இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயம் சற்றே இடப்பக்கம் அமைந்துள்ளதற்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இதயம் ஏன் சற்று இடப்பக்கமாக உள்ளது? இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையைச் செய்கிறது. இதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இதயத்தின் லப்டப் சத்தம் உங்களுக்கு இதை உறுதிப்படுத்தும். இதில் விதிவிலக்காக சில பேருக்கு பத்தாயிரத்தில் ஒருவருக்கு வலது பக்கம் அமைந்திருக்கும். இதற்குப் பெயர்  dextrocardia’. படம் செய்தி - பிபிசி

ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் இருக்குமா? ஏன் இப்படி உருவாகிறது? பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறைய மார்பக காம்புகள் உண்டு. மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு செட் மார்பக காம்புகளோடு நிற்கிறார்கள். இன்றும் பதினெட்டு நபர்களில் ஒருவருக்கு இதுபோல மூன்று மார்பக காம்புகள் உண்டு. இதில் சில ஜீன்கள் மீண்டும் தூண்டப்பட்டால் இப்படி காம்புகள் உருவாக வாய்ப்புண்டு. இந்த ஜீனின் பெயர்  NRG3. இது ஒரு பெரிய குறைபாடு கிடையாது. விரும்பினால் நீங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக்கொள்ளலாம். 

மது குடித்தால் மூளைக்குள் என்னாகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி மது குடித்தால் பதற்றம் ஏன் அதிகரிக்கிறது? காதலில் பிரேக் அப் ஆகியிருக்கிறது என்றால் டாஸ்மாக்கில் போய் கல்ப்பாக சரக்கு போட்டீர்கள் என்றால் உடனே போனை எடுத்து காதலியிடம் சண்டை போடுவீர்கள். வம்பு இழுப்பீர்கள். காரணம், மது உள்ளே சென்றதும் உங்கள் மூளையில் உடலை தளர்வு செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அப்போது உங்கள் மனதை எது ஆட்கொண்டிருக்கிறதோ அந்த உணர்வை சற்றே உயர்த்தும். இதன்காரணமாக கோபத்துடன் டாஸ்மாக் செல்பவர்கள், சரக்கை அடித்து விட்டு வெளியே வரும்போது கொலை செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். எனவே, ஃபாரம் மாலில் எலைட் பார் திறந்திருக்கிறார்கள். அங்கு வாங்கி வீட்டில் வைத்து அருந்திவிட்டு கலவரம் செய்யாமல் கமுக்கமாக படுத்து தூங்குங்கள். செய்தி - படம் - பிபிசி

கிளிஷேக்களிலிருந்து வெளியே வாங்க தேஜா - சீதா(தெலுங்கு)

படம்
சீதா தெலுங்கு தேஜா ஒளிப்பதிவு சிர்ஷா ரே இசை அனுப் ரூபன்ஸ் ஆஹா! வாழ்க்கையில் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நம்புகிற பெண், மனிதர்கள் அதைவிட முக்கியம் என உணருவதுதான் கதை. இதில் இப்படத்தில் தேறுவது சோனு சூட், காஜலின் நடிப்புதான். பெல்லக்கொண்டம் சீனிவாஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து போகிறார். சோனு சூட், அவரின் அடியாட்களாக வந்து பாடலாகப் பாடும் நடிகர், உதவியாளராக வரும் கணேஷ் ஆகியோர் பிரமாதப்படுத்துகிறார்கள். காஜல் முதல் காட்சியிலிருந்து அட்டாகப்படுத்துகிறார். இசையில் அனுப் ரூபன்ஸ் தன் பங்குக்கு கோயிலம்மா பாடலில் அசர வைக்கிறார். அடச்சே! தேஜாவின் நாயகன், எப்போதும் ஏதோவொன்றை தள்ளி உடைத்து தன் பலத்தை நிரூபிப்பார். நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜீப்பை ஆற்றில் விழுவதிலிருந்து ராணா காப்பாற்றுகிற காட்சி நினைவுக்கு வருகிறதா? அதேதான். இங்கு சீனிவாஸ் அதை அப்படியே மாற்றி பாத்ரூம் கதவை உடைக்கிறார். பஸ் சீட்டைப் பிடுங்குகிறார். கியர் ராடை அசைத்து உடைத்து எடுக்கிறார். இது படத்தின் கதைப் போக்குக்கு எந்தளவு உதவுகிறது. படம் பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தேஜா சார் கிளிஷே

போராட்டங்களின் அடிப்படை- வெல்லுமா -தோற்குமா?

படம்
போராட்டங்கள் வெல்லுமா? ஹாங்காங்கில் ஜூன் பனிரெண்டாம் தேதி தொடங்கிய போராட்டம் ஹாங்காங் கடந்து உலகளவில் மக்களின் கவனத்தையும் ஊடகங்களையும் ஈர்த்தது. காரணம், சீனா வர்த்தக மையமான ஹாங்காங்கை எப்படி பல்வேறு சட்டங்கள் மூலமாக சீனாவின் துணை நாடாக மாற்ற முயல்கிறது என்பதை மக்கள் போராட்டம் உலகிற்கு காட்டியது. காவல்துறை மையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடத் தொடங்கினர். கேரி லாம் என்ற ஹாங்காங்கின் நிர்வாகத்தலைவரை மாற்றக்கோரி போராட்டம் மாறியுள்ளது. முதலில் தொடங்கிய போராட்டம்  லாம் அமல்படுத்திய குற்றச்சட்டம் தொடர்பானது. சாதாரணமாக பேரணி, அமர்ந்து போராடி செய்திகளை உலகிற்கு கூறிய மக்கள் இன்று அதில் வன்முறை வழியாகவும் உணர்த்துவதற்கு தயங்குவதில்லை என்கிறார் டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்த மார்க் ஃபெய்ன்பெர்க். கடந்த ஏப்ரலில் இம்முறையில் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டத்தை மத்திய லண்டனில் மக்கள் முன்னெடுத்தனர். மக்களின் கவனம் ஈர்ப்பது நமக்கொன்றும் புதிதல்ல. மரம் வெட்டி போடுவது, பஸ்களை எரிப்பது, கிடைத்தால் மனிதர்களை பஸ்ஸில் வைத்து எரிப்பது என பல்வேறு வழிகளில் போராட்டம் குறித்து இந்தியளவில்

