இடுகைகள்

ரிச்சர்ட் பிரான்ஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விரும்பிய வேலையைச் செய்தாலே பணம் தேடிவரும்! - ரிச்சர்ட் பிரான்ஸன் - டோன்ட்கேர் மாஸ்டர் - என். சொக்கன்

படம்
  வாசிப்பு.... ரிச்சர்ட் பிரான்ஸன்  டோண்ட்கேர் மாஸ்டர் என்.சொக்கன் கிழக்கு பதிப்பகம் வர்ஜின் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர் இவர் என்று ரிச்சர்டை காட்டினால் யாருமே நம்ப மாட்டார்கள். காரணம், கோட் போட்டு டை கட்டி போஸ் கொடுக்கும் ஆள் கிடையாது. மீட்டிங்குகளில் பாதியிலேயே பலூனில் பறக்க போய்விடுவார். பேசுவதிலும் பெரிய விற்பன்னர் கிடையாது.  ஆனால் உலகில் வர்ஜின் குழுமங்கள் தொடங்காத நிறுவனங்கள் கிடையாது. ஏராளமான நிறுவனங்களை மனம்போன போக்கில் தொடங்கவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளை செய்து வென்றவர், தற்போது, விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் முயற்சிகளை செய்தபடி இருக்கிறார்.  நூலின் தொடக்கம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தொடக்கம் போல எழுதப்பட்டுள்ளது. பலூனில் பறந்துகொண்டிருப்பவர், கடலில் குதித்தாரா அல்லது பலூனில் உள்ள எரிபொருள் இருக்கும்வரை அதிலேயே பயணித்து கீழே விழுவாரா என படிக்கும்போதே பதற்றம் ஏற்படுகிறது.  ரிச்சர்ட் பிரான்ஸன் நூலில் இதுபோல ஏராளமான சம்பவங்கள் உள்ளன. இந்த ஒன்றை மட்டுமே சொல்வதற்கு காரணம், இது தொடக்கம்தான் என்பதற்காகவே.  ரிச்சர்ட் தான் வாழ்வில் முதல் வெற்றி பெற்றது ஸ்டூடண்ட் இதழ் மற்றும் வர்