இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராப் இசையால் சமூக பிரச்னைகளைப் பேச முடியும்! - பரவும் ராப், ஹிப்-ஹாப் இசைக்குழுக்கள்

படம்
swadesi சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் இசை ! இன்று திரைப்படங்கள் சமூக பிரச்னைகள் பற்றி பேசுவது குறைந்துவிட்டது . அரிதாகவே சில முதுகெலும்பு உள்ள இயக்குநர்கள் பிரச்னைகளை சந்தித்து படங்களை வெளியிடுகிறார்கள் . அவையும் பார்க்கப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது . ஆனால் தனியிசை பாடல்களாக இசைக்கலைஞர்கள் வெளியிடும் பாடல்கள் இணையம் வழியாக எளிதாக மக்களைச் சென்று சேர்கிறது . இதனை இந்தி திரைப்படம் கல்லி பாய் முதன்முதலில் தொடங்கி வைத்தது . இப்படத்தில் இசைக்கலைஞர் டிவைனின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது . மேல்நாட்டுப் பாடல்களை பார்த்தால் அழகான செட் , ஃபெராரி காரில் வந்து தன்னை மறந்து போன காதலியைப் பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள் . இன்று அதற்கு மாற்றாக சமூக பிரச்னைகளைப் பற்றி பாடத்தொடங்கியிருக்கிறார்கள் . தமிழில் அறிவு அப்படியொரு பணியை செய்துகொண்டிருக்கிறார் . ahmer javed வட இந்தியாவில் தாராவி குடிசையில் பிறந்த வளர்ந்த ராப் பாடகர்கள் இனம் , மத வேறுபாடுகள் , ஏழைகளின் பிரச்னை , பாகுபாடு என்ற பல்வேறு விஷயங்களையும் அனைவரும் அறிய பாடி வருகிறார்கள் . அஹ்மர் ஜாவேத் , அர்ஷத் மாலிக் ஆகியோர் இவ

நம்பிக்கை மனிதர்கள் - நீர், சுகாதாரம், கிராம நலவாழ்வு

படம்
நம்பிக்கை மனிதர்கள் டாக்டர் வினோத் டாரே கழிவறை சுத்தம் ஜீரோ கழிவுகள் கொண்ட கழிவறைகளை நீங்கள் 2006க்கு முன்னர் யோசித்திருக்கிறீர்களா? கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வினோத் டாரே அதன் பனிரெண்டு பேர்  கொண்ட குழு மூலம் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். மத்திய அரசின் மனிதவளத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து  கான்பூர்  ஐஐடியிடம் கழிவற்ற கழிவறை உருவாக்கும் பணியை அளித்தன. வினோத் டாரேவின் சீரிய பணியால் இன்று காஷ்மீர் முதல் கோவை தொடக்க பள்ளி வரை கழிவற்ற கழிவறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கடந்த 2013ஆம் ஆண்டு நீரற்ற சிறுநீர்கழிப்பிடம், கழிவற்ற கழிவறை ஆகியவை புகழ்பெற்றன. இதில் மனிதர்களின் கழிவுகள் அங்குள்ள மண் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதற்கு நீர் தேவையில்லை. “இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு வணிக நிறுவனங்கள் விற்கச்சொல்லி கேட்டனர். ஆனால் நான் இது மக்களுக்குச்சென்று சேரவேண்டும் என்பதால் அதற்கு சம்மதிக்ககவில்லை ” என்கிறார் டாக்டர் வினோத் டாரே. 2 தண்ணீர் காந்தி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் தண்ணீர் காந்தியான அய்யப்ப மசாகி. கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மசாகிக்

