பெண் கல்வியாளர்களுக்காக பதிப்பகம்! - பார்பரா ஸ்மித்!
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்
பார்பரா ஸ்மித்
அறிமுகம்
தனது 72 ஆண்டு கால வாழ்க்கையில் கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகளைப் பேசுபவராக இருந்தார் பார்பரா. காம்பாகி ஆற்றுப் பாதுகாப்பு மையத்தையும் உருவாக்கி, கறுப்பினத்தவரின் உரிமைகளைப் பேசினார். நான் என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்ய முயற்சித்துள்ளேன் என்கிறார் பார்பரா.
போராட்டம்தான் வாழ்க்கை!
1970 ஆம் ஆண்டு தொடங்கி, பார்பரா ஸ்மித் கறுப்பின மக்களுக்காக உழைத்து வருகிறார். மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமை, செயற்பாட்டாளர், பதிப்பாளர் என பல்வேறு விஷயங்களிலும் ஈடுபட்டு முத்திரை பதித்த பெண்மணி இவர்.
1946 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தார். 1960 ஆம் ஆண்டிலிருந்து பள்ளியில் போராட்டம் என்றால் முன்னாடி நிற்பார். புறக்கணிப்பு, மறியல் என அனைத்து வகை போராட்டத்திலும் பங்கேற்பது பார்பராவின் முக்கியப் பணி.
இவரது அம்மாவுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்தது. குடும்பத்தில் பார்பரா படிக்கும்போது அவர்தான் முதல் பட்டதாரியாவார் என ஹில்டா நம்பினார். ஒன்பதுவயதில் அவர் மறைந்து விட, பார்பராவின் பாட்டி மற்றும் அத்தை படிப்பு பற்றி சிறுமி பார்பராவுக்கு நினைவூட்டி வந்தனர். அம்மாவின் மறைவு பார்பராவையும் அவரது தங்கையையும் பாதிக்காமல் இருக்க வீட்டினர் உதவினர்.
உரிமை ... உணர்வு!
196-81 காலகட்டத்தில் பார்பரா இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களை படித்து முடித்தார். பிறகு மாசாசூசெட்சிலுள்ள போஸ்டனில் காம்பாகி ஆற்று பாதுகாப்பு மையத்தை தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு தன் சகோதரி பேவர்லியுடன் சேர்ந்து இவர் வெளியிட்ட அறிக்கை புகழ்பெற்றது. அதில் இன பாகுபாடு பற்றி பிரமாதமாக எழுதியிருப்பார் பார்பரா. இதில் கறுப்பினத்தவரின் பாலினத் தேர்வு பற்றியும் முதன்முதலாக எழுதி பரபரப்பூட்டினார்.
அப்போது பெண் எழுத்தாளர்களுக்கான எந்த பதிப்பகமும் கிடையாது. அவரின் காம்பாகி இயக்கமும் 1980 ஆம் ஆண்டு கலைந்து போனது. பெண் கல்வியாளர்களுக்காக கிச்சன் டேபிள் வுமன் ஆஃப் கலர் பிரஸ் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இதில் கறுப்பின பெண் புரட்சியாளர்கள் நூலை அச்சிட்டார். மேலும் மாற்றுப்பாலினத்தவரின் குரல்களையும் தனது நிறுவனத்தின் வழியாக வெளியுலகம் கேட்கச்செய்தார். கிச்சன் டேபிளின் வெற்றியால், வணிக பதிப்பகங்களும் ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் பதிப்பிக்கத் தொடங்கின.
1994 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கு உதவிகள் செய்த தற்காக ஸ்டோன்வால் விருது பெற்றார். பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றியுள்ளார்.
நன்றி: அவுட்.காம், பிளாக் பாஸ்ட்
தமிழில்: வின்சென்ட் காபோ