கட்டாய தானம் பெறுகிறார்களா?

படம்
சீனாவில் மரண தண்டனை பெறுபவர்களின் உடலிலிருந்து, உறுப்புகளை பெறுவது சீனாவில் வழக்கமாக உள்ளது. சீன அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கத்தை விட்டொழித்துவிட்டதாக கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து விசாரிக்கும் தன்னார்வ அமைப்பு லண்டனில் செயல்பட்டு வருகிறது. இது சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை என்றாலும், சீனாவில் நடைபெறும் சட்டவிரோதமான உறுப்பு பரிமாற்றங்களை கேள்விக்குக்குள்ளாக்கி வருகிறது. சீன அரசு உய்குர் முஸ்லீம்கள் மற்றும் ஃபால்கன் காங் மதத்தைப் பின்பற்றுவர்களை இந்த உறுப்பு பரிமாற்ற அறுவைசிகிச்சைகளுக்கு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மறுத்தாலும் அரசியல் கைதிகளையும், தூக்கு தண்டனை கைதிகளையும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வந்துள்ளன. இங்கிலாந்திலுள்ள விசாரணை அமைப்பு நீதிபதி இதுகுறித்து, சீன மருத்துவமனைகளில் எப்படி லிஸ்டில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த நாட்களில் மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. இதற்கு அர்த்தம், உறுப்புகளை லிஸ்ட்படி அவற்றை முன்னமே தயாரித்து வைத்து இருந்தால்தான் சாத்தியம் என்கிறார். ஆய்வு செய்த பனிரெ

தரம் வேண்டுமா? எண்ணிக்கை வேண்டுமா?

படம்
இந்தியா பொருளாதாரம் மெல்ல சரிவை சமாளித்து மீண்டு வருகிறது. அதேசமயம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தடுமாற்றத்தை சமாளித்து வருகிறது. இதில் பாலினம், சம்பள இடைவெளி ஆகிய பிரச்னைகளும் உள்ளது. இதுகுறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை செய்துள்ளது. இருபத்தொரு மாநிலங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் ஆந்திரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. பெண்களுக்கான ஊதியத்தில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதில் இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பாஸ் மார்க் வாங்குகின்றன. இதில் வேலைவாய்ப்பு , சம்பளம் என இரண்டு விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. பீகார், உபி எப்போதும்போல இந்த விஷயத்திலும் பின்தங்கி உள்ளன.  சம்பள இடைவெளி விஷயத்தில் கேரளா முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. சத்தீஸ் வேலைவாய்ப்புகளைத் தருவதில் முன்னிலை வகிக்கிறது. காரணம், இங்கு கட்டுமான வேலைகள் அதிகம் உள்ளன. கோவா, கேரளம் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள

நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை!

படம்
நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை! இந்தியாவின் முதல் பிரதமராக பணியாற்றிய நேரு, கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர். தினசரி பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் உழைத்தவர். நாட்டின் பிரதமராகவும், வெளியுறவுக்கொள்கை அமைச்சராகவும் இருந்தார். இவரின் அரசியல் வாழ்வு அளவுக்கு, இவரின் திருமண வாழ்வு அதிகளவு குறிப்பிடப்படவில்லை. நேரு, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரில் படித்து வந்தார். தந்தை மோதிலால் நேருவுக்கு அவரை ஆங்கிலேயே அரசில் ஐசிஎஸ் அதிகாரியாக வேலைசெய்ய வைக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் நேரு படிக்கும் காலத்திலேயே உலக அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ஐசிஎஸ் அதிகாரியாக தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்களை அவர் பெற்றிருக்கவில்லை. ஆங்கில அரசில் பணிபுரியும் எண்ணமும் அவருக்குக் கிடையாது. விருப்பமற்ற திருமணம் அந்த கால நடைமுறைப்படி நேருவுக்கு திருமணம் செய்வதற்கான பேச்சு தொடங்கியது. இதுகுறித்து தன் தாய்க்கு 1907 ஆம் ஆண்டு நேரு கடிதம் எழுதினார். ”திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால்

மில்லினிய இளைஞர்கள் - சீக்ரெட்ஸ் லிஸ்ட்!

படம்
சீனியர்களை கோப ப்படுத்தும் விஷயம் நாங்கள் மில்லினியல் பாஸ் என பொடுசுகள் பேசுவதுதான். பின்னே அடிக்கடி வயசை நினைவுபடுத்தினால் எப்படி..... தற்போது மில்லினிய குழந்தைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் மில்லினிய செட் பற்றி தெரிந்துகொள்வோம். 1981 - 96 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை மில்லினிய செட்டில் சேர்க்கலாம். இளையவர்கள் என்பதைத்தான் மில்லினியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை ப்யூ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இதில் மூத்தவர்கள் 30 களில் இருப்பார்கள். மில்லினியல் என்ற வார்த்தை 91 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. நெய்ல் ஹோவே மற்றும் வில்லியம் ஸ்ட்ராஸ் ஆகியோரின் நூலான ஜெனரேஷன்ஸ் என்பதில் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களைக் குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஆசிரியர்கள் பயன்படுத்தினர். மில்லினியர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வமுடையவர்கள்தான். 2016 ஆம் ஆண்டு இவர்கள் ஆண்டுக்கு ஐந்து நூல்களை தோராயமாக படித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. முந்தைய ஆய்வில் நான்கு நூல்களைத்தான் படித்தார்கள். டெக்

உலகப்புகழ் பெற்ற உரைகள் - பேட்ரிக் ஹென்றி

படம்
உலகப்புகழ்பெற்ற பேருரைகள் பிரிட்டிஷ் நாட்டு ராணுவம், அமெரிக்காவைத் தாக்கும் முயற்சியில் இருந்தது. அப்போது பேட்ரிக் ஹென்றி, தன் நாட்டு மக்களை போருக்கு ஆயத்தம் செய்யும்விதமாக உரையாற்றினார். உரையின் முடிவில் மக்கள் போர்தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து கோஷமிட்டனர். காரணம், உணர்வுபூர்வமாக பேட்ரிக் ஹென்றி ஆற்றிய உரைதான். பேட்ரிக் ஹென்றி 1775 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர். அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியாதான்(ரிச் மாண்ட்) இவரின் சொந்த ஊர். சுதந்திரத்தைக் கொடுங்கள் அல்லது இறப்பை பரிசளியுங்கள் - பேட்ரிக் ஹென்றி தமிழில்: ச.அன்பரசு  அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக என்னளவு இங்கு ஒருவர் சிந்தித்து செயலாற்றியிருக்க முடியாது. அதேசமயம் இந்த விவகாரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் ஒளியில் பார்ப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் கூடத்தான். இதில் நான் மேற்சொன்னவர்கள் மீது எந்த விமர்சனத்தையம் முன்வைக்க விரும்பவில்லை. மேலும் நாம் இன்றுள்ள சூழ்நிலையில் கொண்டாட்டத்திற்கு இடமில்லை. பொழுதுபோக்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. இன்றும் நம் நாட்டின் முன்னே சிக்கலான சூழலும்

பெண்களுக்குத் தேவை வாய்ப்புகள்தான் கருணை அல்ல!

படம்
நேர்காணல் வாய்ப்பு கொடுத்தால் பெண்களாலும் சாதிக்கமுடியும்! அலெசாண்ட்ரா செலெட்டி (ALESSANDRA CELLETTI) இத்தாலியைச் சேர்ந்த கணிதவியலாளர் அலெசாண்ட்ரா செலெட்டி, ரோம் டோர் வர்கட்டா பல்கலையில் கணிதவியலாளராக பணியாற்றி வருகிறார். அலெசாண்ட்ரா, டைனமிக்கல் சிஸ்டம்ஸ், காம் தியரி, செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் (வளிமண்டல இயக்கவியல்) ஆகி பங்களிப்புக்காக பாராட்டப்பெற்றவர். ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். கணிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள்.உங்களது பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதம் மீது ஈர்ப்புடையவராக இருந்தீர்களா? எனக்கு இப்போது அந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், ஐந்து வயதில் உறவினர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. உனக்கு என்னவாக ஆசை என்று கேட்டார். நான் கணிதம் படிக்கப்போகிறேன் என்று கூறியது மங்கலாக நினைவு இருக்கிறது. செலஸ்டிகல் மெக்கானிக்ஸ்என்று அன்று சொல்லியிருக்கமுடியாது. கணிதம் இல்லாமல் இளம் வயதில் அறிவியல் குறும்படங்களை எடுக்கும் ஆசை தோன்றியது. நீங்கள் அறிவியல் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம

ஆப்பிள் மூலம் சீனா லாபம் ஈட்டுகிறதா?

படம்
ஆம், இல்லை என்று கூற முடியாது. ஆனால் சீனா இதில் ஈட்டும் லாபம் குறைவுதான். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு உள்ள கோபம், அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமான வர்த்தக இடைவெளிதான். கடந்த ஆண்டில் மட்டும் 420 பில்லியன் டாலர்கள் இடைவெளி உருவாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து, நாங்கள் சீனாவில் காசு குறைவு என்பதற்காக தயாரிக்கவில்லை. அங்கு தயாரிப்பதற்கான திறன்கள் உள்ளது என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ட்ரம்ப் காது கொடுத்து கேட்க வாய்ப்பில்லை. அடிப்படையில் ஒரு முதலாளி உற்பத்திச்செலவு குறைவான இடத்தில்தானே கொடுத்து தன் பொருளை உற்பத்தி செய்வார். அதுதான் அவருக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை சேவையாக யாராவது செய்வார்களா? குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதுதான் பெரும்பாலான வியாபாரிகளின் வணிக தந்திரம். ஐபோனின்(ஐபோன் எக்ஸ் ) தயாரிப்புச்செலவு ஒரு போனுக்கு 370 டாலர்கள். இந்த செலவு அமெரிக்காவில் செய்தால் சரி என்கிறார் ட்ரம்ப். இங்கு வரி அதிகம் என்பதால் பெரும்பாலும் சீனாவில் தயாரித்து அசெம்பிள் செய்து விற்பனைக்கான விஷயங்களை மட்டும் அமெரிக்க ஸ்டோர்களில், இணையத்தில் செய்

பனிமனிதன் நிஜமா?

