குழந்தைகளுக்கு கதை சொல்வதில் முதியோர் எப்படி வெல்கிறார்கள்?
மிஸ்டர் ரோனி
கதை சொல்வதில் வயதானவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்களே எப்படி?
மரண அடிதான் ப்ரோ. வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒன்றை சுமந்துகொண்டு இருக்கிறார்கள். வீண்பழி சுமக்கிறார்கள். தினசரி ஏராளமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன.
மேலும் இளைஞர்களை விட (18-30), 60-92 வயது கொண்டவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளை கஷ்டப்படுத்தாத இலக்கணங்களைக் கொண்டது. எளிதில் புரியும்படியான விஷயங்களைக் கொண்டது. அறத்தை வலியுறுத்துவது என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதைகளைச் சொல்லும்போது கதைகளுக்கு ஏற்றது போல குரலின் தொனிகளை மாற்றுவதும் பெரியவர்களுக்கு இயல்பாக வருவதை மைக்கேல் பிரான், சூசன் ராபின்ஸ், நான்சி மெர்க்லர் ஆகியோரின் ஆராய்ச்சிகள் விளக்கியுள்ளன.
நன்றி: பிபிசி