கருகுகிறது பிஸ்கட் துறை!
ஜிஎஸ்டி வரிகளால் கருகும் பிஸ்கட் துறை!
behance |
தற்போது பிஸ்கட் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாதாரண கம்பெனிகளல்ல. பிரிட்டானியா, பார்லே, ஐடிசி ஆகிய கம்பெனிகள். என்ன காரணம்? ஜிஎஸ்டிதான். இதனால் மாநிலங்களிலுள்ள சிறு சிறு பிஸ்கட் கம்பெனிகள் குறைந்த விலையில் பிஸ்கட்டுகளை கடைகளில் கிடைக்கச் செய்துவருகின்றனர். இதன் விளைவாக, இந்தியளவில் விற்பனை செய்துவரும் பார்லே பெரும் சரிவை சந்தித்துள்ளது. முதலிடத்தில் உள்ள பிரிட்டானியாவும் இதனை உணரத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் பிஸ்கட் சந்தையின் மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய். தற்போது ஏற்பட்டுள்ள சரிவு 350 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது பிஸ்கட்களுக்கு உள்ள வரி பதினெட்டு சதவீதம். இதனை 12 சதவீதமாக குறைக்க பிஸ்கட் நிறுவனங்கள் அரசை வற்புறுத்துகின்றன.
பிரிட்டானியா, பார்லே, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் மூன்றும் 69 சதவீத பங்குகளை கையில் வைத்துள்ளன.
நன்றி: எகனாமிக் டைம்ஸ்