இடுகைகள்

அசுரகுலம் 3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக விதிகளை மதிக்காத சைக்கோபாத் கொலையாளிகள்!

படம்
  சமூகத்தில் விதிகள், நெறிமுறைகளை பின்பற்றி நடப்பதற்கு சோசியலைசேஷன் என்று பெயர். இது ஒரு சிக்கலான செயல்முறை. நடைமுறையில் விதிகள் எப்படி கடைபிடிக்கப்படுகின்றன என்பதே முக்கியமானது. அவை என்னென்ன என்று பார்ப்போமா,   குழந்தை வளர்ப்பு, பள்ளி, சமூக அனுபவங்கள், மதரீதியான சடங்குகள், விழாக்கள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக ஒருவர் வாழ்ந்த வந்த சமூகத்தின் பண்பாடு அடிப்படையில் எதை செய்யவேண்டும் கூடாது என்பது தெளிவாக மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சைக்கோபாத்களைப் பொறுத்தவரை தனது மனதில் உள்ள சமூக விதிகளை புறக்கணித்து தனது நலன்களுக்கு ஏற்பட ஒரு செயலைச் செய்வார்கள். இவர்களுக்கு குற்ற உணர்ச்சி என்பது அணுவளவும் இருக்காது. சமூக விரோத செயல்களான கொள்ளை, கொலை என எதுவும் இந்த மனநிலையில் சைக்கோபாத்களுக்கு சாத்தியமே. சிறுவயதில் ஒருவர் செய்யும் செயல், அதனால் ஏற்படும் பின்விளைவுகள், தண்டனை ஆகியவை அவரது பிற்கால வாழ்க்கையை மாற்றும். இந்த வகையில், சைக்கோபாத்களுக்கு மனதில் அறவுணர்வு இருக்காது. வங்கியை கொள்ளையடிக்க வேண்டும் என்றால் யோசித்த வேகத்தில் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அதனால் என்னாகும், காவல்து

கொலைக்கு காரணம் பலவீனமான நபர்கள்தான் - பொய்யின் பலமும், பலவீனமும்

படம்
  கொலைகளை செய்பவர்கள் மாட்டிக்கொண்டால் என்ன சொல்லுவார்கள்? நான் செய்யவில்லை என்பார்கள். இல்லையென்றால் கொலைக்கு காரணம் கொலையானவர்கள்தான் அவர்கள் தான் அப்படிசெய்ய தூண்டினார்கள் என்று கூட கூறுவது உண்டு. இதெல்லாம் இல்லாமல் நினைவிழப்பு, அம்னீசியா, ஆளுமை பிறழ்வு என்று பலவித நோய்களை சொல்லி தண்டனையிலிருந்து தப்பிக்க முயல்பவர்களும் கூட உண்டு.   சைக்கோபதி செக்லிஸ்ட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கைதி ராபர்டிடம் பேசினார். அப்போது அவர், தன்னால் கொலையானவர்களுக்கு நல்ல விஷயம்தான் நடந்துள்ளது என்றார். கொலை செய்த காரணத்தால்தான் கொலை செய்யப்பட்ட தரப்பினரின் பேட்டி, செய்தி, முகங்கள் வெளியில் தெரிந்தன. நாளிதழ்களில் பெண்கள் என்னைப் பற்றி நல்லவிதமாக கூறியிருக்கிறார்கள். சிலர் எனக்கு நன்றி கூட தெரிவித்திருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்தவில்லை என்றுதானே ஆகிறது என நேர்மறையாக பேசினார்.   அலுவலக அரசியல்களால் வேலையிழந்தவர்கள் தங்களைப் பற்றி கழிவிரக்கமாக பேசி புலம்புவதைப் போலவே தொடர் கொலைகாரர்களும் பேசுவது உண்டு. ஆனால் அவர்கள் பேசுவது கொன்றவர்களை விட அவர்களை கொலை செய்த தான்தான் மிகவும் பாவம்… சபிக்கப்

