இடுகைகள்

பாலினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போட்டிபோடும் பெண்களின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

படம்
  போட்டி போடும் பெண்கள்  நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க 33 சதவீதம் என சட்டமியற்ற வேண்டியிருக்கிறது. இதைக்கூட தேர்தலுக்கான கண்துடைப்பாகவே அரசியல் கட்சிகள் செய்கின்றன. உண்மையில் திறமையான பெண்களை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறதா? புராணங்களைக் கூறி, உடலின் வரம்புகளை சுட்டிக்காட்டி முடக்குகிறதா? இதைப்பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் பெண்கள் வீட்டு வேலைக்கென அடிமைபோல நடத்தப்பட்டதுதான். அவர்களை மனிதர்களாக பார்த்து கௌரவித்து நடத்தியவர்கள் குறைவான ஆட்களே.  உலகளவிலும் திறமையான பெண்களை தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுத்து அவர்களின் குணநலன்களை தவறாக பிரசாரம் காட்டி தரம் தாழ்ந்த வகையில் வீழ்த்துகிறார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பு, செய்த சாதனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.  மேற்குலகில் பெண்களுக்கான உரிமைகளை கேட்டு போராடும் அமைப்புகள் எழுபதுகளில் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது ஆராய்ச்சியாளர் ஜேனட் டெய்லர் ஸ்பென்ஸ் என்பவர், பெண்களைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தார். அவரின் சகாக்கள் ஆண்களின் திறமை அதை சமூகம் அங்கீகரிக்கும் விதம் பற்றி ஆய்வு செய்தனர். இதைக் கேள்விப்பட்டவர்
படம்
  வழக்குரைஞர் பத்மலட்சுமி ஜெயாமோகன், கேரளா கேரளத்தில் சாதித்த முதல் பால்புதுமையின வழக்குரைஞர் கேரளத்தில் தினக்கூலி தொழிலாளரான மோகன் என்பவரின் மகள், பத்மலட்சுமி ஜெயாமோகன். இவர், பால்புதுமையின இனக்குழுவைச் சேர்ந்தவர். தான் யார் என்பதை அடையாளம் கண்டு பெற்றோருக்கு முதலிலேயே கூறிவிட்டார். பிள்ளை கூறியதைக் கேட்டு அவர்களும் அடித்து உதைக்காமல் ஆதரவாக இருந்த   காரணத்தால் இப்போது வழக்குரைஞராகி இருக்கிறார். இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பத்மலட்சுமியின் பெற்றோர், தனது மகளின் இயல்பை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுதான். தங்களது மகளைப் பற்றி அறிய அதுதொடர்பாக இணையத்தில் நிறைய தேடி அறிந்துகொண்டனர். கூடுதலாக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருக்கின்றனர். பெற்றோர் இந்தளவு ஆதரவாக இருந்தாலும் சுற்றமும், நட்பும், கல்விக்கூடமும், சமூகமும் அந்தளவு கரிசனம் காட்டவில்லை. இயல்புக்கு மாறான வினோதம் என்று பல்வேறு விஷ வார்த்தைகளை வசைகளை சொல்லி திட்டினாலும் இணையத்தில் உள்ளவர்கள் எதிர்மறை தன்மையை உருவாக்கினாலும் பத்மலட்சுமி ‘’நான் அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளப்போவதில்லை ஒருவர் வேலையில்லாமல் இண

ஆண், பெண் என இருபாலினத்தவரை ஈர்க்கும் உடைகளின் டிரெண்ட்! - மாறும் கலாசாரமும் வணிகமும்

படம்
  டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்  - கே டிராமா இட்ஸ் ஓகே நாட் டு பி ஓகே ஆண், பெண் என இருந்த உடை வேறுபாடுகள் இப்போது உடையத் தொடங்கிவிட்டன. ஆண்கள் அணிந்த ஆடைகளை பெண்களும், பெண்களின் தேர்வாக இருந்த நிறங்களில் ஆண்கள் பல்வேறு உடைகளை வாங்கி அணியத் தொடங்கிவிட்டனர். ஆண்களும் நிறைய பூச்சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டு கடற்கரைகளில் உலாவத் தொடங்கிவிட்டனர். உச்சமாக, இந்தியாவில் கூட பாலின பேதமற்ற உடைகளை தைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆடைகளை ஆண்களும், பெண்களும் யார் வேண்டுமானாலும் வாங்கி அணியலாம். ஆண், பெண் என பர்பியூம்கள் கூட வேறுபட்டு விற்றுக்கொண்டு இருந்த நிலை இருந்தது. இன்று அதுவும் கூட மாறி வருகிறது. உண்மையில் யோசித்து பாருங்கள். பர்ஃபியூம்களில் ஆண் என்ன, பெண் என்ன? வியாபாரம் அப்படி தனியாக பிரிந்துவிட்டது. அதற்கேற்ப விளம்பரங்களை உருவாக்கி மனதில் பிரிவினையை ஏற்படுத்தி பொருட்களை கூவி விற்கிறார்கள். இன்று உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் பல்வேறு நாடுகளிலுள்ள டிவி தொடர்களைப் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் தென்கொரிய டிவி தொடர்களைப் பார்த்து உச்சிகுளிர்ந்து போனவர்கள் அதிகம். அந்த நாட்டு டிவி தொடர்கள

