தீண்டத்தகாதவர்கள் பிறப்பும், வாழ்வும், இறப்பும் என்றும் மாறாதவை!
நடைமுறையில் அகிம்சை
இந்துக்களின் அகிம்சை முறை எனும் கருத்தில் வெளிநாட்டினர் எளிதாக ஏமாந்துபோய்விடுகிறார்கள். உலகிலுள்ள கொடூரமான வன்முறை கொண்ட சமூகம் இந்துக்கள்தான். இவர்கள்தான் அகிம்சையை உடைத்து எறிபவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு உயிரைக் கொல்வது, காயப்படுத்துவது தவறு, அதை செய்யக்கூடாது என்று தொடக்க கால உபநிஷத்தில் கூறப்படவில்லை. விலங்குகளை காயப்படுத்தக்கூடாது என பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கூறுகிறார்கள். ஆனால், அப்படி கூறுவதன் அர்த்தம் அந்த செயலை எதிர்ப்பதால் அல்ல. அவற்றை தேவையில்லை என்று கருதும் மனப்பான்மையால் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஆல்பெர்ட் ஸ்வெய்ட்சர் கூறினார்.
இந்துமதம், சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என கூறுவது கருப்பு பொய் ஆகும். இந்துக்களின் சகிப்பற்ற தன்மையே தீண்டாமையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வரலாற்று ரீதியான ஆவணங்களில் இந்து மன்னர்கள், பௌத்தர்களை, சமணர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று உயர்சாதி இந்துவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியருமான ரோமிலா தாப்பர் கூறினார்.
வரலாற்று அடிப்படையில், அகிம்சை, சகிப்புத்தன்மை என்பது இந்து பண்பாட்டில் இருந்தது கிடையாது. சீக்கியர்கள், முஸ்லீம்கள், தீண்டத்தகாதவர்கள் ஆகியோருக்கு எதிராக உடல்ரீதியான நேரடியான தாக்குதல்கள், படுகொலைகள், மரண தண்டனைகள் ஆகியவற்றை இந்துகள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். அவற்றை நாம் நூல்களில் வாசித்து அறிய முடியும்.
அகிம்சையின் நிலம் என்று பிரசாரம் செய்யப்படும் நாட்டில் தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவம் கொண்ட நாடுகளில் சமூக ரீதியாக தாழ்ந்த மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். ஆனால், காந்தியின் இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
ரோமர்களுக்கு அடிமைகள், ஸ்பார்ட்டன்களுக்கு ஹெலோட், ஆங்கிலேயர்களுக்கு விலெய்ன், அமெரிக்கர்களுக்கு நீக்ரோ, ஜெர்மன்களுக்கு யூதர்கள், அதேபோல இந்துக்களுக்கு தீண்டத்தகாதவர்கள். மேற்சொன்ன மக்கள் யாருக்கும் தீண்டத்தகாதவர்கள் போல மோசமான விதி அமையவில்லை. இன்று அடிமைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்துமதம் இருப்பது எப்படி உண்மையோ, அதைப்போலவே தீண்டாமையும் அதன் வழியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. யூதர்களுக்கான துன்பத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டனர். தீண்டத்தகாதவர்களின் நிலை அவர்களை விட மோசமாக உள்ளது. இந்துமதத்தினர், இரக்கமில்லாத வகையில், கணக்குப்போட்டு தீண்டத்தகாதவர்களை சித்திரவதை செய்கிறார்கள். இன அழிப்பை எதிர்கொண்ட யூதர்களுக்கு வளர்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தீண்டத்தகாதவர்களுக்கு வளருவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. சமூகத்திலுள்ள யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இதை சொன்னவர், நவீன இந்தியாவின் புரட்சிகர ஆளுமையான டாக்டர் அம்பேத்கர்.
1943ஆம் ஆண்டு அம்பேத்கர், தனது ஆய்வு பற்றிய கருத்தை வெளியிட்டார். இஸ்ரேல், உருவாக்கப்பட்டு யூதர்களின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. அமெரிக்க மக்கள்தொகையில் கருப்பினத்தவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம். அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள அறிக்கை ஒன்றை 1963ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுதொடர்பாக கடும் வன்முறை 1967ஆம் ஆண்டு வெடித்தது. கருப்பினத்தவர்களின் ஆற்றல், அங்குள்ள வெள்ளையர்களை அச்சுறுத்தியது. அமெரிக்க சமூகம், செல்வத்தைப் பெற உலகெங்கும் உள்ள திறமைகளை அங்கீகரிக்க கூடிய மனம் கொண்டது. அவர்கள் கருப்பினத்தவராக இருந்தாலும் கூட திறமைகளை அங்கீகரிக்க தலைப்பட்டது. லாபத்தை சம்பாதிக்க வேறுவழியின்றி நிறவெறியை தள்ளிவைக்கும் நிலைமைக்கு முதலாளித்துவ சமூகம் தள்ளப்பட்டது. ஆனால் அதேபோன்ற நிலைமை இந்தியாவில் இல்லை. இங்கு திறமைகள், மதிப்பெண்கள் படுகொலை செய்யப்படுகின்றன. நிறைய திறமைகள் உருவானாலும் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை. சாதிதான் இங்கு முதன்மையானது. மதிப்பெண் என்பதை பார்ப்பன சாதியில் மட்டும்தான் பார்க்கிறார்கள், தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர்கள் முதலில் அகிம்சையை கடைபிடித்தாலும் சார்ப்வில்லே படுகொலைக்கு பிறகு ஆயுதப்போராட்டங்களுக்கு மாறினர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கருப்பினத்தவர்களின் போராட்டங்களை உலகம் பார்க்குமாறு செய்தது.
பாலஸ்தீனியர்களும் தங்கள் பிரச்னையை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றனர். லெபனான் நாடும் 1982ஆம் ஆண்டு இதேபோல செய்து உலகின் கருணையைப் பெற முயன்றது. சர்வதேச தேவாலய கவுன்சில், ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் பிரச்னைகளை ஆராய குழுவை அனுப்பியது. கிறித்தவர்கள், மாவோரிஸ், புராகுஸ், கொரியர்கள், இலங்கை தமிழர்கள் என பல பிரச்னைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களும் கூட இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்கள் விவகாரத்தை பொருட்படுத்தவில்லை. இந்தியாவில் உள்ள கிறித்தவ தேவாலயங்கள் அழைத்தால் மட்டுமே அங்கு வரமுடியும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்திய தேவாலயங்களோடு பல்வேறு சாதிகளாக பிரிந்து கிடக்கின்றன. அமெரிக்க கருப்பினத்தவரை விட தீண்டத்தகாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களின் வேதனைக்குரல் வெளியே கேட்கவில்லை.
ஐநா சபை, தென்னாப்பிரிக்க கருப்பினத்தவர், பாலஸ்தீனர்கள், பிற இனக்குழுக்கள் மீதான மனித உரிமை மீறல்களை விசாரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்களைப் பற்றி கவலையே படவில்லை. இதில் உலகப்புகழ்பெற்ற அமைப்புகள் பற்றி புகார்களை கூறுவது நோக்கமல்ல. தீண்டத்தகாதவர்களைப் பற்றி பொருட்படுத்தாத்து ஏன் என்பதில் மர்மம் நீடித்து வருகிறது. தீண்டத்தகாதவர்கள் யார் கண்களுக்கும் தெரிவதில்லை, யோசிக்கவும் தேவையில்லாத மக்களாக இருக்கிறார்கள்.
தீண்டத்தகாதவர்களுக்கு இந்தியாவில் பறையர், ஆதி சூத்திரர், அவர்னா, ஆன்ட்யாஜா, நாமசூத்திரர் என நிறைய பெயர்கள் உண்டு. அவர்களின் தொடுதல், நிழல், குரல் கூட இந்துகளால் மாசுபடுத்தப்பட்டதாக உள்ளது. அவர்கள் குறிப்பிட்ட விலங்குகளை வளர்க்க கூடாது. குறிப்பிட்ட உலோகங்களை மட்டுமே பயன்படுத்தி நகைகளை செய்யவேண்டும். குறிப்பிட்ட உடைகளை உடுத்தவேண்டும். குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும்.கருப்பான, இருண்ட, சுத்தமில்லாத கிராமத்தின் வெளிப்புற பகுதிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். தீண்டத்தகாதவர்களின் உடைகளை உடுத்துவதிலும் கட்டுப்பாடுகள் உண்டு.
இந்துக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறுகளை பயன்படுத்தக்கூடாது என்பதால் அழுக்கான நீரை தேடி அருந்தவேண்டியுள்ளது. இந்துகள் படிக்கும் பள்ளிகளில் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகளை சேர்க்க முடியாது. இந்துக்களின் கோவில்களில் அம்மக்களுக்கு அனுமதி கிடையாது. நாவிதர், சலவை செய்பவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு வேலை செய்வதில்லை. தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் இந்துகள், அவர்கள் மதத்தினரால் விலங்குகளை விட இழிவாக நடத்தப்படுகிறார்கள். சிறுநகரங்கள், கிராமங்களிலும் தீண்டாமை இப்படித்தான் உள்ளது.
கல்வி அறிவு இல்லாதவர்களாக தீண்டத்தகாதவர்கள் இருந்தால் காவல்துறை, ராணுவத்தில் அவர்களுக்கு எந்தக்கதவும் திறப்பதில்லை. சாதி மேலாதிக்க முறையில் அதற்கேற்ப வேலைகளை செய்யவேண்டும். சாலைகளை தூய்மை செய்வது, மலம் அள்ளுவது, காலணியை தைப்பது, விலங்குகளின் தோலை உரிப்பது, பதப்படுத்துவது ஆகிய வேலைகளை செய்கிறார்கள். ஒருவரின் நிலத்தில் தங்கியிருந்தால், கிராமத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும். இதற்காக ஊரார் உணவு தானியங்களை வழங்குகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் பிறக்கும்போதே அப்படித்தான் பிறக்கிறார்கள். அவர்கள் வாழ்வதும், இறப்பதும் அந்த எல்லையிலேயே வரம்பை மீறாமல் நடைபெறுகிறது. அவர்களின் நிழல் கூட மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மேற்சொன்ன வாதங்களை அரசின் ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக