இடுகைகள்

கட்டுமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட கம்பிகள், டயர்கள் என எதையும் விடுவதில்லை.  ”

மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்

படம்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி கட்டுமான கலைஞர்  பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு.  நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது.  அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.  லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்? ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்டுமா என்ன? விலை குறை

கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!

படம்
  கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு! அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற  ஒளி ஊடுருவும்  தன்மையில்  இருக்கும் மர இழைகளை  உருவாக்கியுள்ளனர்.  தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.  அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே  ஒளி ஊடுருவும் மர இழைகளை  சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும். கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம், மரத்திலுள்ள லிக்னின், செல்லுலோஸ்