வாசனை காணாமல் போகிறதா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
நாம் மூக்கிற்கு வரும் வாசனை என்னாகிறது?
நாம் சாக்லெட் பர்ப்யூம் அணிந்த அழகியைச் சந்திக்கிறோம். அவர் நம்மிடம் பேசிவிட்டு சென்றவுடன் சில நிமிடங்களில் அந்த வாசனை அழிந்துவிடுகிறது. நினைவில் மட்டும் அந்த வாசனை நீடித்திருக்கும். அதற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். மூக்கின் நுகர்வு எல்லைக்கு, அந்த வாசனை தட்டுப்படாத தற்கு, வாசனை மூலக்கூறுகள் காற்றிலிருந்து அழிந்துபோனதே காரணம்.
அழுகிய முட்டை, சல்பைடு தன்மை கொண்டது என்பதால் காற்றுடன் வினைபுரிந்து தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. அனைத்து வாசனைகளும், அதன் மூலக்கூறுகளும் இப்படியானவை அல்ல.
நன்றி- சயின்ஸ் ஃபோகஸ்