2019 தேர்தலில் பெண் எம்.பிக்கள் சாதித்தது எப்படி?






Image result for chandrani murmu bjd



ரம்யா ஹரிதாஸ் 


Image result for ramya haridass

32 வயதில் எம்.பியாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக வென்றவர் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதன் வழியாக மக்களை அணுகினார். கேரளாவிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் பழங்குடி இன எம்.பி இவரே. இதற்கு 48 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பல சொதப்பல் பிளான்களை இந்த தேர்தலில் செய்தாலும், செய்த உருப்படியான விஷயம் நிறைய பெண் வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்த முயற்சித்த துதான்.

வென்ற பெண் வேட்பாளர்களில் ரம்யா ஹரிதாசும் ஒருவர். அம்மா, தையல் கலைஞர், அப்பா தினக்கூலி செய்துவருகிறவர். 2011 ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டவர், தற்போது எம்.பியாகி உள்ளார்.

இதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டிருக்கிறார். தேர்தல் செலவுகளுக்கு க்ரௌடு ஃபண்டிங் மூலம் பத்து லட்சம் நிதிதிரட்டி செலவு செய்த தைரியம் பாராட்டத்தக்கது.


அம்மா மகிளா காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றாலும் திறமை மூலமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார் ரம்யா. கேரளாவின் ஒரே பெண் எம்.பி இவர்தான். மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்காக பாடுபடுவேன் என்று கூறுகிறார்.


Image result for pramila bisoi





பிரமிளா பிசோயி

எழுபது வயதில் பிஜூ ஜனதா தள கட்சி சார்பாக நின்று ஜெயித்திருக்கிறார்.


படித்தது மூன்றாம் வகுப்பு. பொம்மைகளோடு விளையாடி முடிப்பதற்குள் திருமணம் முடிந்து விட்டது. பால்வாடியில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். பெரியளவில் அங்குமிங்கும் எங்குமே சென்றதில்லை பிரமிளா. அவரின் ஊரான செராமரியாவில்தான் பெரும்பாலும் வாழ்க்கை நடந்தது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் மிஷன் சக்தி திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு பிரசாரம் செய்தவர் பிரமிளா பிசோயி. அவரின் உழைப்பைப் பார்த்து வியந்த நவீன் பட்நாயக், அவரை அழைத்து அஸ்கா தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டார். எனக்கு ஆர்வமில்லை என்று கூறினாலும் அவரை சந்திக்க வருமாறு புவனேஸ்வரிலிருந்து நவீன் பட்நாயக் காரை அனுப்பிவிட்டார்.


ஆனாலும் நவீன் பாபு சொல்லிவிட்டார் என்பதற்காக தேர்தலில் நின்று ஜெயித்தும் விட்டார். அத்தொகுதி, பிஜூ பட்நாயக் மற்றும் அவரது அப்பா இருவரும் நின்று வென்ற தொகுதி.

ஒடிசாவுக்கு வெளியே எங்குமே சென்றிராத பிரமிளா, இன்று நாடாளுமன்றம் சென்று பேசப்போகிறார். நவீன் பாபுவின் சாதனைகளை பாடலாக பாடி தேர்தலில் தன் போட்டியாளரை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் பிரமிளா. என்னுடைய லட்சியம் , இங்கிருந்து வேலை வாயப்புகளின்றி வெளியேறும் மக்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதுதான் என்கிறார் பிரமிளா.

சந்த்ராணி மர்மு

பிஜூ ஜனதாதளத்தின் பெண் வேட்பாளர் இவர். இருபத்தி ஐந்து வயதில் எம்.பியாகி டெல்லி செல்கிறார்.

ஜூன் பதினாறு அன்று 26 வயதை எட்டும் மர்மு அன்று, பதினேழாவது மக்களவைக்கூட்டத்தில் இருப்பார்.  என்னை மக்கள் எதற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மக்களுக்கு என்மீது ஏதோ ஒரு வித த்தில் நம்பிக்கை தோன்றியுள்ளது என வித்தியாசமாக பேசுகிறார். ஆனால் இவரது தாத்தா, ஹரிஹர் சோரன் காங்கிரசைச்சேர்ந்த எம்பி.


பெண்கள் என்றாலே ஆண்களின் மனதில் உடையில்லாமல்தான் தோன்றுவார்கள் என்பதற்கு வக்கிரமான எடுத்துக்காட்டு மர்முக்கு நடந்தது. இவரது முகத்தை மார்பிங் செய்து சிலர் இணையத்தில் வீடியோவை விட்டிருக்கின்றனர்.  எனக்கு அந்த நொடி மக்களை எதிர்கொள்வது சிரமமாகவே இருந்தது. என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்ததால் அந்த பிரச்னையிலிருந்து விரைவில் வெளியே வந்துவிட்டேன்.

பிடெக் பட்டதாரியான மர்மு, தன்தொகுதியில் கல்வி, பாலின பாகுபாடு, குழந்தை திருமணம் ஆகியவற்றை முக்கியமான பிரச்னைகளாக அடையாளம் கண்டுள்ளார். நான் முன்னமே அரசியலில் நல்லது அல்லதுகளை அடையாளம் கண்டுவிட்டேன். இனி எதற்கும் கலங்குவதாக இல்லை என்கிறார். அர்ஜித்சிங் பாடல்களைக் கேட்பதுதான் என் ரிலாக்ஸ் டைம் வேலை என்கிறார் மர்மு.


பெண்கள் அரசியலில் முன்னேறி வருவதும், அவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதும்தான் முக்கியம். அவர்களுடைய வங்கிக்கணக்கு, குடும்பத்தின் ஏழ்மையை படம்பிடிப்பது அவசியமில்லாதது. எனவே இக்கட்டுரையில் அத்தகைய தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. 


நன்றி: டைம்ஸ்