அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன?

அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன?

ஒரு குழந்தையை தாதி ஒருவர் வளர்க்கிறார் என்றால், அக்குழந்தைக்கு பெற்ற தாயை விட தாதி மீது மாறாத ஈர்ப்பு, பிணைப்பு உருவாகும். இதை உளவியல் பள்ளிகளில் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். தொடக்க காலத்தில் இக்கொள்கையை ஏற்கவில்லை. தொடர்பு கொள்கை, ஒருவரின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கொள்கையை உளவியலாளர் ஜான் பௌல்பை உருவாக்கினார். இதுதொடர்பாக அட்டாச்மென்ட் அண்ட் லாஸ் என்ற நூலை எழுதினார். இதை விரிவாக்கியவர் மேரி அன்ஸ்வொர்த்.

ஜான் பௌல்பையின் தொடர்பு கொள்கையை விளக்கி கூற முடியுமா?

ஒரு குழந்தைக்கு தாயின் பாதுகாப்பு தொடக்க ஆண்டுகளில் தேவை. குழந்தை பயப்படும்போது, தாயிடமிருந்து பிரிக்கப்படும்போது பாதுகாப்பு உணர்வை இழக்கிறது. உடனே அழுது தாயின் அணைப்பை கதகதப்பை உணர துடிக்கிறது. இந்த சூழலில் தாய் இல்லை என்றால் குழந்தையின் மனநிலை சோகத்திற்குள்ளாகிறது. மன அழுத்தம் உருவாகிறது.
மூன்று மாதம் தொடங்கி, ஓராண்டு வரை பாதுகாப்பு தொடர்பான உணர்வு தீவிரமாக இயங்குகிறது.

எட்வர்ட் ஓ வில்சன் யார்?

சோசியோபயாலஜி துறையை உருவாக்கிய தந்தை என புகழப்படுகிறார். 1956ஆம் ஆண்டு முதலாக ஹார்வர்டில் பூச்சி இயல் துறை பேராசிரியராக இருக்கிறார். விலங்குகளின் சமூக பழக்கம் பற்றிய ஆராய்ச்சியை செய்து வந்தார். 1975ஆம் ஆண்டு சோசியோபயாலஜி தி நியூ சின்தெசிஸ் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். இயற்கை தேர்வு அடிப்படையில் குணங்களுக்கு மரபணுக்களே முக்கிய காரணம் என வாதிட்டார். சூழல், கலாசாரம் ஆகியவற்றை புறக்கணித்தார்.

வலிமையுள்ளதே எஞ்சும் என்பதற்கு என்ன அர்த்தம்?

சில மீன் இனங்களில் உள்ள ஆண் மீன், பெண் மீன் போல வேடமிட்டு ஏமாற்றி வேறொரு ஆண் மீனின் இடத்திற்குள் நுழைந்து பெண் மீன்களோடு உறவு கொள்கிறது. இங்கு ஒத்துழைப்பும் புத்திசாலித்தனமுமே வெளிப்படுகிறது. இதோடு ஒப்பிடும்போது வலிமையுள்ளதே எஞ்சும் என்பது போட்டி, ஆவேசம் ஆகிய உணர்வுகளை மட்டுமே குறிப்பது இல்லை என்று தெரிகிறது. ஆதிக்கம் செலுத்துவது என்பது பரிணாம வளர்ச்சியின் ஒருபகுதி.

சோசியல் டார்வினிசம் என்றால் என்ன?

உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் கொள்கை சமூக பாகுபாடுகள், இனவெறியை ஊக்குவிப்பதல்ல. ஆனால், சிலர் அதை தங்களுடைய அநீதியான நடத்தையை நிரூபணம் செய்ய பயன்படுத்திக்கொள்கிறார்கள். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் டார்வினின் கொள்கையை தவறாக கையாண்ட குழுவைக் குறிப்பிடுகிறது. தொழில்மயமாக்கல் காலத்தில் அமெரிக்காவில் ஏகப்பட்ட அகதிகள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் நகர ஏழைகளாக மாறினர். அந்த சூழலின் குற்றவுணர்ச்சியில் இருந்து தப்ப அமெரிக்காவில் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினர், ஐரோப்பிய பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களே வலிமையாக இருக்க முடியும் என டார்வின் கோட்பாட்டை பயன்படுத்தி பேசினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!