துணிச்சலாக கொன்று முடி! - இரு சைக்கோ கொலைகாரர்கள்



The purples and orangey/yellows complement each other. I like how the areas of light and shadow are built up, they really the skulls dimension. The sprinkles are mostly all uniform, which, despite not necessarily being accurate with the light source, helps to keep them from becoming too complex and distracting. Around the edge of the whole design, thee contour is the thickest which squishes the whole design together in a way that goes with the theme, because candy/pastries can be sticky.


அசுரகுலம்

காங் ருண்போ


காங் ருண்போ, சீனாவின் ஹெய்லோங்ஜிகாங் எனும் பகுதியில் வாழ்ந்து மறைந்த கொலையாளி. 2005 முதல் 2006 காலகட்டத்தில் சிறப்பாக வேலைபார்த்து ஆறு குழந்தைகளை பாலியல் ரீதியில் தாக்கி கொன்றார். கொன்றவர்களை இணைய கஃபேயில் பார்த்து தேர்ந்தெடுத்தார். வயது 9-16.  2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று காங்கை போலீஸ் கைது செய்தது. அதுவும் இவரிடமிருந்து தப்பி சென்றவர் ஒருவர் செய்த அலர்ட்டால் நடந்தது.  காங்கின் வீட்டில் நான்கு பேரின் உடல்களை போலீஸ் மீண்டது. அனைத்தும் செக்ஸ் சித்திரவதைகள் செய்யப்பட்டு இறந்தவர்கள்தான்.

குழந்தைகளின் உடைகள், அவர்களின் உடைகள், பத்து செட் ஷூக்கள் என கலவையாக காங்கின் அறையில் கிடைத்தன. இதற்கும் முன்பு இளம்பெண் ஒருவரைக் கற்பழித்த குற்றத்திற்காக எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். ஆறு கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை அனுபவித்தார். இருபது குழந்தைகளைக் கொன்றவர் இவர்.


ஸெங் கைகுய்

முன்னாள் விடுதலை ராணுவ வீரர். சீரியல் கொலைகார ர், வங்கி கொள்ளையர் என புகழ்பெற்றார். 2004 ஆம் ஆண்டு தொடங்கிய கொலையின் தடம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தென்மேற்கு சீனாவில் ஆறு நபர்களை ஸெங் கொன்றார். அதோடு 20 ஆயிரத்து 500 பவுண்டுகளை வங்கியில் கொள்ளையடித்தார். இவரைப் பிடிப்பதற்காக 13 ஆயிரம் போலீஸ் படையினர் சீனாவெங்கும் சுற்றித் திரிந்தனர். போலீஸ் துறையில் இருந்ததால் போலீசின் அனைத்து உளவு நுட்பங்களுக்கும் டேக்கா கொடுத்து திரிந்தார்.  அதிக பணத்தை வங்கியில் எடுப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் அவலமும் கூட நடந்தது. 1.95 மில்லியன் யுவான் என இவரின் தலைக்கு அரசு விலைவைத்து பிடித்தது.


ஆக்கம் : பொன்னையன் சேகர்

நன்றி: லிஸ்ட்வர்ஸ், ரிவால்வி, மர்டர்பீடியா


படம்: பின்டிரெஸ்ட்

பிரபலமான இடுகைகள்