விலங்குகளின் வயதை மனிதர்களோடு எப்படி ஒப்பிடுவது?

 


 

 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

ஆபத்தான நாய் இனங்கள் எவை?
பிட்புல், ராட்வெய்லர், ஜெர்மன் ஷெப்பர்ட் என்பவை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. இந்த வகை நாய்களை வளர்க்கும் முன்னர் அவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். நாய்களுக்கு பயிற்சியும் முக்கியம். உங்கள் மாநிலம், நாட்டில் எந்த நாய் இனங்கள் வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என அரசு விதிகளை உருவாக்கியிருக்கும். அதை பின்பற்றினால் எப்பிரச்னையும் எழாது.

நாய்கள் ஊளையிடுவது எதற்காக?

அதனுடைய இடத்தைப் பிற நாய்களுக்கு தெரிவிப்பதற்காக. ஊளையிடுதலை நன்றாக கவனித்தால் ஆம்புலன்சின் சைரன் போலவே ஒலிக்கும்.

மர்ஜோரி என்ற நாயின் பங்களிப்பு என்ன?
மாங்கெரல் இன நாயான மர்ஜோரிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு இன்சுலின் செலுத்தி உயிரைக் காத்தனர். மருத்துவத்துறையில் இதுபற்றி மருத்துவர்கள் ஆராய மர்ஜோரி உதவியது.

குரைக்காத நாய் இனம் எது?

பசென்ஜி என்ற நாய் இனம் குரைப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழமையான நாய் இனம்.

விலங்குகளின் வயது, மனிதர்களின் வயது எப்படி ஓப்பீடு செய்வது?

நாய்களுக்கு ஒரு வயது என்றால் அது மனிதர்களின் பதினைந்து ஆண்டுகளுக்கு சமம். இரண்டு வயது என்றால் இருபத்து நான்கு, அடுத்துவரும் வயதை நான்கால் பெருக்கிக்கொள்ளுங்கள். நாய் பொதுவாக பதினைந்து ஆண்டுகள் வாழ்கிறது. பூனைக்கு ஒரு வயது என்றால் மனிதனின் வாழ்நாளில் இருபது ஆண்டுகளுக்கு சமம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!