மக்கள் தேர்ந்தெடுத்த மகத்தான அரசியல்வாதி! - டாமி பேல்ட்வின்
விக்கிப்பீடியா |
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்
டாமி பேல்ட்வின்
1962 ஆம் ஆண்டு பிறந்த டாமி பேல்ட்வின், விஸ்கான்சின் மாநில உறுப்பினராக உள்ளார். 1998 ஆம்ஆண்டு தன்னை ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்தார். இவரின் சிறப்பான செயல்பாடுகள் அடிப்படையில் மக்கள் இவரை தம் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு டாமி பேல்ட்வின் முதல் மாற்றுப்பாலினத்தவர் உறுப்பினராக தேர்வானார். தற்போது மாற்றுப்பாலினத்தவருக்கான மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளார். இம்மசோதா சபையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் இந்த முயற்சி முக்கியமானது. மாற்றுப்பாலினத்தவரை தீண்டாமைக்கு உள்ளாக்குவதைத் தடுக்கும் அரசு மசோதா இது.
தற்போது ஜனநாயக கட்சி உறுப்பினரான பேல்ட்வின், விஸ்கான்சின் மாநிலத்தில் மேடிசன் நகரில் பிறந்தார். 2017 ஆம் ஆண்டு இவரது தாய் காலமானார். சிறுவயது முழுவதும் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தார். காரணம், தாய்க்கு இருந்த மனநலப்பிரச்னையும், போதை அடிமைத்தனமும்தான். இவரது தாத்தா யூதர், பாட்டி ஆங்கிலேயர். 1980 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பையும், 1984-89 இல் கல்லூரி படிப்பு முடித்து பட்டதாரியானார். தன் 24 வயதிலிருந்து மேடிசன் நகர நிர்வாகத்தில் உள்ளார்.
குடியரசு கட்சிக்கு எதிராகத்தான் அனைத்து விஷயங்களிலும் ஜனநாயக கட்சிக்காரர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் எளிமையாக கூறலாம். ஆனால் இவர், போருக்கு, வன்முறைக்கு எதிரானவராக கருத்துகளைக் கூறியவர். உள்நாட்டு விவசாயம், வருமானவரி வசூல் ஆகியவற்றில் வெளிப்படையான தன்மையை வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் இவரின் அரசியல் செயல்பாடும், மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைக் கோரலுக்கு சளைத்ததல்ல என்று கூறலாம்.
நன்றி: அவுட்.காம்
தமிழில்: வின்சென்ட் காபோ