பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் வரலாறு! - தெரிஞ்சுக்கோ!





Image result for happy birthday to you






தெரிஞ்சுக்கோ!

ஹேப்பி பர்த்டே டூ யூ!


பீட்டில்ஸ் பிரிட்டிஷ் பேண்ட்டின் பாடல்களை விட பிரபலமான பாடல்கள் உலகில் உண்டு. அதில் ஒன்றுதான், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். இப்பாடலை 1889 ஆம் ஆண்டு பார்ட்டி ஹில் மற்றும் அவரது சகோதரியான மில்ட்ரெட் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகம் முழுவதும் இப்பாடல் பாடப்பெற்று வருகிறது. கேக்கைத் தின்னும் வெறியில் பாடலைக் கூட பாடாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் பாடலின் வரிகள் மனதில் வராமல் இருக்காது.


அதுபற்றிய  தகவல்கள்:

1893 ஆம் ஆண்டு இப்பாடல் ஹில் சகோதரிகளால் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்பது மாற்று வார்த்தையாக சேர்க்கப்பட்டிருந்தது.

1912 ஆம் ஆண்டு குட்மார்னிங் டு ஆல் எனத் தொடங்கும் பாடலில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்ற வார்த்தையும் முதன்முதலாக இடம்பெற்றது.


1933 ஆம் ஆண்டில் தந்தியில் செய்தியாக அனுப்ப ப்பட்ட முதல் பாடல், இதுதான். 1935 ஆம் ஆண்டு இப்பாடலுக்கான காப்புரிமை ஹில் சகோதரிகளுக்கு கிடைத்தது.


1955 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பியர் மான்ட்யூக்ஸ் என்பவரின் 80 வது பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுக்கு ட்யூன் பிறந்தது.

1962 ஆம் ஆண்டு இப்பாடலை காந்தக்கண்ணழகி மர்லின் மன்றோ, ஜான் எஃப் கென்னடியின் 45 வது பிறந்த நாளில் ஸ்டைலாகி பாடி அனுப்பினார்.

1988 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், பிறந்தநாள் வாழ்த்து பாடலை 25 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. 1996 ஆம் ஆண்டு பெண்கள் ஸ்கௌட் குழு ட்ரம்ஸ் இசையில் இப்பாடலை வாசிக்க தயங்கினர். காரணம் காப்புரிமை, வழக்கு பயம்தான்.

2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு அனுப்ப ப்பட்ட ரோவர் பிறந்த நாள் வாழ்த்தை தனக்குத்தானே ஹம் செய்துகொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

2016 ஆம் ஆண்டு இப்பாடலை அனைவரும் பயன்படுத்துவதற்கான அனுமதியை நீதிமன்றனம் வழங்கியது.



நன்றி: க்வார்ட்ஸ்