குற்றவாளியுடன் சில நாட்கள்- குற்றத்தை உணர முடியாத நண்பர்கள், காதலிகள்

படம்
  1974ஆம் ஆண்டு கார்ஸ்வெல் கார், அவரது பதினைந்து வயது மகன் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை பால் என்பவர் வீடு புகுந்து கொன்றார். பிறகு, அவர்களின் கார், துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அட்லாண்டாவில் உள்ள ஹாலிடே இன் என்னும் இடத்திற்கு வந்தார். இங்குதான் அவருக்கு பத்திரிகையாளர் சாண்டி ஃபாகெஸின் அறிமுகம் கிடைத்தது. சாண்டி, விடுதியில் உள்ள பாருக்கு மதுபானம் அருந்த வந்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பால், அவருடன் பேசினார். பிறகு சாண்டியும் பாலும் இரவு உணவு அருந்தினார்கள். அடுத்து என்ன செக்ஸ்தான். அதில்தான் சாண்டி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். பால், பிறரின் தூண்டுதல் இன்றி சுயமாக உடலுறவு கொண்டு திருப்தி கொள்ள முடியாதவர் என   சாண்டி அறிந்தார். தனது குறைபாட்டைக்கூட கிண்டலாக பால் பேசியது சாண்டியை ஆச்சரியப்படுத்தியது. சாண்டிக்கு பாலுடன் சிறிதுகாலம் வாழ்ந்து பார்க்கலாம் என தோன்றியது. ஒருமாத காலம் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகுதான் சாண்டி, பாலை விட்டு பிரிந்து சென்றார். அவரை தொடர்புகொள்ள பால் நிறைய முறை முயன்றார். ஆனால் காவல்துறை சாண்டியைத் தேடி வந்து பால் பற்றிய தகவல்களை கேட்டபோதுதான் அவர் தொடர்

கொலைகார ஆண் துணைக்கு பெண்கள் உதவி செய்வதற்கான காரணங்கள்!

படம்
  உணர்வு ரீதியான உறவுகள் என்று சில உண்டு. ஒருவரின் காதலுக்காக, அவர் தன்னை விட்டுப்போக கூடாது என்பதற்காக.. நிறைய குற்றச்செயல்களை அறியாமலேயே செய்வார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படி நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இதில், வோரல் என்பவர்தான் குற்றவாளி. இவர், தன்னைக் காதலிக்கும் மில்லர் கொண்டு வரும் இளம்பெண்களை வல்லுறவு செய்து கொல்வார். சவங்களை புதைக்கும் பாக்கியம் வேறு யாருக்கு, மில்லருக்குத்தான். இப்படி ஏழு பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இதை சரி, தவறு என எப்படியும் மில்லருக்கு கூறத் தெரியவில்லை. அவருக்கு வோரலின் காதல் தேவைப்பட்டது. ஆனால் வோரல் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை த் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மில்லரைப் பிடித்தனர். வோரல் மீது கொண்ட காதலுக்காகத்தான் குற்றங்களை செய்தேன். கொலை செய்யவில்லை. உடல்களைப் புதைத்தேன் என்று சொல்லி புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். இதுபோன்ற கொலைஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர், எளிதாக குற்றங்களை தான் செய்துவிட்டு அதற்கான பல்வேறு செயல்களை பிறரை செய்யவைப்பவராக இருப்பார்..இப்படி ஆணைகளைக் கேட்டு நடப்பவர், மனதளவில் சமநிலை இல்லாதவராக எளிதில் கோப

கணவன் வல்லுறவு செய்து பெண்களைக் கொல்ல ஆதரவு தந்த அன்பு மனைவி

படம்
  இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைக்கதை இது. அங்கே வாழ்ந்த ஃபிரெட் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் இணைந்து இருபது ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்று புதைத்து வந்தனர். வீட்டின் கீழ்த்தளத்தில் பிணங்களைப் புதைத்தவர்கள் அதற்கு மேல் கற்களைப் பதித்து மேல்தளத்தில் பிள்ளைகளை படுத்து தூங்க வைத்திருந்தனர். ஃபிரெட் மீது அவரது மகளே வல்லுறவு புகாரைக் கொடுத்தபோதுதான், சமூகநலத்துறைக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. ஆளைப்பார்த்தால் அழகு வேலையப் பார்த்தால் எழவு என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் ரோஸ் குடும்பம் இருந்த்து. ஃபிரெட் மூலம் ரோஸிற்கு எட்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்ய ரோஸ் மேரி அனுமதித்த கோரம் யாரும் நினைத்தே பார்க்காதது. சமூக செயல்பாட்டாளர்கள் ரோஸின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் ரோஸ் விபச்சாரம் செய்து சம்பாதித்து வந்தது தெரிந்தது. வீட்டில் பாலியல் விளையாட்டுகளை விளையாடும் பொருட்கள் நிறைய இருந்தன. குழந்தைகளை விசாரித்தபோது ஹெதர் என்ற சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டாள் என புகார் கூறினர். இதைப்பற்றி கேட்டபோது ஹெதர் போல புதைத்த

