சுந்தரசாமியுடன் தேநீர் குடித்தபோது... கடிதங்கள்!


Image result for சுந்தர ராமசாமி
நூல்வெளி


தேநீர் குடிக்கவெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. சு.ரா பற்றி அறச்சலூர் சிவராஜ் ஏராளமான பதிவுகளை எழுதி வருகிறார். ஏதேனும் ஒருவகையில் மெய்யருள் போன்றவர்களும் அவரின் வார்த்தைகளை மெய்மறந்து கூறும்போது அவரின் நினைவுகள் தோன்றும்.

சு.ரா பற்றி முருகு கூறியபோது, பெரிய ஆச்சரியம் தோன்றியது. வார்த்தைகளை திருத்தி செம்மையாக்கி எழுதுவார் என்று கூறினார். அப்படித்தான் புளியமரத்தின் கதை நூலைப் படித்தேன். நாவல் படித்தாலும் அதனை வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு படிக்கவேண்டும் என்பதை நான் நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த நாவலைப் படிக்கவேண்டும்.

அறச்சலூர் பிரகாஷ், அன்று  காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இன்று அவர் பதவி உயர்வு பெற்று ஊர் நீங்கிச்சென்றுவிட்டார். அன்று, தீவிரமாக பல்வேற நூல்கள் படிப்பதும், திரைப்படங்களைப் பார்ப்பதுமாக இருந்தார். இதில் ஆச்சரியம். அவரிடம் படிப்பவர்களைப் பற்றி அங்கதம் கேட்பதற்கு படு சுவாரசியமானது. புத்தகங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் கடன் கொடுக்க மாட்டார்கள். பிரகாஷ் அண்ணா என்னை நம்பிக் கொடுத்தார். புத்தகத்தைப் படித்துவிட்டு நானும் சரியான நேரத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.





7.3.13

இனிய நட்பிற்கு,

 நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். சற்று முன்புதான் சுந்தர ராமசாமி எழுதிய புளிய மரத்தின் கதை நாவலைப்படித்தேன். ஒரு கிராமத்தின் இயற்கையான சூழல், சுற்றுப்புறம் எப்படி மனிதர்களின் செயல்பாடுகளின் மூலம் அழிகிறது என்பதே கதை. தாமோதர ஆசான் போல எந்தவொரு மனிதனும் சுயநலமில்லாது. புளியமரத்தைக் காப்பாற்ற முன்வராத சூழ்நிலையில் அமிலம் ஊற்றப்பட்டு அழிக்கப்படுகிறது. இதன் வழியே புளியங்குளம், மக்கள், புயலென அங்கு நுழைந்து மக்களை மாற்றும் அரசியல், பூங்காக்களின் அபத்தம் என சுவாரசியமான பல விஷயங்களை அங்கதமாக கூறுகிறது நாவல்.

அரசு அலுவலங்களின் செயல்பாட்டை நடைமுறையை அறிய வாய்ப்பு கிடைத்தது. சாதி சான்றிதழ் வாங்க அலைந்த கதை அது. நீங்கள் புத்தகத் திருவிழாவில் வாங்கி நூல்களைப் படித்துவிட்டீர்களா? ஆமாமெனில் அவற்றில் சுவாரசியமாக உள்ள நூல்களைப் பற்றிச் சொல்லுங்கள். அவை பற்றித் தெரிந்துகொண்டால் நான் வாங்கிப்படிப்பேன். விஸ்வரூபம் படம் முன்னமே பார்த்திருப்பீர்கள். நான் இப்போதுதான் பார்த்தேன். இரண்டாம் பாகத்தில்தான் படம் முடியும் என நினைக்கிறேன்.

அறச்சலூர் பிரகாஷ் வீட்டில்  நூல்களாக நிரம்பி வழிகிறது. இப்போது படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு ஏராளமாக படிக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. அவரிடமிருந்து முத்துலிங்கம் சிறுகதைகள் வாங்கி வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். தஸ்தாவெஸ்கி, சு.வேணுகோபால், சு.ரா என ஏராளமான எழுத்தாளர்களை அவரின் வீட்டில் பார்த்தேன். அவர்களுடன்தான் அவர் தேநீர் மட்டுமல்ல மதிய சாப்பாடும் சாப்பிடுகிறார்.

சந்திப்போம். ச.அன்பரசு