வானியல் துறையில் ஓர் அறிவாளி - ஹாக்கிங் பற்றி அறிமுகம்!
வாசிப்பறை!
என்சைக்ளோபீடியா ஆஃப் டைனோசர்ஸ்!
தி தெரபாட்ஸ்
பதிப்பு- நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்
ஜூராசிக் பார்க் படத்தை மகிழ்ச்சியாக பார்த்திருப்பீர்கள். அது தொடங்கி டைனோசர்களை கோபமாக, மகிழ்ச்சியாக பார்த்திருக்கிறோம். பயத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாலும் டைனோசர்களை யாருக்குத்தான் பிடிக்காது. பயமோ, அருவெறுப்போ எதுவாகினும் அந்த பேருயிர்கள் எப்படி வாழ்ந்தன, வளர்ந்தன, அழிந்தன என்பது பற்றி சுவாரசியக் கட்டுரைகள் இவை. எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நூலில் பல்வேறு டைனோசர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சில பக்கங்கள் படித்தாலே இந்த நூல் கல்வி நிறுவனங்களுக்காக எழுதப்பட்டுள்ளது தெரிந்துவிடும். ஆனாலும் பிரச்னையில்லை. படிக்கலாம். மகிழலாம்.
50 திங்க்ஸ் டு சீ இன் தி ஸ்கை
சாரா பார்க்கர்
பவில்லியன்
வானில் தொலைநோக்கி மூலமாக பார்க்கவேண்டிய ஐம்பது விஷயங்களைப் பற்றி வான் இயற்பியலாளர் சாரா பார்க்கர் கூறுகிறார். விண்வெளி பற்றிய பைபிள் என்று கூட இந்த நூலைக் கூறலாம்.
ஹாக்கிங் - தி மேன், ஜீனியஸ் தியரி ஆஃப் எவ்ரிதிங்
ஜோயல் லெவி
ஹாக்கிங்கின் இறப்பிலிருந்து தொடங்குகிற நூல், ஆக்ஸ்போர்ட்டில் படிப்பது, ஏஎல்எஸ் நோய் பாதிப்பு, திருமண வாழ்க்கை, கண்டுபிடிப்பு ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. எழுத்தாளரின் ஆராய்ச்சி சற்று போதவில்லையோ என்று தோன்றுகிறது. ரைட் ஹாக்கிங்கிற்காக படிக்கலாம்.
நன்றி:ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்