குழந்தை அழும்போது கண்ணீர் வருவதில்லையே ஏன்?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதில்லையே ஏன்?
குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அழுகை மூலமாக அறியலாம். தாயின் கருப்பையில் உள்ள குழந்தை மெல்ல வெளிவந்தவுடன் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கத் தொடங்கும்போது, அது முன்னிருந்த பாதுகாப்பில் குறைபாட்டை உணர்கிறது. உடனே அழுகிறது.
ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அழும்போது சத்தம்தான் பெருமளவில் ஊரையே உலுக்கும்படி வரும். ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது. காரணம், கண்ணீர் சுரப்பி அப்போது உருவாகி முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதே.
மேலும் குழந்தையின் உடலில் வியர்வைச்சுரப்புக்கு காரணமான எக்கிரைன், அபோகிரைன் ஆகிய சுரப்பிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே சில வாரங்களுக்கு குழந்தைக்கு வியர்வை சுரக்காது. அதேசமயம் குழந்தைக்கு பாலூட்டும்போது, அவர்களின் உடலில் வியர்வை உருவாகும். இதன் அளவு நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாக இருக்கும். பலரும் பீதியாவார்கள். அது இயல்பானதுதான். தாயின் உடலிலிருந்து உடற்சூடு குழந்தைக்கு மாற்றப்படுகிறது என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக குழந்தை மருத்துவத்துறை பேராசிரியரான சேஜ் டிம்பர்லைன்.
நன்றி: லிவ் சயின்ஸ்