ஆண்கள் அணியத் தொடங்கிய ஹைஹீல்ஸ்!
pixabay |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
ஹைஹீல்ஸ் எப்படி வந்தது?
பெண்களை டக்கென அடையாளப்படுத்துவது ஹைஹீல்ஸூம், லிப்ஸ்டிக்கும்தான். சில இடங்களில் இதன் அடையாளம் வேறு காரணத்திற்காக பயன்படுகிறது. அதைவிடுங்கள். ஹைஹீல்ஸ் உருவானது, ஆண்களுக்காகத்தான். பெண்களுக்கல்ல. உருவான காலம், 1600.
பதினேழாம் நூற்றாண்டில் பெர்சிய ஆட்களால் உருவான ஃபேஷன்தான் ஹை ஹீல்ஸ். எதற்கு இந்த நாகரிகம்? தம்மை உயர்ந்த ஆட்களாக காட்டத்தான். பனிரெண்டாம் லூயிஸ் அரசர் (1643-1715), பெர்சியர்களைப் பார்த்து தானும் ஹை ஹீல்ஸ் சமாச்சாரத்தை பின்பற்றினார். அரசன் எவ்வழியோ அதே வழிதானே மக்களும். அப்போது ஒட்டமன் அரசை எதிர்த்து போர்புரியும் அவசரம் வேறு. அதற்கான பணிகளை கவனித்தவர்கள், ஹை ஹீல்ஸ் செருப்பை அணிந்து சென்றனர். இதனை லிஸ்பன் உள்ளிட்ட நாடுகளிலுள்ள மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
லூயிஸ் அரசர் நான்கடி உயரமான கட்டை அரசர். எனவே சிவப்பு நிற ஹைஹீல்சைப் பயன்படுத்தி மாமனிதராக மக்கள் முன் காட்சி அளித்தார். பத்து செ.மீ இம்முறையில் உயர்ந்தார். 1701 இல் தீட்டப்பட்ட ஓவியத்தில் இதனைத் தெளிவாகப் பார்க்கலாம். பெர்சிய மேனியா அப்போது வடக்கு கண்டங்களில் வேகமாக பரவி வந்தது. எனவே ஆண்களுக்கு நிகராக நாங்களும் என திரண்ட பெண்கள் ஆண்களின் உடைகளை, பொருட்களை ஆக்கிரமித்தனர்.
இப்படித்தான் காலப்போக்கில் பெண்கள் ஹைஹீல்சைப் போட்டு வாத்துகளைப் போல திரியத் தொடங்கினர். அப்போது பெண்கள் ஆண்களைப் போல உறுதியானவர்களாக இருக்க வேண்டும் என நினைத்து பைப்பில் புகையிலை புகைத்தார்கள். தொப்பி அணிந்தார்கள். இதற்கு பொருத்தமாக ஹைஹீல்ஸ் உதவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆண்கள் ஹைஹீல்ஸ், அணிவதை கைவிட்டனர் என்கிறார் பேட்டா காலணி அருங்காட்சியகத்தைச் சேர்ந்த எலிசபெத் செமல்ஹேக்.
நன்றி: க்யூரியாசிட்டி