மில்லினிய இளைஞர்கள் - சீக்ரெட்ஸ் லிஸ்ட்!



iStock/PeopleImages



சீனியர்களை கோப ப்படுத்தும் விஷயம் நாங்கள் மில்லினியல் பாஸ் என பொடுசுகள் பேசுவதுதான். பின்னே அடிக்கடி வயசை நினைவுபடுத்தினால் எப்படி..... தற்போது மில்லினிய குழந்தைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் மில்லினிய செட் பற்றி தெரிந்துகொள்வோம்.


1981 - 96 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை மில்லினிய செட்டில் சேர்க்கலாம். இளையவர்கள் என்பதைத்தான் மில்லினியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை ப்யூ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இதில் மூத்தவர்கள் 30 களில் இருப்பார்கள்.

மில்லினியல் என்ற வார்த்தை 91 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. நெய்ல் ஹோவே மற்றும் வில்லியம் ஸ்ட்ராஸ் ஆகியோரின் நூலான ஜெனரேஷன்ஸ் என்பதில் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களைக் குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஆசிரியர்கள் பயன்படுத்தினர்.

மில்லினியர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வமுடையவர்கள்தான். 2016 ஆம் ஆண்டு இவர்கள் ஆண்டுக்கு ஐந்து நூல்களை தோராயமாக படித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. முந்தைய ஆய்வில் நான்கு நூல்களைத்தான் படித்தார்கள். டெக் தலைமுறையாக இருந்தாலும் நூலகம் செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இபுக்குகளை விட காகித நூல்களைப் படிக்கவிரும்புகிறார்கள்.

மில்லினியர்கள் அனைத்து ட்ரெண்டுகளையும் அடித்து நொறுக்குபவர்கள். இன்று உலகமெங்கும் மயோனிஸ் உணவுகள், ஷாப்பிங் மால், காகித நாப்கின்கள், மெக் டொனால்டின் பிக் மேக் என பலவற்றையும் உதறித்தள்ள புது டிரெண்டுகளை யோசிக்க வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இவர்களின் காலத்தில்தான் விவாகரத்து சதவீதமும் குறைந்து வருகிறது.

மில்லினியர்கள், சுயவேலைவாய்ப்பை அதிகம் நம்புகின்றனர். ஓய்வு பெறுவதையும் விரைவிலேயே தேர்ந்தெடுத்து விடுகின்றனர். முந்தைய தலைமுறையை விட பணத்தை சேமிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. முந்தைய தலைமுறை 15 ஆயிரம் டாலர்களை சேமித்தால், இவர்கள் 12 ஆயிரம் டாலர்களைத்தான் சேமிக்கிறார்கள். வயது 20-35 வயதுக்குள் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.

அதேசமயம் விரும்பிய படிப்பை படிப்பது உள்ளிட்ட சுயமான முடிவுகளால் குறிப்பிட தொகைக்கு பெற்றோரை சார்ந்தும் இருக்கிறார்கள். இவர்களின் வயது 18-34 வரை உள்ளது. பத்தில் ஏழுபேர் இம்முறையில் இருக்கிறார்கள் என 2019 ஆம் ஆண்டு மெரில் லின்ச் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் 600 பேருக்கு 42 ஆயிரம் டாலர்கள் கடன்தொகையாக உள்ளது.


ஆண்டுதோறும் சுயமான பல்வேறு முடிவுகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றுவதிலும் ஆர்வமாக உள்ளனர்.


நன்றி: மென்டல் ஃபிளாஸ்

பிரபலமான இடுகைகள்