இடுகைகள்

வானியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்களைக் கொண்ட நூல்! - அறிவியலே உலகு- அன்பரசு சண்முகம்

படம்
  இந்த நூலில் இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் உள்ளன. கணிதம், இயற்பியல்,வானியல், செயற்கை நுண்ணறிவு, உளவியல் சார்ந்த துறை வல்லுநர்கள் தங்களது ஆராய்ச்சி பற்றி பேசியுள்ளனர்.  இந்த நூல் எழுதப்பட முன்மாதிரி பாரதி புத்தகாலய ஆசிரியர் இரா. நடராசன் ஆவார். அவரது நேர்காணல் ஒன்றை பாரதி  புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் படித்தேன். அதற்குப்பிறகுதான் அறிவியல் நேர்காணல்களை எழுதலாம் என்ற எண்ணம் மனத்தில் வலுப்பட்டது. அப்படி உருவானதுதான் இந்த நூல்.  நேர்காணலின் இறுதியில் மூலக்கட்டுரையை படிப்பதற்கான க்யூஆர் கோடு உள்ளது. எனவே, படிக்கும் வாசகர்கள் அதனைப் பயன்படுத்தி மூலக்கட்டுரையை வாசித்து அறிவியலாளர்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.  மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் எந்தெந்த வலைத்தளங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன என்ற தகவலும் இறுதிப்பக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலை வாசிப்பவர்களுக்கு அறிவியல் துறையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் வரவேண்டுமென்பதே இலக்கு. வாசியுங்கள் நன்றி! https://www.amazon.in/s?k=ariviyalae+ulagu&i=digital-text&ref=nb_sb_noss அன்பரசு சண்முகம்

டாப் 5 வானியல் அமைப்புகள்

படம்
  டாப் 5 வானியல் அமைப்புகள் ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா (Jyotirvidya Parisanstha (JVP)) –  ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா, மகாராஷ்டிராவின்  புனேவில் அமைந்துள்ள  அமைப்பு. 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிசன்ஸ்தா, வானியலை மக்களிடையே பிரசாரம் செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது. http://jvp.org.in/  அஸ்ட்ரானாமிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronomical Society of India (ASI) ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானியல் ஆர்வலர்களுக்கான அமைப்பு. நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டத்தில் வானியலின் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் விவாதிக்கப்படுகின்றன.  TIFR, IISER, IISc, IIT, ISRO, PRL , IIAP உள்ளிட்ட அரசு அமைப்புகளில் பணிபுரியும் ஆய்வாளர்களும் வானியல் சொசைட்டியில் முக்கியமான அங்கம்.  அசோஷியேசன் ஆஃப் பெங்களூரு அமெச்சூர் அஸ்ட்ரானமர்ஸ் (ABAA)  பெங்களூருவைச்  சேர்ந்த இந்த அமைப்பு, 1976 ஆம் ஆண்டு உருவானது. இந்த அமைப்பு, தொலைநோக்கி குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. வான் இயற்பியலில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களின் சங்கம் இது. வாரம்தோறும் ஞாயிறு அன்று சந்

செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள்

படம்
    ராபர்ட் ஹூக் செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள் ராபர்ட் ஹூக் 1635-1703   கட்டுமானம், பழங்காலவியல், வானியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி சாதனை படைத்தவர். இவர் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர். இவர் ஐசக் நியூட்டனின் கருத்துகளில் வேறுபாடு கொண்டவர். ஆன்டனி வான் லியூவென்ஹாக் 1632-1723 டச்சு நாட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, கூடவே ஆராய்ச்சியாளரும் கூட. கூடைகளை தயாரிப்பவரின் மகனாக இருந்தாலும்  ஆராய்ச்சி செய்யும் திறனால் நுண்ணுயிரிகளை காணும் நுண்ணோக்கிகளை உருவாக்கினார். ஒற்றை செல் உயிரிகளை அடையாளம் கண்டார். தியோடர் ஸ்வான் 1810-1882 ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர். நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தார். நரம்பு மண்டலம், வளர்சிதை மாற்றம், செரிமானம் பற்றிய கண்டுபிடிப்புகளை செய்தார். பின்னாளில் இறையியலின் மீது கவனம் செலுத்தினார். கமில்லோ கோல்ஜி 1843-1926 இத்தாலிய மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். நரம்பு மண்டலம் பற்றி ஆராய்ச்சி செய்தவர் பின்னர் அப்படியே மலேரியா ஆராய்ச்சிகளுக்கு வந்து சேர்ந்தார். இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு தான் பிறந்த

ரேடியோ அலைகளைப் பற்றி அறிய புதிய நூல்!

