மாற்றம் மக்களை உள்ளடக்கியதுதான் - சேட்டன் பகத்!





Image result for making india awesome






மாற்றத்தின் நாயகர்களுக்கு சில வார்த்தைகள்

அன்புள்ள நண்பர்களே, டெல்லியில் நடந்த மாணவியின் கற்பழிப்புக்காக இளைஞர்கள்  நீதிகோரி போராடியது முக்கியமான ஜனநாயக அம்சம். அதற்கான நீதி கிடைத்ததா, அதற்கான முனைப்பை அவர்கள் கொண்டிருந்தார்களா என்பதில் வேறு விஷயம்.  காரணம், அதில் அவர்கள் நினைத்ததை அடைந்தார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவனத்தை மக்களிடையே ஏற்படுத்தினர் என்று கூறலாம். ஆனால் இது இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கும் போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை.

இந்தியா ஒற்றுமையான, பன்மைத்துவம் கொண்ட ஒரே நாடு என்பதில் எனக்கு சம்மதமில்லை. இந்தியாவில் நான்கு முக்கிய பிரிவுகள் உண்டு.  அரசியல்வாதிகள் இந்தியாவில் பல்வேறு கொள்கைகளை உருவாக்குகிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை இரண்டாவது பிரிவினரிடம் கொடுத்து பதுக்குகிறார்கள். நான்காவது பிரிவினரிடமும், மூன்றாவது பிரிவினரிடமும் வரும் கருத்துகளை எதிர்கொள்வது இவர்கள்தான்.

இரண்டாவது பிரிவினர், தொழிலதிபர்கள். இவர்கள் இயல்பாகவே அரசியல்வாதிகளிடம் நெருக்கம் கொண்டவர்கள். இல்லையெனில் தொழிற்சாலைகளுக்கான அனுமதியை எப்படி பெறுவது? இவர்கள் அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் பராமரிக்கிறார்கள்.

அடுத்து இருக்கும் மூன்றாவது பிரிவில்தான் நீங்களும் நானும் வருகிறோம். இது கற்றறிந்த மக்கள் பிரிவு. இவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் இடையறாது எந்தப்பிரச்னையானாலும் வாங்க பேசலாம் என்று கையைப் பிடித்து இழுப்பவர்கள். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, பாரதி பாஸ்கர் போல நீளமாகப் பேசி விவாதம் செய்பவர்கள். இதன்வழியாக பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று நினைப்பவர்கள்.

நான்காவது இருக்கும் பிரிவினர் கிராமப்புறத்தினர்.  குறைந்த கல்வி கற்றவர்கள். இவர்களை இடையறாமல் கிண்டல் செய்வது சமூக வலைத்தளத்தில் புழங்கும் மூன்றாவது பிரிவான நீங்களும் நாங்களும்தான். ஆனால் இது ஏன் பயனளிக்காது என்றால், நாம் அனைவரும் சேர்ந்துதான் இந்தியா. நீங்கள் குறிப்பிட்ட 90 சதவீத மக்களான நான்காவது பிரிவை கடுமையாக கிண்டல் செய்து மரமண்டை, பொதுப்புத்தி என்று சொல்லுவது எந்த மாற்றத்தையும் சாத்தியமாக்காது. நீங்கள் சமூகவலைத்தளத்தில் ஒரு கருத்தைப் பதிந்துவிட்டு சாலையில் நடக்கும் நான்காவது பிரிவினருடன்தான். அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். நாட்டின் எதார்த்தத்தை  வெளிப்படையாக கூறுவது நான்காவது பிரிவினர்தான்.

பெண்கள் இரவில் ஏன் வெளியே வருகிறார்கள், சரியான நாகரிகமான உடையை அணியுங்கள் என்று நான்காவது பிரிவினர் கூறுவது எதார்த்தமானதுதானே. அதனை கிண்டல் செய்து, இதன் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடுவது என்பது புத்திசாலித்தனமானதா? நான் இங்கு கூறுவது அவர்களின் பேசும் தொனி அல்ல; கூற விரும்பும் கருத்து. அது மக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்ததுதானே

பல்வேறு வேறுபாடுகள், கருத்து வித்தியாசங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் வாழ்வது இந்தியாவில்தான். இங்கு அனைத்து மேற்கத்திய மாற்றங்களும் சாத்தியம் இல்லை. தற்போதைய கலாசார மாற்றங்கள் கூட பல்லாண்டுகளாக சமூக முன்மாதிரி மனிதர்களின் விழிப்புணர்வு பிரசாரங்களால் உருவானவையே. அவர்களின் உழைப்பால்தான் பல்வேறு உரிமைகளை நாம் அனுபவித்து வருகிறோம். எனவே யாரையும் புண்படுத்தாமல் நாம் கூற விரும்புகள் கருத்துகளை வெளிப்படுத்த எந்த தடையுமில்லை. அனைத்து மக்களுக்கும் தாங்கள் விரும்பும் கருத்தைக்கூற தடையில்லை. காரணம் இது இந்தியா. வியப்பூட்டும் மனிதர்களைக் கொண்ட நிலப்பரப்பு.

சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.