ஆணாக மாறினால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயலும் இளம்பெண் - மைக் - மலையாளம்

படம்
  மைக் மலையாளம் இயக்கம்: விஷ்ணு சிவபிரசாத். இசை – ஹெசம் அப்துல் வகாப் தயாரிப்பு – நடிகர் ஜான் ஆபிரகாம் இருவிதமான கடந்த காலங்களைக் கொண்ட ஆண், பெண் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை. மைக் என்ற படம், எல்ஜிபிடியினருக்கான படம்போலவே உருவாகியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை எழுதிய ஆசிப் அலி அக்பர் இடையில் தடுமாறியதில் சாதாரண காதல் கதையாக மாறிவிட்டது. சாரா தாமஸ் என்ற பாத்திரத்தின் கதைதான் படம். இந்த டீனேஜ் பெண்ணுக்கு தான் ஆணாக இருந்தால் நிறைய நெருக்கடிகளை சமாளிக்கலாம் என்று எண்ணம். அவள் வீட்டில் அம்மாவும், தனக்கு ஆண் பிள்ளை பிறக்காமல் பெண் பிள்ளையாக பிறந்து இருக்கிறாளே என வருத்தம். அம்மா வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறாள். அப்பா, சுயதொழில் செய்து வந்து நஷ்டமாகிறது. இதனால் குடும்பத்தில் அவரை அம்மா ஊதாசீனப்படுத்துகிறார்.   பணம் இல்லாதவரை மனைவி வேண்டாவெறுப்பாக நடத்த அவர் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார். சாரா தாமஸின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு தேக்வாண்டோ சொல்லித் தரும் பயிற்சியாளர் ஒருவர் வருகிறார். அவர், மெல்ல சாரா தாமஸின் வளர்ப்

இரண்டாம் உலகப்போரில் உருவான சிண்ட்ரோம் கே! - உண்மையா, உடான்ஸா

படம்
  இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்ட சிண்ட்ரோம் கே என்பது நோயல்ல! உண்மை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி மருத்துவர்களால், சிண்ட்ரோம் கே என்ற நரம்பியல் சார்ந்த தொற்றுநோய் செய்தி உருவாக்கப்பட்டது. உண்மையில் மருத்துவர்கள்  யூதர்களை காப்பாற்ற  முயன்றே இப்படி நோய் பரவி வருவதாக பொய் சொன்னார்கள். இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூதர்களை தற்காலிகமாக பாதுகாக்க முடிந்தது.  9 நானாஸ் (The 9 Nanas) என்பது அமெரிக்க பெண்களின் ரகசியக் குழு! உண்மை.  இக்குழுவினர் கெடுதலான செயல்களை ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த 9 பெண்கள்தான் 9 நானாஸ் என்ற ரகசியக்குழு. இவர்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு பொதுவான இடத்தில் சந்தித்து, குறிப்பிட்ட அளவு காசு சேர்த்து உணவு, உடைகளை ஏழைகளுக்கு வழங்கி வந்திருக்கின்றனர். இக்குழுவினர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கணவர்களுக்குக் கூட தெரியாமல் தங்களது அறச்செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.  பாலின சமநிலை கொண்ட நாடு, ஐஸ்லாந்து! உண்மை. உலகளவில் எடுக்கப்பட்ட பாலின சமநிலை அறிக்கையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து, நார்வ

நவீன குழந்தைகளுக்கு ஏற்றபடி கதைகளை மாற்றும் காமிக்ஸ் நிறுவனங்கள்! - மாற்றங்கள் ஏன்?

