கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சினால் பேரின்பம்! - மனித வடிவில் சுற்றிய காட்டேரிகள்

 









 

அசுரகுலம்

ரத்த சாட்சி 1.0

காட்டேரி

இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் அஹ்மத் சுராத்ஜி. இவர் அந்த நாட்டில் மாந்த்ரீகம் படித்த ஆள். இவரை காவல்துறை கைது செய்தபோது நாற்பத்திரெண்டு கொலைகளை செய்திருந்தார். கரும்புக்காட்டில் இருபதுக்கும் அதிகமான மண்டையோடுகளை காவல்துறை கண்டெடுத்து பீதியானது. இன்னும் முப்பது கொலைகளை செய்த ஆர்வமாக இருந்தவரை கைதும், சிறையும் கட்டுப்படுத்திவிட்டது பரிதாபம்தான்.  எப்படி ப்ரோ கொலை செஞ்சீங்க என குற்றவரலாற்றை காவல்துணை நிமிண்டி  கேட்க, அதற்குத்தானே அஹ்மத் காத்திருந்தார். முதலில் பெண்களை பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்வேன். பிறகு அவர்களின் வாயில் உள்ள எச்சிலைக் குடிப்பேன் என திகில் ஊட்டியிருக்கிறார். இப்படி எச்சிலைக் குடிப்பதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்திருக்கிறார்.

காவல்துறை தன்னை பிடித்துவிட்டது. சாகப்போகிறோம் என ஒருவர் தெரிந்துகொண்டால் எப்படி இருப்பார். மனதளவில் நொறுங்கியவராகத்தானே, ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஹார்மன், எப்படி கொலை செய்தேன் என்பது மகிழ் திருமேனி பட கொலை போல துல்லியமாக சொன்னார். உனக்கென்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா என்று கேட்டதற்கெல்லாம் மசிகிற ஆளா அவர். தூக்கு தண்டனை கொடுக்கும் நாள்தான் எனது வரலாற்றில் கல்யாண நாள் என உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தார். இவர் ஆண் விபச்சாரர் ஒருவருடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தெருவில் திரிந்த ஆதரவற்ற சிறுவர்களை கொலை செய்தார். முதலில் அவர்களை வீட்டுக்கு கூட்டி வந்து ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல் சோறு போல போட்டு திருப்தி செய்து தூங்கும்போது அவர்களை கழுத்தை கடித்து ரத்தம் உறிஞ்சி கொல்வார். அவர்களை வல்லுறவு செய்யும் நடவடிக்கையும் உண்டு. முதல் உலகப்போர் சமயம் என்பதால் கொலை செய்வது எளிதாக இருந்தது. உடல் பாகங்களை ஹார்மன் தானே கறிக்கடை வைத்திருந்ததால் அதில் சேர்த்து லாபம் பார்த்தார். மீதியுள்ள உடல் எலும்புகளை அருகிலிருந்த சாக்கடையில் வீசினார். இதுவே பின்னாளில் அவரைக் காட்டிக் கொடுக்கும் வினையான ஆதாரமானது.

ஹார்மனுக்கு வல்லுறவு செய்தவர்களை கழுத்தை கடித்து ரத்தம் குடித்தபோதுதான் உடலுறவில் உச்சகட்டத்தை எட்டுவார்களே அந்த தன்னை மறந்த பேரின்பம் கிடைத்தது. அதனால்தான் அவர் கொலையை பழக்கமாக்கி கொண்டார்.

பீய்ச்சி அடிக்கும் ரத்தம் பார்த்தால்தான் என்னால் சுவாசிக்க முடிகிறது. ரத்தத்தைக் குடிக்கும்போதுதான் எனது எதிர்பார்ப்பு உச்சம் பெற்று சற்று அமைதியாக முடிகிறது என்றவர்தான் பீட்டர் கர்டன். இவரை காவல்துறை வளைத்து வலை வீசி பிடித்து கொலைகளை தடுக்கவில்லை. அவரே சலித்துப் போய் கடத்திய பெண்ணை கருமமே கண்ணாக வல்லுறவு செய்துவிட்டு, உயிரை பிச்சையாக போடுகிறேன். போ போய் போலீஸை இந்த அட்ரசுக்கு கூட்டிக்கிட்டு வா என்று சொல்லி தானே வாலன்டியராக கைதாகி மரணதண்டனை பெற்றவர்.

ஒன்பது வயதில் விபத்து போல நிகழ்ச்சி ஒன்றை கட்டமைத்து இரு நண்பர்களை கொன்றார். பிறகு விடுதி ஒன்றில் பத்து வயது சிறுமியைக் கொன்றார். கொன்ற உடலை மருத்துவர் சோதித்த போதுதான் உடலில் ரத்தத்தின் அளவு குறைந்திருப்பதை கண்டார்.  சிறுமி, இளம்பெண், மத்திய வயது ஆள் என யாரையும் விட்டு வைத்ததில்லை கர்டன். தெலுங்கு ஹீரோக்கள் போல சுத்தியை தூக்கி மண்டையில் போட்டு பிளப்பதோடு, கையில் கத்தி இருந்தால் அதை வைத்து இருபது, முப்பது முறை உடலை ஓட்டை போட்டு விளையாடுவது பிடித்தமானது.

காவல்துறை கர்டனை பிடிப்பதில் தடுமாறியதால் ஒருமுறை உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு அவரே கடிதம் எழுதி அனுப்பி ஐந்து வயது சிறுமியின் உடலை எடுத்து மார்ச்சுவரியில் வைக்கச் சொன்ன கூத்தும் நடந்தது. இதில் உல்டா அடித்தது கர்டனை சோதித்த இரு உளவியல் மருத்துவர்கள்தான். ஆனால் நீதிமன்றம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கர்டனுக்கு மரணதண்டனை விதித்தது. அவருக்கு தனது கழுத்தை பிளேடால் அறுத்து ரத்தம் கொப்பளிப்பதை குமிழிட்டு வழிவதைப் பார்க்க ஆசை. அந்த ஆசை இறுதியில் நிறைவேறவில்லை.

கடவுளாக கிராம மக்களை நினைக்க வைத்து கொலைகளைச் செய்வது, சிறுவர்களின் அழகை ஈர்க்கிறேன் என்று கொலை செய்து ரத்தம் குடிப்பது, உடலுறவு இன்பத்திற்கான கற்பனை என ரத்தம் குடித்து கொலை செய்தவர்கள் பற்றி அறிந்தால் அதிர்ச்சி ஏற்படும். அந்தளவு ஆட்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

புகைப்படம் லாரன்ட் பெனைம் 

கருத்துகள்