ஜெர்ஸிக்களின் வரலாறு!



Image result for indian cricket jersey evolution





கிரிக்கெட் அணிகளின் நிறம்!

இந்தியா

1992 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஜெர்சி மாற்றம் கண்டது. உலகக் கோப்பையில் புதிய நீலநிற ஜெர்சியை அணிந்து விளையாடியது. பின் ஸ்பான்சராக இடம்பெற்ற நைக், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டரை ஜெர்சி உடைக்குப் பயன்படுத்தியது. இரு நிறங்களை இதில் நைக் பயன்படுத்தியது. அதை பின்னர் அணியின் உலக கோப்பை வெற்றி வரைக்கும் சொல்லிக்காட்டி சந்தோஷப்பட்டது நமது ஸ்டைல்.

ஆஸ்திரேலியா

1999 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸி. அணி, 2019-20 ஆண்டும் அதே உடையின் நிறத்தை உடையாக்கி பயன்படுத்த உள்ளது. மஞ்சள்தான் பிரைமரி நிறம். இதில் எலுமிச்சைப் பச்சையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து கொடுத்தது, ரசிகர்கள் என்பதே முக்கியம்.


வங்கதேசம்

பாம்பு நடனம் ஆடும் வங்கதேசத்தினர், விளையாட்டில் தங்களை நிரூபித்தஅணி. ஆனால் பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் வேறுபாடு காட்டத் தடுமாறுகின்றனர். பச்சை நிற ஜெர்சி பாகிஸ்தான் போல இருப்பதால், ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அணியின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பேக்கிரவுண்டில் அமைக்க முயற்சித்து ஜெர்ஸியை உருவாக்கினர்.

மேற்கிந்திய தீவுகள்

1979 ஆம் ஆண்டு வேர்ல்டூ சீரிஸ் ஆட்டத்தில் பிங்க் நிற உடையை அணிந்துகொண்டு ஆடி அனைவரையும் வியக்க வைத்தனர்.பின் வெவ்வேறு ஆட்டங்களில் காப்பிக்கொட்டை நிற உடையை அணிந்து ஆளின் முகத்தையே தெரியாத மாதிரி மாற்றினர். அதிலும் பனைமரம் இருக்கும்.


இங்கிலாந்து

உலக கோப்பையை நடத்தும் வல்லரசு நாடு. அதை நிரூபிக்க வேண்டாமா? நீல நிறத்தில் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்கள். மோசமில்லை. ஜேசன் ராய் உற்சாகமாக விளையாடி வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். அப்புறமென்ன? ஜமாய்க்கவேண்டியதுதான்.

இலங்கை அணி

கடலில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை சேகரித்து இழையாக்கி ஜெர்சி தைத்திருக்கிறார்கள் இலங்கை அணியினர். எப்போதுமே அடர்நீலம் அடிப்படை நிறம். அதில் இப்போது மஞ்சளைக் கலந்து ஆமைகளை மிதக்க விட்டிருக்கின்றனர். மாஸ் ஹோல்டிங் உடைக்கான பொறுப்பேற்றிருக்கிறது.

நன்றி: லிவ் மின்ட்












பிரபலமான இடுகைகள்