யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள்
யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள் இன்றைய காலத்துக்கு இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசு நிறுவனங்களும் நேர்மையாக இயங்குவதில்லை. அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் நினைப்பதில்லை. அந்தளவு சட்டம், விதிமுறை, நெறிகள் என அனைத்தும் காவி நிறத்தால் மூடப்பட்டு வருகிறது. வலிமை உள்ளவர் அதாவது, அதிகாரம், பணம் கொண்டவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை ஆற்றல் இல்லாத ஏழை எளியர் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பதே சொல்லாமல் சொல்லும் பாடமாக உள்ளது. அந்த வகையில் இந்திய ஒன்றிய வங்கியின் கதை அமைகிறது. இந்த வங்கி வடக்கு நாட்டிலுள்ளது. அங்கு நிறைய கிளைகளைக் கொண்டுள்ளது போல. இரண்டு காந்தங்களை எதிரெதிரே பிடித்தது போல லோகோ அமைந்திருக்கும். அதன் அர்த்தம் தொடக்கத்தில் புரியவில்லை. பின்னே அதில் கணக்கு வைத்துள்ள மக்களின் பணத்தை இழுத்து பிடித்து கவர்ந்து ஈர்க்கத்தான் என பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது. தொடக்கத்தில் எனக்கு சம்பள கணக்கை, பச்சை நிறம் கொண்ட பெருநிறுவன வங்கி என்ற வங்கியில் தொடங்கி கொடுத்தனர். அந்த வங்கிக்கு பெரியளவு ஏடிஎம் வசதிகளோ அல்லது பெரிய புகழோ, பெயரோ எதுவும...