கேரட் தின்றால் இருட்டில் பார்க்க முடியுமா?


Do carrots help you see in the dark? © Dan Bright





ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி


கேரட் தின்றால் இருட்டில் கண்கள் தெரியுமா?


கண்களில் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் நல்லது. கேரட்டும் அப்படியே. அதற்காக நாய், பூனை போல உங்கள் கண்கள் இருட்டிலும் கவனிக்கும் திறன் பெறமுடியாது.


கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின், கண்களிலுள்ள ரெட்டினாலுக்கு உதவுகிறது. இதனால் கண்பார்வை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறலாம். இரண்டாம் உலகப்போரில் இரவில் தாக்கிய ஜெர்மனி நாட்டு விமானங்களை சுட்டுவீழ்த்த கண்பார்வை இல்லை என வீர ர்கள் தடுமாறினர். அப்போது அவர்களுக்கு அரசு கேரட்டை வழங்கியதாகவும், அதனால் அவர்கள் ஜெர்மனியை வீழ்த்தியதாகவும் கதை உண்டு. ஆனால் அது உண்மையல்ல.


ரெட்டினாலிலிருந்து கிடைக்கும் ரெட்டினல் எனும் சுரப்பி கண்பார்வை, பெருக உதவுகிறது. மற்றபடி விட்டமின் ஏ வீக்காக இருந்தால் ஸ்பெக்ஸ் மேக்கர்ஸிடம் அப்பாய்ட்மெண்ட் கேட்டு கண்ணாடி வாங்கி போட்டுக்கொள்வதே நல்லது.

நன்றி - பிபிசி