படம்
பனிமனிதன் செய்தி நிஜமா? செய்தி: யெட்டி எனும் பனிமனிதன் பற்றி இந்திய ராணுவம் கூறிய செய்தி ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியை ஆய்வாளர்களே நம்ப முடியாமல் திணறினர். மகாலு ராணுவ கூடாரம் அருகே யெட்டி பனிமனிதனின் பாதச்சுவடுகளைப் பார்த்தோம் என ட்விட் சேதி சொன்னது. மனிதர்களை விட நான்கு மடங்கு பெரிதான பனிமனிதனை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது என்பதை உலகில் பலரும் நம்பவில்லை. இதற்கான ஆதாரங்களை தொல்லியல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அரசு செய்தி கூறுகிறது. பனிமனிதன் குறித்த ஆராய்ச்சி செய்துள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டேனியல் டெய்லர், "35 அங்குல பாதச்சுவடு என்பது டைனோசர்களுக்கு ஒப்பானது. நான் நேபாளத்திற்கு பனிமனிதர் பற்றி ஆராய்ச்சி செய்யபோனபோது, அங்குள்ளவர் காலடித்தடம் பற்றி மரக்கரடி அல்லது இமாலயத்தின் கருங்கரடி குறித்து தகவல் பகிர்ந்தார். அதற்கான காரணங்களையும் கூறியபோது என்னால் அதனை மறுக்க முடியவில்லை"" என்று கூறுகிறார்.  அரசு அமைப்பு சரியான ஆதாரங்கள், ஆராய்ச்சிகளின்ற

விற்பனைக்கு வழிகாட்டும் ஆராய்ச்சிகள்! - விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள்

படம்
லாபத்திற்கான ஆராய்ச்சிகள்! செய்தி: அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் எனர்ஜி பேலன்ஸ் நெட்வொர்க்(GEBN), கலோரி குறித்து கூறிய கருத்து, ஆராய்ச்சித்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரம், பணபலம் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது. விவசாய, கல்வி பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்குப் பல்வேறு தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. இவை தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளியாகி,  ஆராய்ச்சிக் கட்டுரைகளிலுள்ள விஷயங்கள் மக்களால் விவாதிக்கப்படுவது வழக்கம். மேற்சொன்ன செய்தியில் ஜிஇபிஎன் தன்னார்வ அமைப்பு, கலோரி குறித்து அறிக்கை வெளியிட்டு கருத்துக் கூறியது.  ஆனால் இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்வது பிரபல குளிர்பான நிறுவனம் என்பது தற்செயலானது அல்ல. நிதிப்பற்றாக்குறை! இந்தியாவில் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை, ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு பெரும் நிதியைச் செலவிடுகின்றன. இதனால் உணவுத்துறை பற்றிய ஆய்வுக்கு ஆராய்ச்சியாளர்கள் தனியார் நிறுவனங்களையே நம்பியுள்ளன. குளிர்பானங்களிலுள்ள அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனுக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல்

தனிப்பட்ட திறன்களை நாடும் மாணவர்கள்!

படம்
பள்ளிக்கு வெளியே வானம்! செய்தி: இந்தியாவில் பள்ளிப்படிப்பு தாண்டி மொழிகள், புதுமைத்திறன், இசை, விளையாட்டு உள்ளிட்ட வகுப்புகளுக்கு பெற்றோர் செலவழிக்கும் தொகை அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி தாண்டிய பயிற்சிகளை முன்னர் யாரும் யோசித்ததில்லை. ஆனால், இன்று பள்ளிக் கல்விக்குச் செலவிடும் தொகையைவிட அதிகமாக செலவிட்டு ஜிம்னாஸ்டிக், இசை, நடனம், தற்காப்பு கலைகள், எழுத்துப்பயிற்சி ஆகியவற்றைக் கற்கின்றனர். என்ன காரணம்? வேலைவாய்ப்பு சந்தையும் அப்படி மாறி வருகிறது. இசை, தட்டச்சு, கணிதமொழிகள், கால்பந்து, சதுரங்கம், டென்னிஸ் போன்ற பயிற்சிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது, அதற்கு செலவிடுவது  வழக்கமானதுதான். ஆனால் இன்று அதற்கென துபாயில் உள்ள அகாடமிக்கு கூட கல்வி கற்க அனுப்புகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். இதற்கான பட்ஜெட் 1.4 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை எகிறுகிறது. "நாங்கள் படிக்கும்போது கல்வி மட்டுமே வேலைக்கு செல்வதற்கான தகுதியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. வேலையில் பல்வேறு திறன்களையும் சோதிக்கிறார்கள்" என்கிறார் ப்யூச்சர்

புத்தகம் புதுசு - ஜூன் 26,2019

படம்
புத்தகம் புதுசு! American Predator: The Hunt for the Most Meticulous Serial Killer of the 21st Century by   Maureen Callahan அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த குற்றங்கள், சீரியல் கொலைகார ர்களின் பேட்டிகள், அவர்களைக் கண்டுபிடித்த போலீஸ்காரர்களின் அனுபவங்கள் என நூல் முழுக்க நிறைத்திருக்கிறார் எழுத்தாளர் மவ்ரீன் காலாஹன்.  Semicolon: The Past, Present, and Future of a Misunderstood Mark by   Cecelia Watson சுருக்கமாக செமிகோலனின் வரலாறு. இதனை எப்படி பயன்படுத்துவது, அதில் ஏற்பட்ட தவறுகள் என அனைத்தையும் நூலில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் சிசிலியா வாட்சன்.  Stronghold: One Man's Quest to Save the World's Wild Salmon by   Tucker Malarkey   குடோ ரஹர் என்பவர் ந தி நீரிலுள்ள சால்மன் மீன்களைக் காக்க என்னென்ன முயற்சிகளைச் செய்தார் என்பதுதான் நூலின் மையம்.  பசிபிக் கடலின் வடமேற்கு பகுதியில் இயற்கையைக் காக்க குடோ செய்து முயற்சிகளை நேர்மையாக விளக்குகிறது இந்த நூல்.  நன்றி - குட்ரீட்ஸ்

மீன்களுக்கு உணவாகும் கார்பன் டை ஆக்சைடு!

படம்
கரியமிலவாயு இனி விலங்குகளுக்கு உணவு! விவசாயம், உணவுத்துறை மூலம் வெளியாகும் கரியமிலவாயுவை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டீப் பிரான்ச் பயோ டெக்னாலஜி(Deep branch Biotechnology) நிறுவனம், கார்பன் டை ஆக்சைடை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.  கார்பன் டை ஆக்சடை வெளியிடும் நிறுவனங்களோடு இணைந்துள்ள இந்த நிறுவனம், சிமெண்ட், மின்சாரம், ஆக்சிஜன், புரதம் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இதிலுள்ள புரதச்சத்து மீன்களுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவிடப் பயன்படுகிறது. முதலில் இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பான பாக்டீரியா, கார்பன் டை ஆக்சைடை உண்கிறது. இது வெளியிடும் வாயுவைப் பக்குவப்படுத்தினால், புரத உணவு தயாரிக்கப்படுகிறது.  2021 ஆம் ஆண்டு புரத உணவை தொழிற்சாலைகள் நிறுவி பெருமளவு தயாரிக்க டீப் பிரான்ச்  நிறுவனம், முடிவு செய்துள்ளது. கரியமிலவாயுவை பாக்டீரியா மூலம் புரத உணவாக்குவது 1970 ஆம் ஆண்டிலேயே உருவான ஐடியாதான். ஆனால் தற்போதுதான் அதனை வணிகரீதியில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!

படம்
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை. பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது? கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிற

சம ஊதியம் கனவல்ல - நாகலாந்து கிராமம் சாதனை

படம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் வளர்ந்துவரும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியாவில் அது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக, நாகலாந்து கிராமத்தில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இதனை செய்து வருகின்றனர். நாகலாந்தின் சிசாமி மாவட்டத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. நாங்கள் முதலில் உழைப்பிற்கு ஊதியமாக தானியங்களைப் பெறும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் உழைப்பிற்கு சம்பளம் அளிக்கப்பட்டபோது, அதில் பெரும் இடைவெளியையும் வேறுபாட்டையும் உணர்ந்தோம் என்கிறார் 74 வயதான விவசாயக்கூலியான காஃப்கோ. சிசாமி மாவட்டத்தில் விவசாய வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள். பெரும்பாலான உதவிகளை நாடாமல் அவர்கள் உழைப்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கு வாழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. பெண்கள் சங்கம் அமைத்து ஆண்களின் சம்பளம், உழைப்பு ஒன்றாக இருந்தாலும் அதிகமாக இருப்பது குறித்து கேள்விகளை 2007 ஆம் ஆண்டு முதல் எழுப்பி ஊதியத்தை உரிமையாக பெற்றிருக்கிறார்கள். இங்கும் முன்னர் குடும்பத்தலைவராக ஆண்

அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்குமான தொடர்பு!

படம்
- அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்கும் தொடர்பு உண்டா? வெயில், மழைக்காலத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை உடல் வறட்சி, சளி உள்ளிட்ட பிரச்னைகள், வெயில், வியர்வை, மழையின் ஈரம் ஆகியவற்றின்போது உடலில் நுண்ணுயிரிகளின் பாதிப்பால் படர்தாமரை, எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. அலர்ஜியின்போது உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு எதிர்த்து போரிடுகிறது. அதன்பொருட்டு உடலின் பிற அமைப்புகளுக்கான சக்தி குறைகிறது. அதனால்தான் உடல் அலர்ஜியின்போது சோர்வுறுகிறது. அப்போது நீங்கள் வேறு வித உடல் உழைப்பில் ஈடுபட்டால், உடலில் நோய் எதிர்ப்பு பணிகள் நலிவுறும். நன்றி: லிவ் சயின்ஸ்

கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

படம்
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன? நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன. அடுத்து, பாக்டீரியாக்கள்( eptotrichia ,  Delftia ,  Actinobacteria Gp3  and  Staphylococcus ) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது. நன்றி: லிவ் சயின்ஸ்

அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

படம்
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது. அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர். 205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது. 24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர். இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர். இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும்

ஈரானை இயக்கும் புலனாய்வுத் தலைவர்!