அப்பாவின் குடிப்பழக்கத்தால் குற்ற உலகில் நுழைந்த சகோதரர்கள்

படம்
  ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அதற்கு அவர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் காரணமல்ல. அவருக்கு ரோல்மாடலாக யாரேனும் குடும்பத்தில் இருந்திருக்கலாம். கொலை செய்துவிட்டு சிறை சென்றிருக்கலாம். அவரே கொலை செய்வதற்கான ஆர்வத்தை பயிற்சியை புகைப்படங்கள், வீடியோக்கள், வேட்டை வழியாக தூண்டியிருக்கலாம். இந்த வகையில் கென்னத் பியான்சி, ஆஞ்சலோ பியூனோ, ஹில்சைட் ஸ்ட்ரேங்லர்ஸ் ஆகியோர் உறவினர்களாக இருந்தனர் இவர்களால் ஒரு டஜனுக்கும் மேல் பெண்கள் கொல்லப்பட்டனர். 1964ஆம் ஆண்டு லாரி ரேனஸ் என்பவர் அமெரிக்காவில் சுற்றித் திரிந்து பல்வேறு கொலைகளை செய்தார். வீட்டில் அமைதியாக இல்லாத காரணத்தால் எப்போதும் கோபமாகவும் வீட்டுக்கு வெளியேதான் எப்போதும் இருந்தார். ராணுவப் பயிற்சி முடிந்தபிறகு இந்தியானா, ஓஹியோ, கென்டக்கி என சென்று கொண்டிருந்தார். போகும் வழியெல்லாம் கொலைகளைச் செய்தார். வண்டிகளை கைகாட்டி நிறுத்தி ஓட்டுநரைக் கொன்று அவரின் பணம், பொருட்களைக் கைப்பற்றுவதுதான் லாரியின் பாணி. காவல்துறை லாரியை பிடித்தபோது தான் கொன்ற பள்ளி ஆசிரியரின் ஷூக்களையும், வாட்சையும் திருடி கட்டியிருந்தார். லாரி. விசாரணையில் ஐந்து நபர்களைக்

குடும்பத்துடன் கொலை செய்பவர்களின் மனநிலை

படம்
  1870ஆம் ஆண்டில் ஹெல் பெண்டர்ஸ் என்ற புகழ்பெற்ற கொலைகார குடும்பம் இருந்தது. இப்படி நான் கூறுவது 1873க்குப் பிறகுதான். அதற்கு முன்வரை ஆன்மிக அனுபவம் என்று சொல்லி பெண்டர் குடும்பம் வழிப்போக்கர்களை வீட்டுக்கு அழைத்து சோறிடுவார்கள். பிறகு சுத்தியலை வைத்து மண்டையை சிதறடித்து ஆட்களைக் கொன்று அவர்களின் பணத்தை சுருட்டுவதுதான் பெண்டர்களின் பாணி. உடல்களை பூத்தோட்டத்தில் புதைத்து விடுவார்கள்.   மருத்துவர் வில்லியம் என்பவரின் தம்பி, பெண்டரின் வீட்டிற்கு கேட்டியின் ஆன்மிக அனுபவத்தை பெற வந்தார். வந்தவர் அப்படியே சுத்தி மூலம் அடிக்கப்பட்டு முக்தி அடைந்துவிட்டார். இதை தெரியாத மூடரான வில்லியம் தம்பியைக் காணவில்லை என புகார் கொடுத்துவிட்டார். அந்த நேரம் மழை சீசன் வேறு. மழைபெய்து பூத்தோட்டம் முழுக்க இளகிப்போக புதைத்த பிணங்கள் வெளியே வந்துவிட்டன. காவல்துறை பெண்டரின் குடும்பத்தை பிடிக்கும்   முன்னேர அனைவரும் தப்பி விட்டார்கள். பத்தாயிரம் டாலர்களுக்கு மேல் ஆட்களைக் கொன்று சுருட்டியது பெண்டர் குடும்பம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டது.   கொலைக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் கிடையாது. கொலை தொடர்

