சிறுபிள்ளைத்தனமான காமெடி - ரசிக்கலாம் பாஸ் ஆராயாதீங்க!
சில்லி ஃபெலோஸ்
இயக்கம்: பீமனேனி ஸ்ரீனிவாச ராவ்
கேமரா: அனிஸ் தருண்குமார்
இசை: ஸ்ரீவசந்த்
வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் படத்தின் தெலுங்கு ரீமேக்.
அலரி நரேஷ்(வீரபாகு), சுனில்(சூரி) இருவரின் அட்டகாச கெமிஸ்ட்ரியில் படம் காமெடியில் கொடி கட்டுகிறது. ஜாக்கெட் ஜானகி ராமன் எம்எல்ஏவின் வலதுகரமான அலரி நரேஷ், செய்யும் அலப்பறைகள்தான் படத்தை ரசிக்க வைக்கின்றன. இலவச திருமணம், பத்து லட்சம் வாங்கி போலீஸ் வேலை வாங்கித் தருவது என செய்யும் உல்டா புல்டா வேலைகளால் சுனில், சித்ரா சுக்லா ஆகியோர் பரம வெறியாகி இவரைத் துரத்துவதே கதை.
ஜாக்கெட் ஜானகி ராமனாக, ஜெயப்பிரகாஷ் ரெட்டி பின்னி எடுத்திருக்கிறார். புஷ்பாவாக, நந்தினிராய் கிரிப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி படம் முழுக்க புஷ்பாவிடம் கையெழுத்து வாங்க முயற்சிக்கும் சுனிலின் காமெடி கைவரிசை பின்னி எடுக்கிறது.
சித்ரா சுக்லாவை என்ன செய்வது என இயக்குநருக்கும் தெரியவில்லை நமக்கும் தெரியவில்லை. பாடல்கள் கடனே என்று கடக்கின்றன. சீரியசா, காமெடியா என அவரும் முழிக்கிறார்.
லாஜிக் மறந்து ஜாலியாக ரசிக்கலாம்.
-கோமாளிமேடை டீம்