இடுகைகள்

செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு செய்திகள்! - மலமள்ளும் அவலம் - புற்றுநோயில் மூன்றாவது இடம்!

படம்
giphy மலமள்ளும் அவலத்தை ஒழிக்க முயற்சி அண்மையில் மத்திய அரசு மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்காக 1.25 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம்  கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகளையும், சாதனங்களையும் வாங்க உள்ளது. கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 500 நகரங்களுக்கு இந்த கருவிகள் பயன்படவிருக்கின்றன. மலமள்ளும் மற்றும் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மரணங்கள் பற்றி உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதன் விளைவாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய செயல்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தை வீட்டுவசதித்துறை, நகரமயமாக்கல் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று அமைச்சகம் ஆகியோரின் உதவியுடன்தான் சாத்தியப்படுத்த முடியும். அம்ருத் என்ற திட்டத்தின் இதனை இணைத்து செயல்படுத்தவிருக்கின்றனர். பாதுகாப்பான கருவிகளை அணிந்துகொண்டு மலக்குழிக்குள் இறங்குவது , பாதாளச்சாக்கடைக்குள் இறங்குவது தவறான வழிகாட்டுதல் ஆகும். அவற்றை மனிதர்கள் இன்றி இயந்திரங்களே செய்வது நல்லது. அந்த இடத்திற்கு அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பவர்களும் வருவது சிறப்பான ஒன்று. நன்றி - எகனாமிக் டைம்ஸ் - நிதி

புத்தரை நிர்மாணிக்கும் ஆப்கன் அரசு- கலாசார மறுமலர்ச்சி!

படம்
மீண்டும் புத்தர்! 2001 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட புத்தரின் சிலைகள் ,தற்போது அமெரிக்க அரசின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ”புத்தரின் சிலைகளைச் சீரமைப்பதன் மூலம் எங்கள் கலாசாரத்தை மீட்கிறோம்” என்கிறார் அருங்காட்சியக மியூசிய இயக்குநரான மொகமத் ரஹிமி. மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்! கேரளத்தின் திருவனந்தப்புரத்தில் துணை ஆட்சியராக பார்வைத்திறன் அற்ற பிரஞ்சல் பாடீல் பதவி ஏற்றிருக்கிறார். மகாராஷ்டிரத்தைச்சேர்ந்த இவர் 2016 இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி வென்றவர். சமூகநீதித்துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றவுள்ள பிரஞ்சல், இந்தியாவின் முதல் பார்வைத்திறன் அற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிலவில் இங்கிலாந்து! இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பேஸ்பிட் எனும் நிறுவனம், 2021இல் நிலவிற்கு ரோவரை கொண்டு செல்ல உள்ளது.  விண்வெளிக்கு 1.3 கி.கி. எடைகொண்ட ரோவரை ஆஸ்ட்ரோபாடிக்  நிறுவன லேண்டர் கொண்டு செல்லும். அறிவியல் நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூறியுள்ளார் ஸ்பேஸ்பிட் நிறுவனத் தலைவரான பாவ்லோ தனாஸ்யுக். மின் சிக்கனம்! பஞ்சாபில் மின்சார வாரியம் மின்சாரத்தையும், நீரையும் சிக

செய்தி ஜாம்!

படம்
செய்தி ஜாம்! ஆஹா! ராணுவப்பள்ளி சாதனை! ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் பள்ளி தேர்ச்சியில் சாதனை செய்துள்ளது. அண்மையில் வெளியான 10ஆம் வகுப்பு தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். ராணுவம், அங்கு 43 பள்ளிகளை நடத்திவருகிறது. அசத்தல்! குப்பை லட்சியம் நேபாள அரசு, ராணுவப் படைகளின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 14 தொடங்கிய இப்பணியில் 5 ஆயிரம் கி.கி. கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 45 நாட்களில் 10 ஆயிரம் கி.கி கழிவுகளை அகற்றுவதே இத்திட்ட நோக்கம். எச்சரிக்கை! பெங்குவின்கள் இனப்பெருக்கத்திற்கு இடமின்றி அழிந்து வருவது, பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு (BAS) மூலம் தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெப்பமயத்தால், வெடல் கடல் பகுதியருகே உள்ள ஹாலே பே காலனி எனும் பெங்குவின்களின் வாழிடம் சிதைந்தது. இதில் 10 ஆயிரம் பெங்குவின்கள் இறந்தன. அச்சச்சோ... பரவும் அம்மை! இந்த ஆண்டின் இருமாதங்களில் 42 ஐரோப்பிய நாடுகளில் 34 ஆயிரத்து 300 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பேனியா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோ