தூகு எனும் கொடிய வழக்கம்!
ozy.com |
நீங்கள் திருமணம் செய்வது சிறப்பான விஷயம். ஆனால் உங்கள் சொந்த கிராமத்தினருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தபின்தான் உங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்?
2016 ஆம் ஆண்டு புத்து நாக் என்பவர், நிகிதா சின்கா, என்ற சமூக செயற்பாட்டாளரை அணுகினார். ஒரே கோரிக்கைதான். இந்தியர்கள் வேறு என்ன கோரிக்கை வைப்பார்கள். நான் லவ் பண்ணுகிற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றுதான். அப்புறம்தான் அவரின் பெற்றோரிடம் பேசினார் சிங். ஆனால் அவர்கள் கல்யாணமெல்லாம் பண்ண முடியாது மேடம் என்று சொல்லி விட்டனர்.
நிகிதா சின்கா |
அப்புறம் ஃபிளாஷ்பேக்கை கேட்டு ஷாக்கானார். கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கேட்டவர் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார். பத்து வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. இதற்கு பெயர் தூகு(dhuku). பழங்குடிகளின் சமூகமான நாக், கல்யாணம் செய்தால் கட்டாயமாக முழு கிராமத்திற்கும் சோறு போட்டு விருந்து வைத்தே ஆக வேண்டும். பட்ஜெட் பத்மநாபனாக காசு இல்லையே என கையைப் பிசைந்தால் கல்யாணம் கிடையாது. பட் ஒண்ணாக வாழ தடையில்லை. இவர்களை கிராமத்தில் தூகு என்று குறிப்பிடுகின்றனர்.
ஆண்களை தூகு என்றும் ஆண்களோடு வாழும் பெண்களை தூகுவா அல்லது தூகுனி(Dhukuni) என்றும் அழைக்கின்றனர். எங்கே நடக்கிறது இதுமாதிரி கூத்துகளெல்லாம் . நம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான்.
அதேசமயம் இப்படி வறுமையான நிலையில் திருமண அந்தஸ்து இன்றி, காதல் வாழ்க்கை வாழும் பெண்களை இப்பழங்குடிச் சமூகம் தூசாக கருதுகிறது. அதோடு இவர்களுக்கு முன்னோரின் சொத்து எதிலும் உரிமை கிடையாது. கணவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துபோனால், பெண்கள் குழந்தைகளோடு நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.
இதற்கு தீர்வாக, நிகிதா சின்கா, கண்டுபிடித்தது அரசியல்வாதிகள் பிறந்தநாளுக்கு ஏழைகளுக்கு மாஸாக கல்யாணம் பண்ணி சீர் கொடுக்கிறார்களே அதே ஐடியாதான்.
இருநூறு ஜோடிகளுக்கு இதுபோல திருமணம் செய்து வைத்து சமூக தடைகளை தகர்த்து எறிந்திருக்கிறார் நிகிதா. அதோடு ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள இப்பிரச்னைக்கு தீர்வு காண இன்றுவரையும் போராடி வருகிறார்.
திருமணமான பின்புதான் சமூகம் குறித்த கவனம் சின்காவுக்கு அதிகரித்திருக்கிறது. பிறகு 2009 ஆம் ஆண்டு நிமிட்டா என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்குகிறார். கடந்த ஜனவரியில் கூட 132 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தியுள்ளார்.
பழங்குடி தலைவர்களிடமிருந்து கடுமையான கொலைமிரட்டல்களை சின்கா சந்தித்து வருகிறார். ஆனாலும் அஞ்சாமல் பழங்குடி மக்களின் சிறுமை பழக்கங்களை கைவிடச்செய்ய செயல்பட்டு வருகிறார்.
நன்றி:Ozy