படம்
விண்வெளியில் உள்ள விஷயங்களை கண்டறிய நம் வாழ்நாள் போதாது. காரணம் அத்தனை மர்மங்களை நம் தலைக்கு மேலுள்ள உலகம் கொண்டுள்ளது. இந்த நூல் ரேடியோ அலைகளின் மூலம் நாம் அறிந்துள்ள விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. ரேடியோ அலைகளை எப்படி நாம் பெறுகிறோம், அதற்கான ஆன்டெனாக்கள், அதன் சிக்னல்கள் என நூல் விரிவாக ஏராளமான தகவல்களோடு எழுதப்பட்டுள்ளது. வானியல் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்.

வானியல் துறையில் ஓர் அறிவாளி - ஹாக்கிங் பற்றி அறிமுகம்!

படம்
வாசிப்பறை! என்சைக்ளோபீடியா ஆஃப் டைனோசர்ஸ்! தி தெரபாட்ஸ் பதிப்பு- நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஜூராசிக் பார்க் படத்தை  மகிழ்ச்சியாக பார்த்திருப்பீர்கள். அது தொடங்கி டைனோசர்களை கோபமாக, மகிழ்ச்சியாக பார்த்திருக்கிறோம். பயத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாலும் டைனோசர்களை யாருக்குத்தான் பிடிக்காது. பயமோ, அருவெறுப்போ எதுவாகினும் அந்த பேருயிர்கள் எப்படி வாழ்ந்தன, வளர்ந்தன, அழிந்தன என்பது பற்றி சுவாரசியக் கட்டுரைகள் இவை. எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நூலில் பல்வேறு டைனோசர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சில பக்கங்கள் படித்தாலே இந்த நூல் கல்வி நிறுவனங்களுக்காக எழுதப்பட்டுள்ளது தெரிந்துவிடும். ஆனாலும் பிரச்னையில்லை. படிக்கலாம். மகிழலாம். 50 திங்க்ஸ் டு சீ இன் தி ஸ்கை சாரா பார்க்கர் பவில்லியன் வானில் தொலைநோக்கி மூலமாக பார்க்கவேண்டிய ஐம்பது விஷயங்களைப் பற்றி வான் இயற்பியலாளர் சாரா பார்க்கர் கூறுகிறார். விண்வெளி பற்றிய பைபிள் என்று கூட இந்த நூலைக் கூறலாம். ஹாக்கிங் - தி மேன், ஜீனியஸ் தியரி ஆஃப் எவ்ரிதிங் ஜோயல் லெவி ஹாக்கிங்கின் இறப்பிலிருந்து தொடங்குகிற நூல், ஆ

கனவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காதீர்கள்!

படம்
நேர்காணல் ஜிம் அல் கலீலி, க்வாண்டம் இயற்பியலாளர்(சர்ரே பல்கலைக்கழகம், இங்கிலாந்து) நீங்கள் வளரும்போது என்னவாக ஆசைப்பட்டீர்கள்? நான் முதலில் கண்டுபிடிப்பாளராக மாறவே ஆசைப்பட்டேன். பிறகு ராக் இசைக்கலைஞனாக விரும்பினேன். கால்பந்து அணிக்கு விளையாட நினைத்தேன். நீங்கள் யாருக்கேனும் அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லுவீர்கள்? நான் என் மனைவி ஜூலியைத் திருமணம் செய்தபோது எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. அதைப்பற்றி நான் பேசியபோது, நீ அதைப்பற்றி கவலைப்படாதே, உன் கனவுகளைப் பின்பற்றி செல். நாம் இந்த கஷ்டங்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் நான் முனைவர் படிப்பை படிக்க முடிந்தது. நான் பெற்ற பிறருக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையும் இதுதான். நீங்கள் செய்யும் பணியை எளிமையாகச் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ஒரு கண்டுபிடிப்பாளன். பயணியும் கூட. அறிவியல் முடிவுகளை சிந்தனைகளை மக்களிடம் கூற முயற்சிக்கிறேன். நான் ஒரு க்வாண்டம் இயற்பியலாளர். அவ்வளவுதான். உயிருடன் இருப்பவரோ இறந்தவரோ விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்கவேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்.  ஆல்பர்ட் ஐன்