கேப்டன் பிரின்ஸ் முறியடிக்கும் அபாயச் சுறா!




Image result for captain prince comics
கேப்டன் பிரின்ஸ்!




கேப்டன் பிரின்ஸ் கலக்கும் 

பயங்கரப்புயல்

சன்ஷைன் லைப்ரரி

விலை ரூ.65

கேப்டன் பிரின்ஸ் கடல் பயணமாக செல்கிறார். அப்போது லோபோ என்ற ஒற்றைக்கண் சூதாடியைச் சந்திக்கிறார். லோபோ சூதாட்டத்தில் அமெரிக்கரை தோற்கடித்து தீவு ஒன்றை வென்றிருக்கிறார். ஆனால் அதன் பின்னால் பெரும் பழங்குடி மக்கள் பிரச்னை இருக்கிறது. இது பிரின்சுக்கு தெரியாது. பிரின்ஸ் ஓர் கடலில் வாழும் காந்தி.

முடிந்தவரை போலீஸ், கைது, சூதாட்டம் என எல்லாவற்றிலும் தள்ளியிருக்க முயற்ச்சிக்கிறார். ஆனால் பார்னே எனும் அவரது தோழர் குடி, சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டவர். அப்படி ஒரு தீவுக்குப் போகும்போதுதான் லோபோவை அடித்து துவைப்பதைக் காண்கிறார். உடனே லோபோவுக்கு உதவுகிறார். ஆனால் போலீஸ் இவர்களை நடந்த சம்பவத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டு தேடி வருகிறது. உடனே பிரின்சின் கப்பலில் அடைக்கலமாகி லோபோவும் பார்னேவும் தப்புகின்றனர். அடுத்து அவர்கள் சென்றது, லோபோவுக்கு சொந்தமான தீவு. ஆனால் அங்கு பழங்குடி மக்கள் அமெரிக்கருக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர். காரணம் அங்குள்ள பேராசைக்கார பழங்குடித்தலைவன்தான். அவன் விரிக்கும் சதிவலையில் பிரின்ஸ் சிக்கினாரா, லோபோ அதனை முன்கூட்டியே உணர்ந்து தடுத்தாரா என்பதுதான் கதை.

கதையும் சித்திரமும் சண்டைக்காட்சிகளுக்கு வேறு வண்ணம் தருகின்றன. அதாவது நன்றாக வரைந்திருக்கிறார்கள் என்கிறோம். பிரின்ஸ் இதில் நாயகன் என்றாலும் லோபோதான் ஆக்சன் நாயகனாக இருக்கிறார். பெண்கள் குறைவு. இருந்தாலும் காதல் கிடையாது என வாசகர்கள் விரக்தியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மொத்தத்தில் சுமாரான காமிக்ஸ் கதை. அம்புட்டுத்தேன்.

கோமாளிமேடை டீம்