மிட்டாய் தரும் தலைவர் வேண்டாம்! - சேட்டன் பகத்!







Image result for chetan bhagat

தேர்தல் வரும்போதுதான் பல அரசியல்கட்சிகள் நமக்கு மிட்டாய்கள் வழங்கின்றனவா, அல்லது அறிவை வளர்க்கும் புத்தகங்கள் வழங்குகின்றனவா என்று தெரியும். பல்வேறு கட்சிகளும் சாத்தியமோ இல்லையோ ஏராளமான கனவு லட்சியங்களை மக்களிடம் கூறுகின்றன. வெகுஜன ஈர்ப்புவாத பிரசாரங்களில் மக்களை கனவு காண வைக்கின்றனர். இவை சாத்தியமா என்று மக்களும் கேட்பதில்லை. அரசியல்வாதிகளும் அதனை மேற்கொண்டு ஜெயித்தபிறகு பேசுவதில்லை.

 மக்களும் கனவு வாக்குறுதிகளை நம்புகின்றனர். அவை தற்காலிகமானவை என்று புரியாமல் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு  நம்புகின்றனர். இதன் விளைவு,  ஜனநாயகச் சீரழிவுகள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்தியர்கள் கூட்டாக ஏன் வளரமுடியவில்லை. காரணம், அவர்களுடைய சாதி வெறி. பிறரை விட தன்னுடைய குழு, இனம் உயர்ந்தது என்ற எண்ணம். இதன் விளைவாக அவர்கள் தங்கள் சாதி, இனத்துக்குள்ளேயே திருமண உறவுகளை அமைக்கின்றனர். இது எப்படி இந்தியாவை வளர்ச்சி பெறச்செய்யும்?

இது குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பெரிதும் முடக்குகிறது. அதோடு தனது மகள், மகன் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள், எப்படி பிறருடன் தோள்பற்றி நின்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முடியும்?

இந்தியர்கள் இந்த தடைகளைக் கடந்தால்தான் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவிற்கும் வளர்ச்சி இருக்கிறது. எனவே நாம் அரசியல்வாதிகளிடம் இட ஒதுக்கீடு போன்றவற்றைக் கேட்காமல், உலக சந்தையில் நம் திறமைகளை பயன்படுத்துவதற்கான, நிரூபிப்பதற்கான  வாய்ப்புகளைக் கோர வேண்டும்.

 இந்திய நிறுவனங்கள் அதிக நாட்களுக்கு அரசின் நிழலிலேயே பாதுகாப்பிலேயே இருந்துவிட முடியாது. அவை உலகச்சந்தையில் போட்டியிடும் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.  உண்மையில் நம் பிரச்னைகளைத் தீர்க்கும் தலைவரைக் கண்டுபிடிக்காமல், மிட்டாய் தரும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தால் வேறு வழி இல்லை. விதியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டியதுதான்.


சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது

பிரபலமான இடுகைகள்