படம்
  அமர்சித்ரகதா மாற்றம் பெறும் காமிக்ஸ் மற்றும் குழந்தைகளின் நூல்கள்! உலகமெங்கும் உள்ள காமிக்ஸ் நூல்களின் மையப் பொருள் மாறுதல் பெறத் தொடங்கியுள்ளன. மாற்றுப்பாலினத்தவர், கருப்பினத்தவர்களையும் மெல்ல முக்கியமான பாத்திரங்களாக மாற்றுவதற்கு கதை எழுத்தாளர்கள் முன்வந்துள்ளனர். இதனை பதிப்பிக்கும் நிறுவனத்தினரும் இதனை ஏற்றுள்ளனர். ஒருவகையில் மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வணிகத்திற்கு அவசியம் என்பது உண்மை.  கூடுதலாக வாசகர்களும் தொன்மையான நீதிகளை, விதிகளை பேசும் நூல்களை வேண்டாம் மாற்றம் வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக்ஸ், ஃபிளேவே பே போன்ற இதழ்களும் கூட மாற்றங்களுக்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடத் தொடங்கியுள்ளன. இயற்கை சார்ந்த விஷயங்கள் மெல்ல காமிக்ஸ் வடிவத்தை பெற்று வருகின்றன. ரோகன் சக்ரவர்த்தி க்ரீன் ஹியூமர் என்ற பெயரில் தனி வலைத்தளத்தில் தனது இயற்கை சார்ந்த விஷயங்களை எழுதி  வரைந்து வெளியிட்டு வருகிறார். இந்து ஆங்கிலம் தேசிய நாளிதழிலும் இவரது கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வருகிறது.  டிங்கிள் காமிக்ஸ்  விலங்குகள் பேசுவது போல இவரது காமிக்ஸ்க

மனித வளக்குறியீட்டெண்டில் இந்தியாவுக்கு 129வது இடம்!

படம்
giphy நூற்றி எண்பத்தைந்து நாடுகளைக் கொண்ட மனித வளக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா, 129 வது இடத்தைப் பிடித்துள்ளது.  போனமுறையை விட இம்முறை ஒரு இடம் முன்னேறி உள்ளது. மனித வளக்குறியீடு என்பது ஒருவரின் தனிமனித வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இதனை ஐ.நா அமைப்பு பட்டியலிட்டு வெளியிடுகிறது. தொண்ணூறுகளிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்களின் வாழ்நாள் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்களின் அளவு 3.5 ஆண்டுகளாக கூடியுள்ளது. தனிநபர் வருமானம் 250 சதவீதம் அளவாக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மனிதவளக் குறியீட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், ஜன்தன்யோஜனா ஆகிய திட்டங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2005 லிருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வந்துள்ளனர். உலகில் வறுமையில் உள்ளவர்களின் அளவில் இது 28 சதவீதம் ஆகும். மேலும், உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவு உயரவில்லை. 24 சதவீதமாக உள்ளது. தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பார்டர் மார்க

வெப்பமயமாதலின் விளைவுகள் என்ன?

படம்
புத்தக அறிமுகம் உலகில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதலால் அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றுகிறது. அல்லது மேக உடைப்பு ஏற்பட்டு வெள்ளம், அல்லது புயல் என ஏதேனும் மிதமிஞ்சி தாக்குகிறது. வெப்பமயமாதலுக்குப் பிறகு உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், அரசியல் மாற்றங்களைக் குறித்து ஆசிரியர் டேவிட் பேசுகிறார்.  நீர் எப்படி நமக்கு முக்கியமோ அதேபோலத்தான ஒயின் மற்றும்  காபி கூட. லண்டன் டூ சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானப் பயணத்தில் பல்வேறு நீர்ம பொருட்களைப் பற்றி மார்க் விவரிப்பதே நூலின் சுவாரசியம். லேபில் உள்ள பொருட்களோடு அலையடிக்கும் கடலும் உண்டு.  பாலினம் பொறுத்து ஆண், பெண் மூளைகளின் திறன்கள் மாறுவது உண்மையா என்பது பற்றி தீர்க்காமாக ஜினா ரிப்பன் ஆராய்ந்து எழுதியு ள்ள நூல் இது.  அமெரிக்காவை கதிகலக்கிய ஏலியன் என்ற கம்ப்யூட்டர் ஹேக்கரின் கதை இது. தற்போது பல்வேறு வங்கிகள் நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உதவி வருகிறார் என்றாலும் முன்னர் இவரது வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. அது குறித்த அறிமுகம் அருமை.  நன்றி: குட்ரீட்ஸ்