இடுகைகள்

தெளிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

படம்
  மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம். பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும். வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இரு