மனதில் பெருகும் எல்லையில்லாத வன்முறைக்கான காரணம்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஒருவர் மனதில் தோன்றும் அளவிடமுடியாத வன்முறைக்கு என்ன காரணம்? குறிப்பிட்ட சாதியினரின் ரத்தத்தில் வன்முறை உள்ளது என சிலர் கூறலாம்.ம ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அட்ரியன் ரைன் என்பவரின் தலைமையில் அமைந்த குழுவினர், மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை வன்முறைக்கு காரணம் என்று கண்டறிந்தனர்.   இவரின் ஆராய்ச்சியில் வன்முறையாளர்களின் மூளையில் உணர்ச்சிகளை இயக்கும் மூளையின் பகுதியில் நிறைய பகுதி செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த மனிதர்கள் செய்யும் செயல்களின் பயமே இருக்காது. ஆக்ரோஷமாக, குறைந்த எதிர்வினையாற்றும் விதமாக செயல்படுவார்கள். இவர்களை எளிதாக தூண்டிவிட முடியும். எடுக்கும் முடிவுகளிலும் பொறுமை, நிதானம் இருக்காது. அனைத்துமே அதிரடியாகத்தான் வன்முறையை இலக்காக கொண்டுதான் இயங்குவார்கள்.   கற்பனையின் துணையால் சூழலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்கள் இவர்கள். பிறரை விட சிறப்பான தகுதிகள் கொண்டவர்கள் என நினைத்துக்கொண்டு வன்முறையைக் கையாள்வார்கள். கொலை செய்யாமல் இவர்களால் வாழவே முடியாது என கொலையை வல்லுறவுவை பிராண வாயு போல நின

கொலை செய்வதற்கு காரணம் தேவையில்லை! - கொலைகாரர்களின் உளவியல் ரகசியம்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 கொலை செய்வதற்கான காரணங்கள் என்பதை காவல்துறையினர் எப்போதும் தேடுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் எந்த காரணமும் இல்லை என்று சொல்லும் குற்றவாளிகள் உலகில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் கில்மோர். இவர், 1976இல் எரிபொருள் நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு பணியாற்றிய மேக்ஸ் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அவரும் பணிந்தார். கையில் உள்ள, ட்ராயரில் உள்ள பணத்தைக் கூட தர நினைத்தார். ஆனால் கில்மோர் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட வில்லை. முட்டிபோட்டு உட்காரவைத்து பின்புறத்தில் இருந்து சுட்டுக்கொன்றவர், அதை தனக்கும் தன்னை விட்டுச்சென்ற காதலிக்குமான நினைவுப்பரிசாக நினைத்தார். இதற்குப் பிறகு அப்படியே சென்றவர், மோட்டல் ஒன்றில் நுழைந்தார். அங்கு இருந்தவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டியவர், அவர் அதற்கு பணிந்தவுடன் அவரையும் கொன்றார். கில்மோரை அவரது உறவினரே காட்டிக்கொடுத்தார். எதற்காக அந்த கொலை செய்தார் என்றால் தான் தொடர்ச்சியாக கொலை செய்யவேண்டும். மிரட்டிய விவகாரம் தெரிந்தால் காவல்துறை அவரை கைது செய்துவிடும் என கில்மோர் நினைத்தார். மூன்றாவது கொலை செய்

தனிமைத் துயரைப் போக்கும் பிணங்கள் - ஜெப்ரி டாமர்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெப்ரி டாமர் பெயரை குற்ற உலக வரலாறு எப்போதும் மறந்திருக்காது. இவரது பெயரில் ஓடிடியில் தொடரைக் கூட வெளியிட்டு வருகிறார்கள்.   1991ஆம் ஆண்டில் பதினேழு பேர்களை வெட்டி கொலை செய்திருந்தார். இவர் கொலை செய்ய திட்டமிட்டவர்களில் ஒருவர் மட்டும்   தப்பிப் போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கொலைத் திருவிழாவை தடுத்துவிட்டார். இல்லையென்றால் கொலைகள் ஒருவழியாக ரவுண்ட் ஃபிகராக வந்திருக்கும். கொலை செய்தவர்களின் உடல்களை, வெட்டியெடுத்த உடல் பாகங்களை தடய அறிவியல் துறையை விட தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் டாமர். அதெல்லாம் காவல்துறைக்கு அவரது குற்றத்தைப் புரிந்துகொள்ள உதவின. குளிர்பதனப் பெட்டியில் குடல், குண்டாமணி, இதயம், நுரையீரல் என அனைத்தையும் பங்கு பாகம் பிரித்து வைத்திருந்தார். உடல்களை கரைக்க, பதப்படுத்தவென பேரல் நிறைய அமிலங்களும் இருந்தன.   காவல்துறை சேகரித்தது பதினொரு ஆண்களின் உடல் பாகங்களைத்தான். அதற்கும் மேல் ஆறு பேர் உண்டு என கூடுதல் தந்து உதவினார் டாமர். பின்னே இதெல்லாம் சாதனைதானே? பதினெட்டு வயதில் ஸ்டீவ் ஹிக்ஸ் என்பவரைக் கொலை செய்து ரத்த ருசி கண்டார்.

பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெஃப்ரி டாமர், நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள். நீல்சன் தனக்கு தேவையான இரைகளை   பப்களில் கண்டுபிடித்தார்.   இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச் செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக் கொண்டு   கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார். ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன்,   பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்களை குடித்தார்கள். என்னதா

கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சினால் பேரின்பம்! - மனித வடிவில் சுற்றிய காட்டேரிகள்

படம்
    அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 காட்டேரி இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் அஹ்மத் சுராத்ஜி. இவர் அந்த நாட்டில் மாந்த்ரீகம் படித்த ஆள். இவரை காவல்துறை கைது செய்தபோது நாற்பத்திரெண்டு கொலைகளை செய்திருந்தார். கரும்புக்காட்டில் இருபதுக்கும் அதிகமான மண்டையோடுகளை காவல்துறை கண்டெடுத்து பீதியானது. இன்னும் முப்பது கொலைகளை செய்த ஆர்வமாக இருந்தவரை கைதும், சிறையும் கட்டுப்படுத்திவிட்டது பரிதாபம்தான்.   எப்படி ப்ரோ கொலை செஞ்சீங்க என குற்றவரலாற்றை காவல்துணை நிமிண்டி   கேட்க, அதற்குத்தானே அஹ்மத் காத்திருந்தார். முதலில் பெண்களை பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்வேன். பிறகு அவர்களின் வாயில் உள்ள எச்சிலைக் குடிப்பேன் என திகில் ஊட்டியிருக்கிறார். இப்படி எச்சிலைக் குடிப்பதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்திருக்கிறார். காவல்துறை தன்னை பிடித்துவிட்டது. சாகப்போகிறோம் என ஒருவர் தெரிந்துகொண்டால் எப்படி இருப்பார். மனதளவில் நொறுங்கியவராகத்தானே, ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஹார்மன், எப்படி கொலை செய்தேன் என்பது மகிழ் திருமேனி பட கொலை போல துல்லியமாக சொன்னார். உனக்கென்ன தண்டனை கி

இயங்க முடியாத என்னை உன் கண்களால் பார்க்காதே- சிகாட்டில்லோவின் கொலை அட்டூழியங்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஓநாயின் வாரிசு   ஒருவர் தன்னை ஓநாயாக உணர்ந்து அப்படியே நடந்துகொண்டால் எப்படியிருக்கும்? பதற்றமாக இருக்குமா இல்லையா? அப்படியான மனநிலை பிரச்னைகள் உலகில் நடந்துள்ளன. அப்படி ஒன்றுதான் இப்போது நீங்கள் படிக்கப் போவதும் கூட. பிரான்ஸ் நாட்டில் ஜீன் கிரேனியர் என்ற பதிமூன்று வயது சிறுவன்தான் கதையின் கதை நாயகன். பாதிரியாரின் மகன் என்று தன்னைக் கூறியவன், தனது ஆன்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டதாக அர்ப்பணித்துவிட்டதாக சொல்லி சிறுமிகளை பிடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான். ஓநாயின் தோலாடையை அணிந்தால் ஒருமணி நேரத்தில் ஓநாயாக மாறிவிடுவேன் என்று கதை கட்டியவன், ஊர் முழுக்க வதந்தியைப் பரப்பி வந்தான். அவன் சொன்னதையும் நம்பி ஒன்பது பேர் அவனிடம் செட்டு சேர்ந்து நண்பர்களாக மாறினார்கள். பிறகு குற்றச்செயல்கள் அதிகரிக்க அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் இதுபற்றி ஆராய்ச்சி செய்து ஜீனைக் கண்டுபிடித்து விசாரித்தது. அவன், அலட்டிக்கொள்ளாமல் எம் என்ற பெயருடைய கருப்பு நிற மனிதன் தனக்கு ஓநாய் உடையைக் கொடுத்து விரைவில் ஓநாயாக மாறிவிடுவாய் என்று கூறியதாக கூறினான். பிறகுதான், தான் குழந்தை, சிற