தடுப்பூசியில் அலுமினியம் உள்ளதா?

Prof Chris Exley.

ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் தடுப்பூசியில் அலுமினியம் உள்ளதாக கூறி அதற்கு எதிரான செயல்பாடுகளுக்கு நிதி திரட்டியுள்ள சம்பவத்தை கார்டியன் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.


இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எக்ஸ்லி, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருகிறார். அவர் பல்கலைக்கழக வலைத்தளத்தில் தடுப்பூசிக்கு எதிராக நிதியுதவிகளைப் பெற்றிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.

இவர் 2017 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சி அறிக்கையில், அலுமினியம் ஆட்டிசக்குழந்தைகளின் மூளையில் படிந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி என சர்ச்சையைக் கிளப்பினார்.

தனது ஆராய்ச்சிக்கான நிதியாக மக்களிடமிருந்து 22 ஆயிரம் பவுண்டுகளைப் பெற்றிருக்கிறார். குறைந்த பட்ச தொகை நூறு பவுண்டுகள்.


இதற்கு நிதியுதவி செய்தது, தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் சில்ரன் மெடிக்கல் சேப்டி மெடிசின் இன்ஸ்டிடியூட் ஆகும். இந்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தி கார்டியன் நாளிதழ் வாங்கி பிரசுரித்து உள்ளது.

இதுகுறித்து எக்ஸ்லியிடம் கேட்டபோது, இதில் தவறு ஏதும் இல்லை. நான் ஆய்வகச்செலவுகளுக்காக இத்தொகையைப் பயன்படுத்தினேன். இதில் சட்டவிரோதம் ஏதும் கிடையாது. குறிப்பிட்ட திட்டம் என்று கூறி மக்களிடம் பணம் பெறவில்லை என்று கூறினார்.

கடந்த ஏப்ரலில் கோ ஃபண்ட் மீ எனும் க்ரௌடு ஃபண்டிங் தளம் எக்ஸ்லி குழுவினர் வலைத்தள உரிமைகளை மீறியதால், அவர்களுக்கான திட்டத்தைக் கைவிட்டது. மேலும் எக்ஸ்லி பணிபுரியும் கீலே பல்கலைக்கழகம் தற்போது அவருடைய ஆராய்ச்சிக்கு அளித்துவரும் நிதிகுறித்த பரிசீலனையில் உள்ளது.

இந்த பிரச்னைக்கு காரணம், பல்கலைக்கழகத்தின் நோக்கம் கொள்கைகள் வேறு. எக்ஸ்லியின் தனிப்பட்ட விருப்பங்கள், நம்பிக்கைகள் வேறு. இரண்டையும் தனித்தனியே புரிந்துகொண்டால் பிரச்னையில்லை. இரண்டையும் இணைத்த துதான், எக்ஸ்லி செய்த தவறு.

நன்றி: தி கார்டியன்