பாட்காஸ்ட்சந்தை உயருகிறது! - இந்தியாவில் தோன்றும் புது மோகம்!
நகர வாழ்க்கை கிராமத்திலிருப்பவர்களுக்கு சொர்க்கமாக தோன்றும்.ஆனால் காரில், பைக்கில் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு எரிச்சலூட்டும். இதிலிருந்து காப்பாற்ற இநூல்கள் உதவும். ஆனால் பயணிக்கும்போது தற்போது பாட்காஸ்டுகள் இப்பணியைச் செய்கின்றன. இதனால் தினசரி செய்தி, காமெடி, சுயமுன்னேற்றம் என அனைத்தும் ஆடியோ வழியாக கேட்க முடிகிறது. “நாங்கள் உங்கள் நேரத்தை திருடுவதில்லை” என்கிறார் ஹப்ஹாப்பர் எனும் பாட்காஸ்ட் நிறுவனரான கௌதம் ராஜ் ஆனந்த். பாட்காஸ்ட் என்பது தொடரின் தனித்தனி கோப்புக்களை வெளியிட பயனர்கள் கேட்பதுதான்.
பாட்காஸ்ட் எனும் ஆடியோ ஒலிபரப்பு கோப்புகளை நீங்கள் தரவிறக்கி கேட்டு மகிழலாம். இது படிப்பது போன்ற சோர்வைத் தருவதில்லை என்கிறார்கள் மெட்ரோநகர வாசிகள். 2017 இல், 25.4 மில்லியன் பேர் பாட்காஸ்ட்டுகளை கேட்டு வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 176 மில்லியன் பேர் இதனைக் கேட்பார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் இங்கிலாந்தின் ஆடியோபூம், அமெரிக்காவின் ட்யூன் இன், சீனாவின் ஜிமலயா ஆகிய நிறுவனங்கள் பாட்காஸ்ட் வணிகத்தில் முன்னே நிற்கின்றன. ஜியோ சாவன், வின்க் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் பாட்காஸ்ட் சேவையை வழங்குகின்றன.
ஆங்கிலம் மட்டுமல்ல இந்தியில் ஆவாஸ் என்ற பாட்காஸ்ட் கூட கேட்கப்பட்டு வருகிறது. இந்தஸ் வாக்ஸ் மீடியா, ஆடியோமேட்டிக், ஹிப்ஹாப்பர் ஆகியவை இதில் புகழ்பெற்றவை. இந்தியாவில் பிரேம்சந்த் கதைகளும், பகவத் கீதையும் புகழ்பெற்ற பாட்காஸ்ட் ஆடியோக்களாக உள்ளன. நாளடைவில் இவையும் மாற்றம் பெறலாம்.
நன்றி - இந்தியா டுடே