படிக்காம ஜெயிச்சோமடா! - இரண்டு வெற்றிக்கதைகள்

படம்
இந்தியாவில் சுயமாக ஏதாவது கற்று வென்றவர்கள் அதிகம். காரணம் நம்முடைய கல்விமுறை அப்படி. துறுதுறுவென ஓடுபவர்களை, யோசிப்பவர்களை பள்ளி விரைவில் வெளியேற்றிவிடும். இதனால் சமூகத்தில் உருப்படியான மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ. .. மும்பையில் வாழும் அருண்குமார் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் அவரது கல்வித்தகுதி பத்தாவதுதான். எப்படி சாத்தியமாகிறது என அவரது குடும்பத்தினருக்கும் புரியவில்லை. அவர்கள் அதிகம் கல்வி கற்காதவர்கள். இவரது குடும்பம் உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள மன்பூரில் வசிக்கிறது. ஆகாஷ், வீட்டு வேலைகளுக்கான உதவியாளராக வந்து இன்று கோடிங் கற்று ஐபோன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறார். இவரது தந்தை அசாம் போலீசில் ஓட்டுநராக பணிபுரிந்துகொண்டு டெல்லியில் வசித்தனர். டேராடூனில் உள்ள பள்ளியில் ஆகாஷ் சேர்க்கப்பட்டார்.  ஒருமுறை கல்விக்கட்டணத்தை அறை வாடகைக்காக செலவழித்துவிட்டார் ஆகாஷ். பள்ளி நிர்வாகம். அவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது. உடனே தன் கிடாரை எடுத்துக்கொண்டு மும்பைக்கு இசை தொடர்பான வேலை கிடைக்கும் என வந்துவிட்டார். அங்கு ஹவுசிங்.

வீல்சேரில் ஆர்ட் - கலக்கும் ஐரிஷ் சகோதரிகள்!

படம்
வீல்சேரில் ஆர்ட்! அய்ல்பே கீன், தன்னுடைய மாற்றுத்திறனாளி தங்கையின் வீல்சேரையே கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார். ஸ்பினை பைஃபிடா எனும் குறைபாட்டால் கீனின் சகோதரி பாதிக்கப்பட்டார். இதன்விளைவாக சக்கர நாற்காலியை நம்பியுள்ளார். இவரது சக்கர நாற்காலியை வண்ணமாக்கியுள்ளார் கீன். இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். டப்ளினைச் சேர்ந்த இஸ்ஸி வீல்ஸ் எனும் அமைப்பை இச்சகோதரிகள் தொடங்கியுள்ளனர். இவர்கள் சக்கர நாற்காலியில் பயன்படுத்தும் வண்ணச் சக்கரங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனை விற்க இவர் விளம்பரம் ஏதும் செய்வதில்லை. இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டும் விளம்பரத்தின் பணியை செவ்வனே செய்கின்றன. 2016 ஆம் ஆண்டு இஸ்ஸி வீல்ஸ் என்ற திட்டத்தை கல்லூரி புராஜெக்டாக தொடங்கினார் கீன். இவர் ஓராண்டாக தன் சகோதரியின் சக்கர நாற்காலியை எப்படி மேம்படுத்துவது என யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். கீன் மற்றும் இசபெல் இருவரும் இந்த அமைப்பு மூலம் வரும் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதியை அயர்லாந்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புக்கு வழங்கி வருகின்றனர். 35 நாடுகள

கண்ணிவெடிகளை அகற்றும் நம்பிக்கை மனிதர்!

படம்
ரிச்சர்ட் லிம் கம்போடியாவுக்கு வந்தபோது அங்கிருந்த பல சிறுவர்கள் கை, கால்கள் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தவர். அந்த பாதிப்பு கூட தெரியாமல் விளையாடுகிறார்களே என்றவர் திகைப்புக்குள்ளானார். தற்போது அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்களை உருவாக்கி வருகிறார். உலகப்போர்களால் பாதிக்கப்பட்ட நாடு கம்போடியா. அதற்கு இணையாக அங்குள்ள 10 மில்லியன் கண்ணிவெடிகள் அங்குள்ள மக்களில் 64 ஆயிரம் பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கணக்கு இது. தற்போது அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில் ரிச்சர்ட் உள்ளார். மனிதர்களும் கண்ணிவெடிகளை அகற்றுகிறார்கள்தான். ஆனால் உயிரிழப்புகளும் இதில் அதிகம். எனவே ஜேவிட் என்ற இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். 2025 ஆம் ஆண்டு நாட்டில் கண்ணிவெடிகளே இருக்க கூடாது என்ற லட்சியத்தில் ரிச்சர்ட், ஹாலோ எனும் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரின் வேகத்திற்கு மனிதர்களுக்கு பயிற்சியளித்து இதில் ஈடுபடுத்துவது முடியாது. எனவேதான் ஜேவிட் இயந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இயந்திரத்திற்கு 50 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. இதில் மனிதர

