தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்
தடய அறிவியல் பரிசோதனை இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை... வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள். கைரேகை, டிஎன்...