இந்து என்பதன் அர்த்தம் அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பது!

 




 

இந்து மத அதிசய கொள்கை - ஒற்றுமை அல்ல பிரிவினையை ஊக்குவிக்கிறது!

வெளிநாட்டிலுள்ள தோழர்களுக்கு, இந்தியா ஏன் இப்படி இருக்கிறது என்று மனதில் கேள்வி எழலாம். எதனால் இப்படி வினோதமாக நடந்துகொள்கிறார்கள், எதனால் இந்த நாடு அழிந்துகொண்டே வருகிறது என பல்வேறு கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்து மதத்தில் பதில் இருக்கிறது இந்து மனம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்துமதம் ஒற்றுமையை விட பிரிவினையை உருவாக்குகிறது. இந்து என்பதன் அர்த்தம், ஒன்றாக கலப்பது அல்ல, அனைத்தையும் தனியாக பிரிப்பது. அதன் முக்கியமான கொள்கையே பிரிப்பதுதான். பிரிவினைக்கு உதவுவதுதான் சாதி, தீண்டாமை ஆகியவை. பிரிவினையை தீவிரப்படுத்த தீண்டாமை உதவுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழு மக்களையும் உள்ளுக்குள்ளேயே நாம் பிரித்து வைத்துவிட முடியும்.

இந்து இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அப்படி இருந்ததும் இல்லை. இனிமேலும் ஒரே நாடாக இருக்கவும் முடியாது. சாதி அல்லது அதன் துணைப்பிரிவு என்பது தனிப்பட்ட நாடாக மாறுகிறது. தேசியவாதிகளின் சிறை என்று கூட கூறலாம். மொழி மக்களை பிரிக்கிறது. இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் கம்பி வேலியால் தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.

ஜனநாயகம், பொதுவுடைமை, மதச்சார்பின்மை என்பதெல்லாம் இந்திய மண்ணுக்கு அந்நியமான சொற்கள். பிற நாடுகளில் வானிலை என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால், இந்தியாவில் மனிதர்களும் அவர்களின் செயல்பாடும் அப்படி கணிக்க முடியாததாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சாதியும், பிறருக்கு புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

கிறித்தவம், யூதம், இஸ்லாம் ஆகிய மதங்களைப் போல இந்து மதத்தை நன்மை அல்லது தீமை என்று பிரித்து கூறிவிடமுடியாது. அதில் உண்மை, சமூக சேவை, அறத்தின் அடிப்படையிலான தைரியம் என்பதற்கு குறைந்த இடமே உள்ளது. அனைத்து நாடுகளிலும் அரசியல் என்பது வாழ்க்கையாக உள்ளது. இந்தியாவில் வணிகமாக மாறிவிட்டது என மூன்று ஆண்டு ஆய்வுக்குப் பிறகு பிரிட்டிஷ் கமிஷன் கூறியது. இதைப்பற்றி செய்தியை இந்தியன் எக்ஸ்பிரசில் டிவி பரசுராம் என்ற பார்ப்பனர் எழுதினார்.  

வெளிநாட்டு சிந்தனையாளர்கள் பலருக்கும், இந்தியாவின் ஏற்பட்டுள்ள ஊழல், வறுமை, வேறு வகையான நோய்கள் அனைத்துக்கும் காரணம் இந்துமதம் என புரிந்துகொண்டிருப்பார்கள். சாதி ஒழிப்பைப் பொறுத்தவரை புனிதர்களின் போராட்டம் சமூகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர்களது செயல்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களை, வர்க்கத்தினரை இன்னும் சிக்கலில் தள்ளுகிறது. இதுவே, பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டோரை அமைதியாக்க காரணத்தை தருகிறது. அதோடு பார்ப்பனர்களை புனிதர்களாக மாற்றுகிறது என அம்பேத்கர் கூறினார்.

தீண்டத்தகாதவர்கள் தங்களின் பிறப்பு காரணமாக விதியை, வறுமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமை நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. அப்படி அந்நிலையை ஏற்பது தவறானது. இரட்டை நிலைப்பாடு, இரட்டை சிந்தனைமுறை என்பதை இந்துவின் மனம் அடிப்படையிலேயே தவறானது என உணரமறுக்கிறது என ஸ்டேட்ஸ்மேன் நாளிதழ் ஆசிரியர் கூறினார்.

இந்த வகையில், இந்தியா உயிரோடு இருக்கவேண்டுமெனில் இந்துமதம் உறுதியாக இறந்தாக வேண்டும்.


மூலம்
தலித் தி பிளாக் அன்டச்சபிள்ஸ் ஆப் இந்தியா - விடி ராஜசேகர், யூசுப் நைம் கிலை








 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!