கிரேட்டா துன்பெர்க்- இளைய போராளி

படம்
கடந்த ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் சிறுமி ஒருத்தி போராட அமர்ந்தாள். என்ன கோரிக்கை, என்ன விஷயம் என யாருக்கும் புரியவில்லை. அப்புறம் பார்த்தால் வெப்பமயமாதலுக்கான போராட்டம் அது. அரண்டு போன ஊடகம், மைக்கையும் கேமராவையும் எடுத்துக்கொண்டு ஓடிவர மெல்ல கிரேட்டா துன்பெர்க்கும், அவரது போராட்டமும் உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியது.  இதன் விளைவாகத்தான் லண்டனில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக நடந்த போராட்டமும் கூட.  கடந்த ஆகஸ்டில் துன்பெர்க் செய்த போராட்டத்திற்கு அவரது பெற்றோர், சக நண்பர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால் இன்று எட்டு மாதத்திற்கு பிறகு அவரை ஆதரிக்காத ஆட்கள் உலகிலேயே கிடையாது என்ற அளவு துன்பெர்க்கை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.  71 நாடுகளில் 700 நகரங்களுக்கு மேலாக சுற்றுச்சூழல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது எனக்கு பெரிய ஆச்சரியம் என கண்கள் மினுங்கப் பேசுகிறார் துன்பெர்க். இவரது தந்தை புகழ்பெற்ற நடிகர் எழுத்தாளர் ஸ்வெந்தா துன்பெர்க், தாய் பிரபலமான ஓபரா பாடகி. துன்பெர்க் பெரியளவு யாரையும் கவனம் ஈர்க்கும் சிறப்புகளைக் கொண்டவர் அல்ல. காலையில் ஆற

தூகு எனும் கொடிய வழக்கம்!

படம்
ozy.com நீங்கள் திருமணம் செய்வது சிறப்பான விஷயம். ஆனால் உங்கள் சொந்த கிராமத்தினருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தபின்தான் உங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? 2016 ஆம் ஆண்டு புத்து நாக் என்பவர், நிகிதா சின்கா, என்ற சமூக செயற்பாட்டாளரை அணுகினார். ஒரே கோரிக்கைதான். இந்தியர்கள் வேறு என்ன கோரிக்கை வைப்பார்கள். நான் லவ் பண்ணுகிற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றுதான். அப்புறம்தான் அவரின் பெற்றோரிடம் பேசினார் சிங். ஆனால் அவர்கள் கல்யாணமெல்லாம் பண்ண முடியாது மேடம் என்று சொல்லி விட்டனர். நிகிதா சின்கா அப்புறம் ஃபிளாஷ்பேக்கை கேட்டு ஷாக்கானார். கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கேட்டவர் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார். பத்து வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. இதற்கு பெயர் தூகு(dhuku). பழங்குடிகளின் சமூகமான நாக், கல்யாணம் செய்தால் கட்டாயமாக முழு கிராமத்திற்கும் சோறு போட்டு விருந்து வைத்தே ஆக வேண்டும். பட்ஜெட் பத்மநாபனாக காசு இல்லையே என கையைப் பிசைந்தால் கல்யாணம் கிடையாது. பட் ஒண்ணாக வாழ தடையில்லை. இவர்களை கிராமத்தில் தூகு என்று குறிப