படம்
ஈரானிலுள்ள அரசுக்கு விரோதமான அயல்நாட்டு உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்காவின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளார். கூறியது உளவுத்துறை தலைவரான சையத் முகமது ஆலவி. சுருக்கமாக ஆலவி. அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது முதல் பொருளாதார தடைகளை எதிர்த்து தில்லாக அயதுல்லா காமனேனி நிற்பதற்கு, ஆலவியின் பக்கத்துணையே காரணம்.  மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற புரட்சி காவல்படையை வலுவாக்குவதில், அதனைப் பற்றிய பயத்தை பிறநாடுகளுக்குப் பரப்புவதிலும் கவனமாக இருப்பவர் அதிபர், ரூஹானிக்கும் நெருக்கமானவர். ஆலவி மட்டுமல்ல பிற அமைச்சர்களும் காம னேனியின் ஆணைகளைக் கேட்டு அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுகின்றனர் என்கிறார் அரசியல் வல்லுநர் ஒருவர். ஆலவி, டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தி புரட்சியாளரை கைது செய்தது, நாட்டின் நீதிபதி மகளை உளவுத்துறை மூலம் வெளிநாட்டு தொடர்புள்ளதாக என கண்காணித்தது ஆகியவை இவரைப் பற்றி ஈரான் முழுக்க பேச காரணமானது. கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, இணையத்தில் இளைஞர்களை கண்காணிப்பது என அனைத்தையும் கவனமான செய்பவர், இப்பணிக்கு

சீனா மற்றுமொரு வடகொரியா நாடு போலத்தான் மாறும்!

படம்
தியான்மென் சதுக்கம் சூ யூயு அரசியல் அறிவியல் படித்த மாணவர். இவர், சீனாவில் கலாசார மாறுதல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டம் குறித்து எழுதியிருப்பதோடு, அங்கு கலந்துகொண்டும் இருக்கிறார். சார்ட்டர் 08 எனும் சட்ட தீர்திருத்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மே 2014 ஆம் ஆண்டு செமினார் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரிடம் பேசினோம். தியான்மென் சதுக்க படுகொலைகளுக்கு இன்றோடு 30 ஆவது ஆண்டு. இதுபற்றி உங்கள் கருத்து. எனக்கு சோகமாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இங்கிருந்து வெளியேறியவர்கள் திரும்ப தாய்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. தியான்மென் சதுக்க கொலைகளுக்கு எதிரான ஜனநாயகப் பேரணி  இயக்கத்தில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்களா? ஆகஸ்ட் 15 -20 என்று நினைக்கிறேன். தேதி சரியான நினைவில்லை. அன்று படுகொலைகளுக்கு எதிரான அனைத்து கூட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். அரசு எங்களுடைய போராட்டங்களுக்கு செவி கொடுத்து நீதி கிடைக்கச்செய்யும் என

அமைதிதான் வேண்டும் - ரத்தம் தெறிக்க அகிம்சை படம் -அரவிந்த சமேத

படம்
அரவிந்த சமேத வீரராகவ (தெலுங்கு) திரிவிக்ரம் பிஎஸ் வினோத் தமன் எஸ் எஸ் தன் அப்பாவைக் கொன்ற எதிரிகளை அடக்கி ஊரில் அமைதி நிலைநாட்டுவதுதான் நாயகனின் லட்சியம். சாதித்தாரா என்பதுதான் கதை. சூப்பர்! கதை, கரம் மசாலாவிற்கானதுதான். ஆனால் திரிவிக்ரம் தன் பாணியில் அதைக் கையில் எடுத்து அக்கறையாக வசனங்களை எழுதி பாசத்தை நேசத்தை பார்க்கும் அனைவரின் மனதிலும் விதைத்துள்ளார். பாடலுக்கு மட்டும் வரும் நாயகின கதாபாத்திரத்தையும் வலுவாக உட்கார வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தில் வலுவாக பெண்கள் தாங்கி நிற்பதை படமெங்கும் உணர முடிகிறது. மற்றபடி நிலக்கிழார் பெருமை பேசும் படம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அமைதிக்காக தன்னை தாழ்த்தி அமைதி சந்திப்பில் கைகளை உயர்த்துவது, தந்தை கண்ணெதிரே இறப்பதைப் பார்த்து நொறுங்கி மீள்வது என என்டிஆர் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்பு. அடித்து நொறுக்கியுள்ளார். நானாக்கு பிரேமதா, ஜனதா காரேஜ் படத்திற்குப் பிறகு அவரது கேரியரில் இது சிறந்த படம்தான். ஐயையோ! முதல் காட்சியில் தெறிக்கும் ரத்தம்தான் இது தெலுங்குப்படம் என நினைவூட்டுகிறது. மற்றபடி

உலகைக் கலக்கும் ரா வாட்டர் மோகம்!

படம்
தூயநீர் என்பது என்ன? மினரல்கள் கலக்கிய தூய்மைபடுத்திய நீர் ஒரு மார்க்கெட் என்றால் அவை ஏதுமில்லாத ரா வாட்டர் என்ற நீர் அமெரிக்காவில் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ரா வாட்டருக்கான மோகம் அதிகரித்துவருகிறது. அதுவும் அங்குள்ள டெக் பகுதிகளில் ரா வாட்டர் அதிகம் விற்றுவருகிறது. இயற்கையாக உள்ள கிணறுகள், சுனைகள் ஆகியவற்றை அடையாளம் கண்டறியும் முயற்சி பரவிவருகிறது. ஒய் ஸ்பிரிங் வாட்டர் எனும் வலைத்தள நிறுவனர், நாங்கள் மினரல்கள் நீரில் கலக்காத இயற்கையான நீரை பருகுவதை ஆதரிக்கிறோம் என்கிறார் டேனியல் விடாலிஸ். அதேசமயம் இயற்கையான நீரைப் பருகுவதில் கவனமாக இருக்கும் தேவை உள்ளது. அதில் ஈகோலி பாக்டீரியாக்கள் கலந்திருக்கும் ஆபத்தும் உள்ளது என்கின்றனர். லண்டனைச் சேர்ந்த வால் கர்ட்டிஸ் என்ற சூழல் பாதுகாப்பு அமைப்பாளர், இயற்கையான நீர்நிலைகளை நாடுவது நல்ல விஷயம்தான். ஆனால் கிருமிகளைப் பற்றி கவலைப்படாதது ஆபத்தானது என்கிறார்.  நாம் கற்காலத்தை நோக்கி போவதாகத் தெரிகிறது. நம் முன்னோர்கள் கூட பாதுகாக்கப்படாத நீரைக் குடித்து டைபாய்டு, காலரா உள்ளிட்ட பல்வேறு

நீர்நிலைகளை தூர்வாரி விழிப்புணர்வு செய்யும் இளைஞர்!

