காற்றில்லாத டயர்கள்தான் இனி எதிர்காலம் - மிச்செலின் புதிய ஆராய்ச்சி



Road hazards are absorbed by the Uptis tire, eliminating about 200 million tires a year that...



காற்றில்லாத டயர்கள்

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் மிச்செலின் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து காற்று இல்லாத டயர்களை கண்டுபிடித்து சோதனைகளை செய்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான திட்டமாக இதனைத் திட்டமிட்டுள்ளன.


பஞ்சர் ஆகாத இந்த டயர் அமைப்பு அப்டிஸ் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். 2017 ஆம் ஆண்டுக்கான சூழலுக்கு உகந்த மூவிங் ஆன் எனும் மாநாட்டில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டனர். 

Michelin and GM will be testing the Uptis airless tire on a fleet of Chevrolet Bolt...



நோக்கம் என்ன? காற்றுள்ள டயரை மார்க்கெட்டிலிருந்து இறக்குவதுதான். மேலும் பஞ்சர் பிரச்னையை ஒழிக்கும் கண்டுபிடிப்பாகவும் இது அமைந்துள்ளது. இதன்மூலம் டயர்களை தயாரிப்பதற்கான செலவும் குறையும். மேலும் பஞ்சர் பிரச்னை ஒழிவதால், தேவையில்லாத குப்பைகளையும் குறைக்க முடியும். அடிக்கடி காற்று பிடிக்கும் பஞ்சாயத்துகளும் இனி இருக்காது.


8 முதல் 12 சதவீதம் வரை வீணாகும் டயர்களின் எண்ணிக்கை குறையும் என மிச்செலின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 22 கி.கி வரும் இந்த புதிய அப்டிஸ் டயர், பழைய டயரைப் போலவேதான் காரை உணர வைக்கும். ஆனால் எடையில் வித்தியாசம் உள்ளது. கொஞ்சம் லைட்டாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் படி விலையை மிச்செலின் இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் நாமும் இந்த டயர்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது.


நன்றி: நியூ அட்லஸ்




பிரபலமான இடுகைகள்