நலம் தேடும் கேட்ஜெட்ஸ் 2019 (ஜூன்)


Epicore Biosystems microfluidic sensor (Not yet for sale, EpicoreBiosystems.com)







மார்க்கெட்டுக்குப் புதுசு!

Hexoskin Smart Shirts

டிஷர்ட்கள் மற்றும் மார்பில்  பயன்படுத்தும் உடை. இதில் உள்ள ட்ராக்கர் இதயத்திலுள்ள துடிப்புகளை பதிவு செய்யும் திறனுடையது. மூச்சுக்களின் அளவு, இசிஜி, உடற்பயிற்சியின் அளவு ஆகியவையும் இதில் பதிவு செய்யப்படுகிறது. 

Suunto 9

சுன்டோ 9 என்பது ஜிபிஎஸ் மற்றும் தொலைவைக் கணக்கிடுதல், பல்வேறு விளையாட்டுகளுக்கேற்ப செட்டிங்  ஆகிய வசதிகள் இதில் உண்டு. 

COROS PACE

இதுவும் அத்லெட்டுகளுக்குத்தான். கையில் மாட்டினாலும் இதயத்துடிப்புகளை கணிக்கும். எப்போதும்போல ஜிபிஎஸ் உண்டு. நீங்கள் தூங்கினாலும் இந்த வாட்ச் கண்விழித்து உங்களைக் கண்காணிக்கும். இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது ஆப்ஷன்கள் குறைவுதான்.

Epicore Biosystems Microfluidic Sensor


கையில் ஒட்டிக்கொள்ளும் சென்சார், வியர்வை மூலம் இதயத்துடிப்பு, உடலில் வியர்வை மூலம் வெளியாகும் எலக்ரோலைட் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. இந்த சென்சார் இன்னும் ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளில் உள்ளது. ஆனாலும் டிரையல்களில் அசத்துகிறது என்பதுதான் நம் கருத்து.

நன்றி: பிபிசி



பிரபலமான இடுகைகள்