படம்
குளங்களை மீட்கும் இளைஞர் சென்னையைச் சேர்ந்த என்விரோன்மென்டல் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, இதுவரை 39 ஏரிகள் 48 குளங்களை தன்னார்வலர்களுடன் சேர்ந்து தூய்மைப்படுத்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் பணியாளரான அருண் கிருஷ்ணமூர்த்தி, இயற்கைச்சூழல் வட்டாரத்தில் பணியாற்றிவந்தார். குஜராத், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு குளங்கள், குட்டைகளை தூர்வாரியுள்ளார். அறிவியல் முறையில் நீர்நிலைகளைத் தூர்வாரினால் மட்டுமே நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும். எதிர்வரும் காலத்தில் இப்போது சந்திக்கும் நீர் பற்றாக்குறையை இன்னும் தீவிரமாக சந்திக்க வேண்டி வரும் என்கிறார் அருண். யூடியூபில் ஹைட்ரோஸ்தான் எனும் வீடியோ சேனலை நடத்தி வருகிறார் அருண். நாங்கள் பல்வேறு அரசுகளுடன் இணைந்து திட்டங்களை நடத்தி வருகிறோம். நாங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் அனுமதியுடனும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறோம் என

வர்ஜின் சகோதரி காதலுக்கு கிஃப்ட்

படம்
தொண்ணூறுகளில் கனடாவில் அலுவலகத்தில் பணியாற்றிய கர்லா ஹாலோதேன் எனும் பொது அனஸ்தீசியா மருந்து திருடிக்கொண்டு வீடு வந்தார். அங்கு பதினைந்து வயது வர்ஜின் சகோதரிக்கு அதனை உணவில் கலந்து கொடுத்தார். அன்று குடும்பமே பார்ட்டிக்குக்கு செல்லும் மூடில் இருந்தது. போதையில் மயங்கிய இளைய சகோதரியை தூக்கிக்கொண்டு பில்டிங்கின் கீழ் தளத்திற்கு வந்தார். அங்கு அவரின் காதலன் பால் பெர்னார்டோ இருந்தான். அவனது நோக்கம், வர்ஜின் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவேண்டும் என்பது. அது இன்று உலகில் சாத்தியமா? கிடையாது. அதேதான். பிரச்னை. எனவே கார்லாவிடம் உறவு கொண்டபோது அவள் வர்ஜின் இல்லை என்று தெரிந்துகொண்டு ஏமாற்றமானான். அதைப் பொறுக்க முடியாத கர்லா, காதலனுக்கு தன் தங்கையை பரிசளிக்க முயற்சித்தாள். அதற்காகத்தான் போதைப்பொருள் திருட்டு, உணவில் கலப்பு எல்லலாமே. கர்லா மற்றும் பெர்னார்டோ பார்பி கில்லர்ஸ் என்று புகழ்பெற்று சிறை சென்ற ஆட்கள். இன்று அத்தனை செயல்களையும் செய்து வந்தவர்களில் கர்லா பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியராக பணியாற்றுகிறார். மேற்சொன்ன கொடூரங்கள் நடந்து 29 ஆண்டுகள் ஆகின்றன. 1970 ஆம் ஆண்டு மே 4 அன்று பிறந்த

அமெரிக்கா ஈரானைத் தாக்கப்போகிறதா?

படம்
அமெரிக்காவிற்கு நரியையும், ஈரானுக்கு முள்ளம்பன்றியையும் எடுத்துக்காட்டாக சொல்லி டஜன் கணக்கில் கட்டுரைகளை எழுதிவருகின்றனர்.  அண்மையில் அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியது. ஈரான் அமெரிக்காவில் புகுந்து பென்டகனில் இருந்த விமானத்தை சுடவில்லை. அவர்களது வான் எல்லையில் புகுந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து ஆவேசப்பட்ட 73 வயதான ட்ரம்ப், ஈரானின் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆணையை வெளியிட்டு உடனே திரும்ப பெற்றிருக்கிறார்.  எண்பது வயதான அயதுல்லா கோமெனி, ஈரானை 30 ஆண்டுகளாக ஆண்டு வருகிறார். அமெரிக்காவிற்கான எதிர்ப்பு என்பதை அவர் எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை. இன்று மக்களிடையே பேசும்போதும், அமெரிக்காவின் தோல்வி, அதற்கு எதிராக ஈரானின் நிலைப்பாடு என்ற வார்த்தைகள் நீக்கமற இடம்பெறுகின்றன. இதனைக் குறிப்பிடும் அரசியல் பார்வையாளர்கள் ஷேக்ஸ்பியர், அரிஸ்டாட்டில் போன்றவர்கள் நரியைப் போன்றவர்கள். கார்ல் மார்க்ஸ் முள்ளம்பன்றியைப் போன்றவர்கள். நரி பல்வேறு விஷயங்களை அறிந்ததுதான். முள்ளம்பன்றி தன்னைக் காத்துக்கொள்ளும் விஷயத்தை மட்டுமே அறிந்துள்ளது என்று கிரேக்க க

ஸ்ட்ரிப் மால்கள் அதிகரிக்கும் காரணம் என்ன?

