண்ட சமூகம் இந்துக்கள்தான். இவர்கள்தான் அகிம்சையை உடைத்து எறிபவர்களாக இருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வது, காயப்படுத்துவது தவறு, அதை செய்யக்கூடாது என்று தொடக்க கால உபநிஷத்தில் கூறப்படவில்லை. விலங்குகளை காயப்படுத்தக்கூடாது என பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கூறுகிறார்கள். ஆனால், அப்படி கூறுவதன் அர்த்தம் அந்த செயலை எதிர்ப்பதால் அல்ல. அவற்றை தேவையில்லை என்று கருதும் மனப்பான்மையால் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஆல்பெர்ட் ஸ்வெய்ட்சர் கூறினார். இந்துமதம், சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என கூறுவது கருப்பு பொய் ஆகும். இந்துக்களின் சகிப்பற்ற தன்மையே தீண்டாமையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வரலாற்று ரீதியான ஆவணங்களில் இந்து மன்னர்கள், பௌத்தர்களை, சமணர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று உயர்சாதி இந்துவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியருமான ரோமிலா தாப்பர் கூறினார். வரலாற்று அடிப்படையில், அகிம்சை, சகிப்புத்...