இடுகைகள்

ஹரிஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!

படம்
                      காந்தியை , இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம் . அவர் எப்படி சூழலை , நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள் . இடையறாது , தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது . இதற்கு என்ன காரணம் ? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே ? அதற்கு காரணம் , காந்திக்கு இந்தியா பற்றியும் , மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது . அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார் . தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது . 1915 ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார் . அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை . ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு அவருக்கு இருந்தது . ஆனால் இதைக்கூட காந்தியின் பேராசைக