படம்
தகவல் துளிகள் ஸ்ட்ரிப் மால் காய்கறிகள், சலூன், துணிக்கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மால்களை ஸ்ட்ரிப் மால் என்று கூறலாம். திறந்தவெளியில் அமைந்த சந்தை எனவும் பொருள் கொள்ளலாம். இம்மால்களின் முன்னே கார் பார்க்கிங் இருக்கும். காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றால், நடைபாதையில் இருபுறமும் கடைகள் இருக்கும். அதுதான் இதன் டிசைன். இன்று உலகளவில் இந்த வகையிலான சந்தைகள் நிறைய உருவாகிவிட்டன. காரணம், உயர்ந்துவிட்ட மக்களின் தனிநபர் வருமானம்தான். ஐரோப்பாவில் ரீடெய்ல் பார்க்குகள் என்றே மால்களைச் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஸ்ட்ரிப் மால்களை பவர் சென்டர் என்று குறிப்பிடுகின்றனர். உள்அரங்குகளைக் கொண்ட மால்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைய, திறந்தவெளி மால்கள் மெல்ல மக்களிடையே புகழ்பெறத் தொடங்கியுள்ளன. இப்போது அது குறித்த டேட்டாவைப் பார்க்கலாம். 1.அமெரிக்காவில் ஸ்ட்ரிப் மால்களின் எண்ணிக்கை 31 சதவீதம் உள்ளது. 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு 250 மால்கள் கலிஃபோர்னியாவில் உருவாகியுள்ளன. 2.அமெரிக்காவில் தற்போது 68 ஆயிரம் ஸ்ட்ரிப் மால்கள் இயங்கி வருகின்றன. லா

நலம் தேடும் கேட்ஜெட்ஸ் 2019 (ஜூன்)

படம்
மார்க்கெட்டுக்குப் புதுசு! Hexoskin Smart Shirts டிஷர்ட்கள் மற்றும் மார்பில்  பயன்படுத்தும் உடை. இதில் உள்ள ட்ராக்கர் இதயத்திலுள்ள துடிப்புகளை பதிவு செய்யும் திறனுடையது. மூச்சுக்களின் அளவு, இசிஜி, உடற்பயிற்சியின் அளவு ஆகியவையும் இதில் பதிவு செய்யப்படுகிறது.  Suunto 9 சுன்டோ 9 என்பது ஜிபிஎஸ் மற்றும் தொலைவைக் கணக்கிடுதல், பல்வேறு விளையாட்டுகளுக்கேற்ப செட்டிங்  ஆகிய வசதிகள் இதில் உண்டு.  COROS PACE இதுவும் அத்லெட்டுகளுக்குத்தான். கையில் மாட்டினாலும் இதயத்துடிப்புகளை கணிக்கும். எப்போதும்போல ஜிபிஎஸ் உண்டு. நீங்கள் தூங்கினாலும் இந்த வாட்ச் கண்விழித்து உங்களைக் கண்காணிக்கும். இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது ஆப்ஷன்கள் குறைவுதான். Epicore Biosystems Microfluidic Sensor கையில் ஒட்டிக்கொள்ளும் சென்சார், வியர்வை மூலம் இதயத்துடிப்பு, உடலில் வியர்வை மூலம் வெளியாகும் எலக்ரோலைட் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. இந்த சென்சார் இன்னும் ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளில் உள்ளது. ஆனாலும் டிரையல்களில் அசத்துகிறது என்பதுதான் நம் கருத்து. நன்றி: பிபிசி

மார்க்கெட்டுக்கு புதுசு ஜூன் 2019

படம்
மார்க்கெட்டுக்கு புதுசு BenQ GV1 projector வீட்டில் ரெட்மீ டிவி மாட்டுவதற்கு வாட்டமான இடம் இல்லை. ஆனால் சினிமா போன்ற எஃபக்ட் வேண்டும் என்ன  செய்வது? அப்போது பென்க்க்யூ ப்ராஜெக்டரை நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும்.  போனிலிருந்து இணைத்து தமிழ்ராக்கர்ஸ் வீடியோக்களையும் பிளே செய்து மகிழலாம். இதற்கு முக்கியத்தேவை சுவர்தான். அதனை மட்டும் அழுக்காக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். போதும். முக்கியமான இதிலுள்ள ஸ்பீக்கர் பாடாவதி என்பதால் நல்ல கம்பெனி ஸ்பீக்கர்களை வாங்கி இணைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.  Muse 2 meditation headband கண்களை மூடினாலே சொப்பனசுந்தரி கனவுகளுக்குள் மூழ்கி குறட்டை விடும் ஆட்களுக்கானதல்ல இந்த பேண்டு. இதனை ஸ்கூல் பிள்ளை போல நெற்றியில் மாட்டி காதில் அமுக்கி விட்டால் இந்த யோகா தினம் மட்டுமல்ல பிற நாட்களிலும் கூட தியானத்தில் மூழ்கலாம்.  பேண்டை காதில் மாட்டினால் எப்படி தியானம் வரும் என்றெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா தேச துரோக வழக்கு உங்கள் மீது பாயும். கம்பெனிக்காரங்க தூத்துக்குடி வழியாக ஷார்ட் ரூட் பிடித்து தியானம் உங்கள் மூளைக்குள் பாய வழி இரு